இஸ்லாமிய அகராதி > ப வார்த்தைகள்

பூஜ்ஜியம் 

பூஜ்ஜியத்தை முதன் முதலில் கண்டுபிடித்தது அரபியர்கள் என்று சொல்லப்படுகின்றது. ஏனென்றால், முதலில் பூஜ்ஜியம் கி.பி. 662ம் ஆண்டு சிரியா மொழி நூல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரோமர்களும், கிரேக்கர்களும் தங்கள் எண்களில் பூஜ்ஜியத்தை பயன்படுத்துவதில்லை அல்லது அதுபோல ஒன்றை அவர்கள் பயன்படுத்தவில்லை. இதைப் பற்றி இன்னொரு விவரமும் உண்டு, அதாவது பூஜ்ஜியத்தை முதன் முதலில் இந்தியர்கள் தான் கண்டுபிடித்தார்கள் என்றும், அது அரபியர்கள் மூலமாக ஐரோப்பாவிற்கு பரவியது என்றும் சொல்லப்படுகின்றது. இன்னொரு வாதமும் உள்ளது, அதாவது இந்த பூஜ்ஜியத்தை அஸ்ஸீரியர்கள் தான் முதலில் கண்டுபிடித்தார்கள் ஆனால், அவர்களின் சாம்ராஜ்ஜியம் அழிக்கப்பட்டபோது அதோடு சேர்ந்து பூஜ்ஜியமும் அழிந்துவிட்டது. அதன் பிறகு பூஜ்ஜியத்தை கிரேக்கர்களும், அரபியர்களும் மறுபடியும் புதிதாக கண்டுபிடித்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.