அனைத்து முஸ்லிம்களுக்கு வெளிப்படையான சவால்

Open Challenge to All Muslims

சாம் ஷமான்

கிறிஸ்தவர்களிடம் இஸ்லாமியர்கள் இடும் பொதுவான சவால் என்னவென்றால், 'பரிசுத்த பைபிளிலிருந்து "நான் தேவன்" (அ) "என்னை தொழுதுக்கொள்ளுங்கள் " என்ற சொற்றொடர்களை இயேசு சொன்னதாக காட்டமுடியுமா?' என்பதாகும். "இந்த வார்த்தைகளை அப்படியே இயேசு சொல்லவில்லை என்று நிருபனமாகிவிட்டால், இயேசு தேவனில்லை என்பதும் நிருபனமாகிவிடும்" என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள் இதனால் தான் இப்படி சவால் விடுகிறார்கள். இன்று இஸ்லாமியர்கள் கூறும் இந்த வார்த்தைகளை "அன்று" இயேசு அப்படியே சொல்லி தன் தெய்வீகத் தன்மையை நிருபித்து இருக்கவேண்டும் என்று இஸ்லாமியர்கள் விரும்புகிறார்கள். இப்படி இயேசு கூறவில்லையானால், அவரை நாங்கள் நம்பமுடியாது அல்லது "தன்னை தேவன்" என்று இயேசு சொல்லியிருக்கமாட்டார் என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிகிறார்கள்.

இயேசுவை தங்கள் கண்களால் கண்ட சாட்சிகள் (சீடர்கள்), இயேசுவின் தெய்வீகத் தன்மையை நிருபிக்கும் வசனங்களை புதிய ஏற்பாட்டில் சொல்லியிருக்கிறார்கள். இந்த புதிய ஏற்பாட்டு வசனங்களை இயேசுவின் தெய்வீகத் தன்மையை நிருபிப்பதற்கு கிறிஸ்தவர்கள் மேற்கோள் காட்டும் போது, இஸ்லாமியர்கள் அவைகளை மறுத்துவிடுகிறார்கள், இந்த வார்த்தைகள் "இயேசு தம் வாயிலிருந்து சொன்னவைகள் அல்ல " என்றும், புதிய ஏற்பாட்டு வசனங்கள் அதனை எழுதிய சீடர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் சொல்லி புறக்கணித்துவிடுகிறார்கள்.

முஸ்லிம்களின் இந்த மேற்கண்ட வாதங்களினால் ஒரு நன்மையும் இல்லை. புதிய ஏற்பாடு வெளிப்படுத்தும் இயேசுவின் குமாரத்துவத்தின் தெய்வீகத் தன்மையை இஸ்லாமியர்களின் மேற்கண்ட வாதம் மட்டுப்படுத்தாது என்பதை

கீழ்கண்ட சவால்களை நாம் இஸ்லாமியர்களின் முன் வைத்து சவாலிடுகிறோம்.

1. இயேசு தம்முடைய வாயிலிருந்து கீழ்கண்ட விவரங்களை "அப்படியே" சொல்லியதாக, குர்‍ஆனிலிருந்து வசனங்களைக் காட்டுங்கள்.

அ) நான் இறைவனில்லை (I am not God)

ஆ) நான் தேவகுமாரனில்லை (I am not the Son of God)

இ) நான் உங்கள் பாவங்களுக்காக மரிக்க வரவில்லை (I did not come to die for your sins)

ஈ) நான் மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள் உயிரோடு எழும்புவதற்காக வரவில்லை (I did not come to rise from the dead on the third day)

"இயேசு இறைவனில்லை" அல்லது "இயேசு இறைக் குமாரனில்லை" என்று குர்‍ஆனின் ஆசிரியர் சொன்ன வசனங்களை இதற்கு பதிலாக நீங்கள் வைத்தால், அது "என்னுடைய மேற்கண்ட சவாலுக்கு பதிலாக" அமையாது. ஏனென்றால், நீங்கள் காட்டும் வசனங்கள் "இயேசு சுயமாக சொன்னவைகள் அல்ல" அவைகள் "குர்‍ஆனை எழுதிய எழுத்தாளனின் சொந்த கருத்துக்களாகும் ".

