குர்-ஆன் மற்றும் சுன்னாவின் படி இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி வாழ்த்துக்கள் கூறுவது?

ஆசிரியர்கள்: சாம் ஷமான் & யோகன் கட்ஜ்

மக்கள் சந்தித்திக்கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவர் எப்படி வாழ்த்துக்கள் கூறவேண்டும் என்று குர்-ஆன் போதிக்கின்றது:

குர்-ஆன் 4:86

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இப்னு அப்பாஸ் அவர்கள் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் எப்படி யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மெஜியன்களுக்கும் வாழ்த்துக்கள் கூறவேண்டும் என்றுச் சொல்கிறார்:

107. இப்னு அப்பாஸ் கூறியதாவது: உங்களுக்கு யார் வாழ்த்துக்கள் சொன்னாலும், அவர்கள் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, அல்லது மேஜியன்களாகவோ இருந்தாலும் சரி, அவர்களுக்கு திருப்பி வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். ஏனென்றால், அல்லாஹ் இப்படியாக கூறியுள்ளார், "உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். . . "(Al-Adab al-Mufrad Al-Bukhari (Muslim Morals and Manners), XDIII. The People of the Book; online source; bold and underline emphasis ours)

ஆனால், முஹம்மது  இப்னு அப்பாஸ் சொன்னதற்கு எதிராகவும், குர்-ஆனுக்கு முரண்பட்டும் போதித்துள்ளார்.

1102. அபூ பஸ்ரா அல் ஜிஃபாரி இறைத்தூதர்(ஸல்) சொன்னதாக அறிவித்ததாவது:

"நான் நாளைக்கு யூதர்களிடம் செல்லப்போகிறேன். நீங்கள் யூதர்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள் கூறாதீர்கள். அவர்கள் உங்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள்  கூறினால், அப்போது நீங்கள் "உங்களுக்கும்" என்று திருப்பிச் சொல்லுங்கள் என்றார்".

1103: இறைத்தூதர் (ஸல்) சொன்னதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "வேதமுடையவர்களுக்கு முதலாவது வாழ்த்துதல்களை கூறாதீர்கள். அவர்களை சாலைகளில் சந்திக்கும்போது அவர்கள் நெருக்கமான வழியாக செல்ல கட்டாயப்படுத்துங்கள்"

138: தலைப்பு: இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள் முதலாவது வாழ்த்துக்கள் கூறுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு திருப்பி வாழ்த்து கூறுவது எப்படி?  ஒரு கூட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் இருந்தால் எப்படி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவது?

866. அல்லாஹ்வின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா அறிவித்ததாவது, "யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு முதலாவதாக வாழ்த்துக்கள் கூற முயலாதீர்கள். இவர்களை நீங்கள் சாலைகளில் சந்தித்தால், சாலையின் நெருக்கமான வழியாக செல்ல வற்புறுத்துங்கள்" [முஸ்லிம்]

867. அல்லாஹ்வின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் அவர்கள் அறிவித்ததாவது, "வேதமுடையவர்கள் உங்களுக்கு வாழ்த்துதல்கள் கூறும்போது, அவர்களுக்கு "உங்களுக்கும்" என்று திருப்பிச்  சொல்லுங்கள்.

868. உஸாமா அறிவித்ததாவது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தை கடந்துச் சென்றுக்கொண்டு இருந்தார். இந்த கூட்டத்தில் முஸ்லிம்கள், விக்கிர ஆராதனைக்காரர்கள் மற்றும் யூதர்களும் இருந்தார்கள். இவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்த்துதல்களைச் சொன்னார்கள். (ரியாத் அஸ்ஸலிஹின் - Riyad as-Salihin (The Meadows of the Righteous); source

மேலே கண்ட ரியாத் 866ம் ஹதிஸ் பற்றி "ஸலஃபி" பிரிவினர் கீழ்கண்டவாறு விரிவுரை கூறுகின்றனர்:

விரிவுரை: முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத மக்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள் கூறக்கூடாது என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. மேலும் இந்த ஹதீஸின் படி, ஒரு சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, அந்த சாலை மக்களால் நிரம்பியிருக்கும் போது, முஸ்லிம்கள் சாலையின் மத்தியில் செல்லவேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் சாலையின் ஓரமாக செல்ல வற்புறுத்தப்படவேண்டும். இந்த ஹதீஸ் முஸ்லிம்களின் மேன்மையை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது, அதே நேரத்தில் இஸ்லாமியரல்லாதவர்கள் பெறவேண்டிய மரியாதைக் குறைவையும், அவர்கள் அடையவேண்டிய கீழ்தரமான நிலையையும் காட்டுகின்றது. (Riyad-us-Saliheen, compiled by Al-Imam Abu Zakariya Yahya bin Sharaf An-Nawawi Ad-Dimashqi, commentary by Hafiz Salahuddin Yusuf, revised by M.R. Murad [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, Lahore, First Edition: June 1999], Five. The Book of Greetings, Chapter 138: Greeting the non-Muslims and Prohibition of taking an Initiative, Volume 2, p. 711; online source; italic and underline emphasis ours)

இந்த வாழ்த்துதல்கள் பற்றி "இரு ஜலால்கள்" எப்படி விரிவுரை கூறியுள்ளார்கள் என்பதைக் காணலாம் - குர்-ஆன் 4:86.

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். ஒருவர் உங்களிடம் "உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக" என்று வாழ்த்துக்கள் கூறினால், அவருக்கு பதிலாக "உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும் மற்றும் அல்லாஹ்வின் ஆசி உங்களுக்கு உண்டாகட்டும்" என்றுச் அதிக படியாச் சொல்லுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். இப்படி வாழ்த்துக்கள் கூறுவது சிறந்தது.

இந்த ஹதீஸின் படி, ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமல்லாதவருக்கு, தீய மனிதனுக்கு,  வாழ்த்துதல்களை முதலாவது சொல்லக்கூடாது என்பதாகும். இதுமட்டுமல்ல, ஒரு மனிதன் இயற்க்கை கடனைதீர்த்துக்கொண்டு இருக்கும் போதோ, குளித்துக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டோ இருக்கும்போது அவருக்கு வாழ்த்துதல்கள் சொல்லக்கூடாது. ஒரு முஸ்லிமல்லாதவர் உங்களிடம் "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொன்னால், அவருக்கு பிரதியுத்தரமாக "உங்களுக்கும் உண்டாகட்டும்" என்றுச் சொல்லுங்கள் (Tafsir al-Jalalayn; source)

ஒருவர் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறும்போது, அதைப்போலவோ, அதைவிட சிறந்ததையோ வாழ்த்துதலாக கூறக்கூடாது என்று முஹம்மது போதனை செய்துள்ளார். இதே போல, இன்னொரு இஸ்லாமியர் குர்-ஆன் சொன்னதற்கு எதிராக போதனை செய்துள்ளேன்.

1115. அப்துர்ரஹ்மான் கூறினார்: இப்னு உமரை கடந்து ஒரு கிறிஸ்தவர் செல்லும் போது, அவருக்கு வாழ்த்துதல்களைக் கூறினார், உடனே இப்னு உமரும் அந்த கிறிஸ்தவருக்கு திருப்பி வாழ்த்துக்களைச் சொன்னார். அதன் பிறகு இப்னு உமருக்கு "அந்த நபர் ஒரு கிறிஸ்தவர்" என்று அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த உடன் இப்னு உமர் உடனே அந்த கிறிஸ்தவரிடம் சென்று "நான் சொன்ன வாழ்த்துதல்களை எனக்கு திருப்பித் தந்துவிடு" என்று கேட்டார். (Al-Adab al-Mufrad Al-Bukhari, XDIII. The People of the Book; bold and underline emphasis ours)

இதுவரை நாம் கண்ட ஸஹியான (உண்மையான) ஹதீஸ்கள் குர்-ஆனுடைய போதனைக்கு எதிராக போதிப்பதைக் காணமுடியும்.

 "யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள் கூறாதீர்கள்" என்று முஹம்மது சொன்னது கீழ்தரமானதாகும். முஸ்லிம்கள் எப்படி தங்களுக்குள் வாழ்த்துக்கள் கூறினார்கள் என்பதைப் பற்றி சில ஹதீஸ்களை இப்போது காண்போம். 

