தனக்குத் தானே எதிராக பிரிந்திருக்கும் ராஜ்ஜியம்

(A Kingdom Divided Against Itself)

நான் இஸ்லாம் பற்றிய தலைப்புக்களில் மேடையில் பேசும் போது, அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் கேள்வி இது தான்: ‘முஸ்லிம்கள் தங்களுக்குள் ஏன் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள்?’ ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை கொல்லாமல், அதாவது தீவிரவாத செயல்கள் நடக்காமல் சூரியன் மறைவதில்லை என்றுச் சொல்லும் அளவிற்கு, உலகில் அனுதினமும் ஏதோ ஒரு வடிவில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் மற்றவர்களையும் கொல்கிறார்கள். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் எப்படி மேற்கத்திய நாடுகளை வெறுக்கின்றவொ, அதைவிட அதிகமாக ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவுகளிடையே வெறுப்புணர்வு ஒவ்வொரு நாளும் வளர்ந்துக்கொண்டு வருகிறது. இவ்விரு பிரிவினருக்கு இடையேயுள்ள இந்த வெறுப்புணர்வு சமீபகாலமாக உருவான ஒன்றல்ல. இஸ்லாமின் வயதும் இவ்வெறுப்புணர்வின் வயதும் ஒன்று என்றுச் சொல்லலாம்.

ஷியா சன்னி பிரிவினர்களின் இந்த வெறுப்புணர்வு சண்டைகள் 7ம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்தே வந்துள்ளது. அதாவது இஸ்லாமிய நபி முஹம்மது, தனக்கு பிறகு யார் தலைமை பீடத்தில் உட்காரவேண்டும் என்று ஒரு நபரை நியமிக்காமல் திடீரென்று மரித்ததால், முஸ்லிம்களிடையே கலீஃபா (இஸ்லாமிய ஆட்சி மற்றும் ஆன்மீகத் தலைவர்) யார் என்ற முடிவு எடுப்பதில் கருத்துவேறுபாடு உண்டானது. சன்னி பிரிவினரின் படி, கலீஃபா என்பவரை அனைவரும் ஒன்றாக கலந்து ஆலோசித்து நியமிக்கவேண்டும். ஷயா பிரிவினரின் படி, முஹம்மதுவின் குடும்பத்திலிருந்து ஒருவர் தான் (இரத்தவழியில் வந்தவர்) தலைவராக இருக்கவேண்டும் என்பதாகும்.

கி.பி. 632ல் முஹம்மது மரித்த பிறகு, அவரின் நெருங்கிய தோழர் மற்றும் ஆலோசகர் அபூ பக்கர் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை ஷியா பிரிவு முஸ்லிம்கள் ‘சட்ட விரோதமானது’ என்று கருதினார்கள். ஷியா முஸ்லிம்களின் படி, முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, அவரின் நெருங்கிய உறவினரும், மருமகனுமான அலி தான் கலீஃபா பதவிக்கு தகுதியானவர் ஆவார்.

காலம் கடந்துச் சென்றது. முதல் மூன்று கலீஃபாக்கள் நியமிக்கப்பட்டவர்களாகவே பதவி வகித்தார்கள். கி.பி. 656ம் ஆண்டு அலி அவர்கள் கலீஃபாவாக பதவி ஏற்கும் வரை இந்த நிலை தொடர்ந்தது. முன்றாவது கலீஃபா உஸ்மான் அவர்கள் கொல்லப்பட்டார்கள், அதன் பிறகு அலி அவர்கள் நான்காவது கலீஃபாவாக பதவி ஏற்றார்கள். அலியின் ஆட்சி காலத்தில், முஸ்லிம்களிடையே உள்நாட்டு கலவரம் வெடித்து, இஸ்லாமிய சம்ராஜ்ஜியம் இரண்டு அரசுகளாக அதாவது சன்னி மற்றும் ஷியா இராஜ்ஜியங்களாக பிரிந்துவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரையும் இவ்விரு பிரிவினர் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பல நூற்றாண்டுகால இந்த சண்டையை தீரிவரப்படுத்தும்படியாக, இப்பிரிவினருக்கு இடையே இன்னும் பல வேற்றுமைகள் புதிதாக உருவானது. மேலும் இவர்களுக்குள் உருவான கிளை பிரிவு ஜாதிகளினால் அந்த வேற்றுமை மிகப்பெரிய பிம்பம் எடுத்தது. துரதிஷ்டவசமாக, இவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்றுச் சொல்லிக்கொண்டு, மற்றர்கள் தவறான வழியில் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ‘தங்கள் கருத்தை நிலைநாட்ட எதிராளியை கொன்றாலும் தவறு இல்லை’ என்ற நிலைக்கு வந்துள்ளார்கள். இதன் வெளிப்பாட்டைத் தான் நாம் அனுதினமும் செய்திகளில் வாசிக்கும் தற்கொலை வெடிக்குண்டு தாக்குதல்கள்.

Source: http://www.str.org/blog/kingdom-divided-against-itself

Author:  Alan Shlemon - A speaker for Stand to Reason

To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon

Translation: Answering Islam Tamil Team


ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்