மேற்கண்ட சவாலை சந்திக்க இஸ்லாமியர்களால் முடியவில்லையானால், அதன் அர்த்தமென்ன? இயேசுவின் தெய்வீகத்தன்மையை குர்‍ஆன் மறுக்கவில்லை என்பதாகும். ஏனென்றால், இயேசு சுயமாக தம்முடைய வாயிலிருந்து "நான் இறைவன் இல்லை", "நான் இறைக் குமாரன் இல்லை" என்று சொல்லிய‌ வார்த்தைகளை அப்படியே குர்‍ஆன் கொண்டிருக்கவில்லை, ஆகவே, இயேசுவின் தெய்வீகத்தன்மையை குர்‍ஆன் மறுக்கவில்லை என்பது நிருபனமாகும்.

2) இஸ்லாமியர்களே, நீங்கள் காட்டப்போகும் இயேசு சொன்னதாக வரும் வாக்கியங்களை இயேசு பேசிய மூல மொழியில் காட்டவேண்டும்.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது பேசிய "அராமிக்" மொழியில் நீங்கள் அவ்வாக்கியங்களை காட்டவேண்டும். இயேசு பேசியதாகச் சொல்லி, அரபியில் சில வார்த்தைகளை காட்டினால் அதனை நாங்கள் அங்கீகரிக்கமுடியாது, ஏனென்றால், இயேசு வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு போதும் அரபி பேசவில்லை, முக்கியமாக குர்‍ஆனிய அரபியை அதாவது குரைஷி வழக்க அரபியை அவர் பேசியதில்லை . இந்த குரைஷி வழக்கத்தின் படியுள்ள அரபியில் குர்‍ஆன் இறக்கியதாக கூறப்படுகிறது. ஆகவே, இந்த குரைஷி வழக்க அரபியை இயேசு பேசவில்லை.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4987

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி)அவர்களை,(இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.

எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள்.

இஸ்லாமிய அறிஞர்களின் வார்த்தைகளில் உள்ள முரண்பாட்டை நாம் மேற்கண்ட விவரங்கள் மூலமாக வெளிக்காட்டுவதோடு மட்டும் அல்லாமல், கீழ்கண்ட விவரங்களையும் தெளிவாக்க விரும்புகிறோம்: குர்‍ஆனுக்கு இயேசுவின் தெய்வத்தன்மையை மறுக்க, இயேசுவின் வாயிலிருந்து "நான் இறைவனில்லை" என்ற வார்த்தைகள் தேவைப்படாத போது, இயேசுவின் தெய்வத்தன்மையை நிருபிக்க புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இயேசு "நான் இறைவன்" அல்லது "என்னை தொழுதுக்கொள்ளுங்கள்" என்ற நேரடி வார்த்தைகள் தேவையில்லை என்பது திண்ணம். (Just as the Quran can deny Jesus being God without needing to put words in his mouth to do so, in a similar manner the NT writers could (and actually do) affirm the Deity of Christ without having to quote Jesus as saying the words, "I am God" or "Worship me".)


சமீப காலத்தில், என்னுடைய சவாலை சந்திக்கும் படி, பிஸ்மிகா அல்லாஹும்மா" தளத்தின் ஆசிரியராகிய "புரோ பாஸ்" என்பவர் ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதினார். அவரது மறுப்பில் உள்ள ஒரு வேடிக்கை என்னவென்றால், என்னுடைய சவாலை சந்திப்பதற்கு பதிலாக, நான் கூறியவைகள் சரியான சவால்கள் அல்ல என்று நிருப்பிக்க எனக்கு சவால் எழுப்பியுள்ளார்.

அவருடைய வாதங்களில் உள்ள மடமையை வாசகர்கள் கவனிக்கவும். அதாவது என்னுடைய சவால்களின் முக்கிய நோக்கமே, "இயேசுவின் தெய்வீகத் தன்மைக்கு மறுப்பதற்கு இஸ்லாமியர்கள் முன்வைக்கும் அந்த சவால்கள் மடமையானது, பயனற்றது" என்பதை நிருபிக்கவாகும். இவரோ என் சவால் அனைத்தையும் விட்டுவிட்டார். இது எதனை நிருபிக்கிறது என்றால், என்னுடைய சவால்களை இவர்களால் சந்திக்கமுடியாது, இதனை அவர் மறைமுகமாக அங்கீகரித்துவிட்டார். இஸ்லாமியர்களின் சவாலுக்கு ஏற்பட்ட பாதிப்பை கொஞ்சம் குறைப்பதற்காக எனக்கு அவர் சவால் விடுகிறார். ம‌ட்டும‌ல்ல‌, இப்ப‌டி இஸ்லாமை காப்பாற்ற‌ நினைத்து, இஸ்ல‌மிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாத‌ங்க‌ளில் நேர்மைய‌ற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌தை நிருபித்துவிட்டார் ம‌ற்றும் இஸ்லாமிய‌ர்க‌ளின் வாத‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் குர்‍ஆன் ம‌ற்றும் இஸ்லாமுக்கு எதிராக‌வே மாறிவிடுகிறது என்பதை மறைமுகமாக அங்கீகரித்துள்ளார்.

