அரபி குர்ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்?
Mis-Quotations in the Arabic Text of the Qur’an?
தொகுத்தவர் பேரி பீடர்ஸ்
இஸ்லாமியர்கள் அவ்வப்போது கேட்பார்கள்: "சுவிசேஷ நூல்கள் நான்கு இருக்கின்றன. இவைகளில் எது சரியானது?" இக்கேள்விக்கு பதில் கீழே தரப்படுகிறது.
குர்ஆனில் ஒரு சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் பல இடங்களில் மறுபதிவு Parallel Accounts) செய்யப்பட்டுள்ளது, அவைகளில் கீழ் கண்ட நிகழ்ச்சிகள் அடங்கும்:
• ஆதாமின் படைப்பு, முதல் பாவம் மற்றும் சாத்தானின் வீழ்ச்சி
2:30-39; 7:11-25; 15:28-43; 17:61-65; 18:50; 20:116-123; and 38:71-85),
• நோவாவின் கதை 7:59-64; 11:25-49; 23:23-30),
• ஆபிரகாமும் மற்றும் விக்கிர ஆராதனைக்காரர்களும் 21:51-71; 26:70-82; 29:16-18, 24,25; 37:83-98),
• லோத்துவின் கதை 11:77-83;15:61-75; 26:160-175; 27:54-58; 29:28-35),
• மோசேயின் குழந்தைப் பருவம் 20:38-40; 28:7,11-13),
• மோசேவும் எரியும் புதரும் 20:9 -24; 27:7-14; 28:29-35),
• மோசேவும், பார்வோனும் மற்றும் மந்திரக்காரர்களும் 7:103-126; 20:65-73; 26:41-68; 44:17-32; 79:15-26),
• இஸ்ரவேல் மக்களுக்கு அல்லாவின் கட்டளைகள் 2:58,59; 7:161-162),
• யோவான் ஸ்நானகனின் பிறப்பு 3:38-41; 19:1-15),
• இயேசுவின் பிறப்பு 3:42-48; 19:16-34).
மேலேயுள்ள நிகழ்ச்சிகளின் விவரங்களில் அனேக வித்தியாசங்கள் உண்டு, ஆனால், நாம் "நேரடி பேச்சில் உள்ள வித்தியாசத்தை மட்டுமே" கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.
ஒரே நிகழ்ச்சியில் வரும் "நேரடி பேச்சுக்களில்" உள்ள வித்தியாசங்கள்
Variant “direct speech” quotations from the same incidents:
கீழே தரப்பட்ட நிகழ்ச்சி விவரங்கள் "நடந்துவிட்ட நிகழ்ச்சியைப்" பற்றியது தான். அவைகள் ஒன்றுக்கொன்று தனித்தன்மை வாய்ந்த சரித்திர நிகழ்வுகளாகும் உதாரணத்திற்கு, அல்லா ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்திலிருந்து அனுப்பியது ஒருமுறைத் தான், அல்லா மோசேயை எரியும் புதரிடம் சந்தித்தது ஒரு முறை தான்...). ஆக என்ன நடந்தது என்பதற்கு? ஒரே ஒரு வாய்ப்பு தான் உண்டு. ஆனால், குர்ஆனில் உள்ள பல சூராக்களில், இருவருக்கும் அல்லது அனேகருக்கும் இடையே நடந்த பேச்சு உரையாடலை இரண்டு/மூன்று வித்தியாசமான முறையில் குர்ஆன் சொல்கிறது. இவைகள் அனைத்தும் "நேரடி உரையாடல் பேச்சுக்கள்-all ‘direct speech’ quotations" தான், இவைகள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குர்ஆனில் வித்தியாசமாக உள்ளது. உண்மையில் இந்த மேற்கோள்களில் பேசுபவர் "பேசிய வார்த்தைகள்" எது? அவைகளில் எந்த விவரம் சரியானது?
1) ஆதாமை உருவாக்கியதைப் பற்றி அல்லாஹ் பேசுகிறார்
15:28 | நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,38:71 | நபியே! நினைவு கூர்வீராக!) "நிச்சயமாக நாம் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்;
2) ஆதாமைப் பற்றி தூதர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை
2:34 ... "ஆதமுக்குப் பணி | ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது...15:29 ..., "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை | நினைவு கூர்வீராக)!
3) ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அல்லாஹ்வின் கட்டளைகள்
2:35 மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; | அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.7:19 | பின்பு இறைவன் ஆதமை நோக்கி;) "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை மட்டும்) நெருங்காதீர்கள்; அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்" என்று அல்லாஹ் கூறினான்).
4) ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டுகிறார்
7:24 | அதற்கு இறைவன், "இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" என்று கூறினான்.20:123 "இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க | ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவேயிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.
5) நோவா தன் மக்களுடன் பேசும் விவரங்கள்
7:59 நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் | தம் கூட்டத்தாரிடம்), "என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.11:25-26 நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் | அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்." "நீங்கள் அல்லாஹ்வை அன்றி வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சகிறேன்" என்று கூறினார்).
6) நோவாவிற்கு அல்லாவின் கட்டளைகள்
11:37 "நம் பார்வையில் நம் | வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்."23:27 அதற்கு, "நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடம்பத்தினரில் எவர் மீது நம் | தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும் அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்" என்று அவருக்கு நாம் அறிவித்தோம்.