எனினும், என் சவால்களுக்கு பதில் தருவதாக நினைத்து, அந்த இஸ்லாமிய சகோதரர் "பிரோ பாஸ்" மேற்கோள் காட்டிய குர்‍ஆன் 5:116,117ம் வசனங்கள் மிகவும் வேடிக்கையானவைகள், அவைகளை இப்போது படித்து, அதற்கு என் மறுப்பை பார்ப்போம்

இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார். (5:116) "நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்); (5:117)

ஆக, அடிப்படையிலேயே, அந்த மிஷனரி நிற்பதற்கு அவருக்கு இடமில்லாமல் போய்விட்டது, அதாவது இயேசு தான் இறைவன் இல்லை என்ற வார்த்தைகள் நமக்கு குர்‍ஆனில் கிடைத்துவிட்டது

என்னுடைய சவால்களில் ஒன்றையும் மேற்கண்ட வசனங்கள் சந்திக்கவில்லை என்பதற்கு அனேக பதில்களைத் தரலாம். முதலாவதாக, நான் முஸ்லிம்களுக்கு இப்படி சவால் இடவில்லை, அதாவது, "அல்லாஹ்விற்கு அடுத்து இன்னொரு இறைவனாக என்னை ஆக்கிக்கொள்ளுங்கள்" என்பதை இயேசு மறுக்கும் படி நான் உங்களுக்கு சவால் இடவில்லை. மேற்கண்ட வசனம் இதனைத் தான் சொல்கிறது. இன்னொரு முறை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் இயேசுவிடம் என்ன கேட்கிறார் என்பதை கவனியுங்கள்:

And when Allah saith: O Jesus, son of Mary! Didst thou say unto mankind: Take me and my mother for TWO GODS BESIDE Allah (ilahayni min dooni Allahi)? ... S. 5:116 Pickthall

இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது …(5:116)

(ilahayni min dooni Allahi)

புதிய ஏற்பாடோ அல்லது இதர கிறிஸ்தவ சரித்திர ஆதாரங்களோ , "அல்லாஹ் முதல் தெய்வமென்றும், இயேசு மற்றும் அவரின் தாய் மற்ற இரு தெய்வங்களாகவோ" எப்போதும் கூறியதில்லை. மேற்கண்ட வசனம் என்னுடைய சவாலை சந்திக்க தவறிவிட்டது என்பதை மட்டும் காட்டவில்லை, இன்னும் எப்படி குர்‍ஆன் கிறிஸ்தவ சரித்திர கோட்பாடுகளை புரட்டுகிறது என்பதையும் காட்டுகிறது. எப்படி இஸ்லாமியர்கள் அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக இயேசு இருக்கிறார் என்ற கோட்பாட்டை எதிர்க்கிறார்களோ அதே போல், கிறிஸ்தவர்களும் இயேசுவின் தாய் அவருக்கு இணையாக தெய்வம் என்ற இஸ்லாம் சொல்லும் கோட்பாட்டை எதிர்க்கிறார்கள்.

இரண்டாவதாக, மேற்கண்ட குர்‍ஆன் வசனம், இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் பேசியதாக உள்ள வார்த்தைகள் அல்ல. எதிர் காலத்தில் கடைசி நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவும் அல்லாஹ்வும் பேசப்போவதாக உள்ள ஒரு கற்பனையே அல்லாமல் வேறு இல்லை. இவ்வசனங்களில் இயேசு தன் போதனைப் பற்றி பேசுவதாக இருந்தாலும், அது இயேசு வாழ்ந்த காலத்தில் அவர் நேரடியாக பேசிய வார்த்தைகள் அல்ல. (என்னுடைய சவால் அவர் உலகத்தில் வாழ்ந்த காலத்தில் "நான் இறைவன் இல்லை" என்று இயேசு பேசியதாக குர்‍ஆனில் காட்டமுடியுமா என்பது தான்).

மூன்றாவதாக, இஸ்லாமியர்கள் சொல்லுகின்ற படி, "இயேசு எதிர்காலத்தில் சொர்க்கத்தில் பேசியதாக உள்ள வார்த்தைகள் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றுச் சொன்னால்", நம்முடைய புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய "வெளிப்படுத்தின விசேஷத்தில்" இயேசு நேரடியாக கூறியவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். அவர் உலகில் வாழ்ந்த காலத்தில் சொன்ன வார்த்தைகள் அடங்கிய சுவிசேஷங்கள் மட்டுமல்ல, வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள வசனங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும். வெளிப்படுத்தின விசேஷத்தின் வார்த்தைகள் அனைத்தும் நேரடியாக கிரேக்க மொழியில் (அராமிக் மொழியில் அல்ல) யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட வசனங்களாகும்.

இஸ்லாமியர் ”பிரோ பாஸ்” மேலும் ஒரு சுயாரசியமான விஷயத்தை கூறுகிறார்:

“… ’தான் இறைவன் இல்லை’ என்று இயேசு கூறியதாக குர்-ஆன் தன் சொந்த வார்த்தைகளில் கூறுகிறது. மேலும் இயேசு தேவகுமாரன் இல்லை என்று குர்-ஆனும் கூறுகிறது, ஆனால் அதனை அரபி மொழியில் கூறுகிறது. ஏனென்றால், குர்-ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டது, ஒரு அரபி பேசும் நபிக்கு இறக்கப்பட்டது என்று குர்-ஆனே சாட்சி கொடுக்கிறது. குர்-ஆன் அரபியில் இல்லாமல் வேறு மொழியில் வந்திருந்த்தால், அந்த அரபி பேசும் மக்கள் தங்களுக்கு குர்-ஆன் புரியவில்லை என்று குறை கூறுவார்கள்.”

ஆக, இயேசுவின் வார்த்தைகளை அரபி மொழியில் மாற்றி கூறுவது என்பது குர்-ஆனுக்கு பிரச்சனை இல்லை மேலும் இயேசு ”தான் இறைவன் இல்லை” என்று கூறியதாக குர்-ஆன் கூறினாலும், அது சரியான ஆதாரமாக இருக்கும் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். ஆனால், இயேசு ”தான் தனி சிறப்பு மிக்க தேவகுமாரன் என்றும், தான் தேவன் என்றும் கூறியதை” புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் கூறினால் அதை இஸ்லாமியர்கள் அங்கீகரிப்பதில்லை. அதாவது இயேசு தம்முடைய தாய் மொழியில் கூறியதை மட்டுமே நாம் அங்கீகரிப்போம், கிரேக்க மொழியில் அதனை புதிய ஏற்பாடு தெரிவித்தால், அது ஆதாரமாக கருதப்படாது என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், தங்கள் குர்-ஆன் மட்டும் இயேசுவின் தாய் மொழியில் அல்லாமல் அரபியில் இயேசு கூறியதாகச் சொன்னால், அதுமட்டும் ஆதாரமாக கருதப்படும் என்று வாதிப்பார்கள்.

முடிவுரையாக, இந்த இஸ்லாமியர் கூறிய ஒரு வாக்கியத்தை அப்படியே இங்கு குறிப்பிட்டு முடிக்கிறோம். ஏனென்றால், அதனைத் தான் நாம் கூற முனைந்துள்ளோம், அதனையே அவர் கூறியுள்ளார்.

It is obvious, however, that his demands are as preposterous as it is stupid .

இப்படி இயேசு கூறியிருக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்ப்பது, அடிமுட்டாள் தனமானது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

இதனை நாங்கள் முழுவதுமாக அங்கீகரிக்கிறோம். அதாவது முஸ்லிம்களின் வாதங்கள் அடிமுட்டாள்தனமாக உள்ளது என்பதை அங்கீகரிக்கிறோம். இதைவிட அதிக அழுத்தமாக எங்களால் சொல்லியிருக்கமுடியாது. என்னுடைய கட்டுரையை நான் எந்த நோக்கத்திற்காக எழுதினேனோ மற்றும் ஏன் இஸ்லாமியர்களுக்கு சவால் விட்டேனோ, அந்த நோக்கத்தை சரி என்று நிருபிக்கும் வண்ணம் எப்படி இந்த இஸ்லாமியர் தன்னுடைய கட்டுரையின் கடைசியில் ஒப்புக்கொண்டுள்ளார் பாருங்கள். ‘இஸ்லாமியர்கள் எவ்வளவு முட்டாள் தனமாக வாதிக்கிறார்கள் மற்றும் எவ்வளவு நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்’ என்பதையே இது காட்டுகிறது.

ஆங்கில மூலம்: Open Challenge to All Muslims

சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்