7) ஆபிரகாம் தன் தந்தையிடமும், தன் மக்களிடமும் கேள்வி கேட்கிறார்
21:52 அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் "நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?" என்று கேட்ட போது | 26:70 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி "நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டபோது, | 37:85 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது, |
8) ஆபிரகாமிடம் அவ்வூர் மக்கள் தங்கள் விக்கிர ஆராதனைப் பற்றி நியாயப்படுத்துகிறார்கள்
21:53 அவர்கள், "எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். | 26:74 | அப்போது அவர்கள்) "இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்" என்று கூறினார்கள்.
9) லோத்துவிற்கு தூதர்களின் கட்டளைகள்
11:81 | விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்; "மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?"15:65 ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் | அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ த் தூது)வர்கள் கூறினார்கள்.
10) மோசே எரியும் புதரைக் காண்கிறார்
20:10 அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் | இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்" என்று கூறினார்).27:7 மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி; "நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து | நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்" என்று கூறியதை நபியே!) நினைவு கூர்வீராக!28:29 ஆகவே மூஸா | தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்" என்று கூறினார்.
11) எரியும் புதரிலிந்து அல்லாஹ் மோசேயிடம் பேசுகிறார்
27:9 "மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! | யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.27:10 "உம் கைத்தடியைக் கீழே எறியும்;" | அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது அதனை விட்டு) ஓடலானார் "மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்."
12) வெண்குஷ்ட கைப் பற்றி அல்லாஹ் மோசேயிடம் விவரிக்கிறார்
20:22 "இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி | வெளியில்) எடும், அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும், இது மற்றோர் அத்தாட்சியாகும்.27:12 'இன்னும் உம்முடைய கையை உமது | மார்புபக்கமாக) சட்டைப் பையில் நுழையப்பீராக!' அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.28:32 உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும் , அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்" | என்றும் அவருக்கு கூறப்பட்டது).
13) மோசேயிடம் சவால் விட்ட சூனியக்காரர்கள்
7:115 "மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?" என்று | சூனியக்காரர்கள்) கேட்டனர்.20:65 "மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?" என்று | சூனியக்காரர்) கேட்டனர்.
14) சூனியக்காரர்களின் மனம் வருந்துதல்
7:120-122 அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து "அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; "அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்" என்று கூறினார்கள். | 20:70 | மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - "ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்" என்று கூறினார்கள்.
15) சூனியக்காரர்களுக்கு பார்வோனின் மிரட்டல்
7:123 அதற்கு ஃபிர்அவ்ன் | அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!20:71 "நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் | போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று ஃபிர்அவ்ன்) கூறினான்.
16) மோசேவிற்கு அல்லாஹ்வின் கட்டளைகள்
26:52 மேலும், "நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்" என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். | 44:23 "என் அடியார்களை | அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்" என்று இறைவன் கூறினான்.)
17) இஸ்ரேல் மக்களுக்கு கட்டளைகள்
2:58 இன்னும் | நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' -"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்;மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.7:161 இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் | நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு அதன்) வாயிலில் பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம்.நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது.
18) ஸமுது கூட்டத்தாரை ஸாலிஹ் எச்சரிக்கிறார்
7:73 ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை | நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்.11:64 "அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய | ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்).26:154-155 அவர் சொன்னார்; "இதோ | அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! கிணற்றிலிருந்து) அதற்கு ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்." "இன்னும், அ வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்."
19) தேவ தூதரிடம் ஜகரியா பேசுகிறார்
3:40 அவர் கூறினார்; "என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி | முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;" அதற்கு இறைவன்), "அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்" என்று கூறினான்.19:8 | அதற்கு அவர்) "என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?" எனக் கூறினார்.
20) ஜகரியாவிடம் தேவதூதர் பேசுகிறார்
3:41 "என் இறைவனே! | இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!" என்று ஜகரிய்யா) கேட்டார். அதற்கு இறைவன்), "உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!" என்று கூறினான்.19:10 | அதற்கவர்) "என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை இதற்காக) ஏற்படுத்துவாயாக!" என்று வேண்டினார்; "நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்" என்று கூறினான்.
21) இயேசுவின் பிறப்பு அறிவிப்பின் போது மரியாளின் கேள்வி
கீழ்கண்ட வசனங்களில் ஆங்கில வார்த்தைகளை நாம் இட்டுள்ளோம்)
3:47 | அச்சமயம் மர்யம்) கூறினார்; "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் Walad) உண்டாக முடியும்?" அதற்கு) அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது."19:20 அதற்கு அவர் | மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் Ghulam) உண்டாக முடியும்?" என்று கூறினார்.
22) மக்கா மக்களிடம் என்ன சொல்லவேண்டுமென்று முஹம்மதுவிற்கு அல்லாஹ்வின் கட்டளைகள்
35:40 "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? 'அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?' எனபதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் | படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?" என்று நபியே!) நீர் கேட்பீராக அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை" என்று நபியே! நீர் கூறும்).46:4 "நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது | முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று நபியே!) நீர் கூறுவீராக.
ஆங்கில மூலம்: Mis-Quotations in the Arabic Text of the Qur’an?
குர்ஆன் பற்றிய கட்டுரைகள்
பேரி பீடர்ஸ் அவர்களின் கட்டுரைகள்