447: வாத்துக்களை முதலாவது சொல்லுதல்:

3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். 

எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :4 Book :60

448. மக்களுக்கு வாழ்த்துக்களை சொல்லுதல்

980. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா அறிவித்ததாவது, "நீங்கள் நம்பிக்கையாளர் ஆகும் வரை அந்த தோட்டத்தில் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வரை, நீங்கள் நம்பிக்கையாளர் ஆகமாட்டீர்கள். ஒருவர் மீது இன்னொருவர் அன்பு கூறுவது எப்படி நடைப்பெறும் என்று நான் சொல்லட்டுமா?" ஆம், சொல்லுங்கள் இறைத்தூதரே என்று பதில் அளித்தார் ஹுரைரா. இறைத்துதர் "ஒருவரை ஒருவர் வாழ்த்துக்கள் கூறிக்கொள்வதை உங்களின் மத்தியில் ஒரு பொதுவான பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

449. முதலாவது வாழ்த்துக்கள் கூறுவது:

982. பஷீர் இப்னு யாசர் அறிவித்ததாவது "வாழ்த்துக்கள் கூறுவதில் யாரும் இப்னு உமரை முந்திக்கொள்ளமுடியாது"

983. ஜபீர் கூறினார், "ஒட்டகம்/குதிரையில் சவாரி செய்பவர், நடந்துக்கொண்டுச் செல்பவருக்கு சலாம் சொல்லவேண்டும். நடந்துக்கொண்டுச் செல்பவர் உட்கார்ந்து இருப்பவருக்கு சலாம் சொல்லவேண்டும். இரண்டு பேர் நடந்துச் செல்லும் போது, யார் முதலாவது சலாம் கூறுகிறாரோ அவர் தான் சிறந்தவர்."

984. இப்னு உமர் கூறியதாவது, அல் அகர் என்பவருக்கு பனு அமர் இப்னு அவ்ஃப்ஐ சார்ந்த ஒருவர் சிறிது பேரிச்சம் பழங்கள் கடன் இருந்தது.  அவர் சொன்னார், "நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன், அப்பொது அபூ பக்கர் சித்தீக் அவர்கள் எங்களோடு இருந்தார், அவர் தொடர்ந்து இவ்விதமாகச் சொன்னார், "நாங்கள் சந்திக்கும் அனைவரும் எங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள். அபூ பக்கர் "நாம் முதலில் வாழ்த்துக்கள் சொல்வதற்கு முன்பாக, மற்றவர்கள் நமக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டால், அவர்களுக்கு நன்மைகள் சென்றுவிடும் என்று உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள்.

985. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ அய்யுப் அறிவித்ததாவது, "ஒரு முஸ்லிம் தன்னை இன்னொரு முஸ்லிமோடு பிரிந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது, அவர்கள் இருவரும் சந்திக்கும் போது, ஒருவர் முகத்தை திருப்பிக்கொள்கிறார், இன்னொருவரும் அப்படியே செய்கிறார். இவர்களில் யார் முதலாவது சலாம் (வாழ்த்துக்கள்) சொல்கிறாரோ அவர் தான் சிறந்தவராவார்".

452. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சந்திக்கும் வேளையில் அவருக்கு வாழ்த்துதல்கள் (சலாம்) சொல்வது கடமையாகும்.

1240. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :2 Book :23

ஒருவர் இன்னொருவருக்கு சலாம் சொல்வது என்பது  ஒரு பொதுவான நற்காரியமானாலும், இது இன்னொரு நபரை நேசிப்பதையும், மதிப்பு செலுத்துவதையும் காட்டுகின்றது. ஆகையால், வேண்டுமென்றே இன்னொருவருக்கு வாழ்த்துக்கள் கூறாமல் இருப்பது என்பது வெறுப்புணர்வையும் மேலும் அவமதிப்பு செயலாகவும் இருக்கிறது.

ஆக, முஹம்மதுவின் சுன்னா(வார்த்தையும் செயலும்) பல வகைகளில் குர்-ஆனின் கட்டளைகளுக்கு எதிராக உள்ளது என்பதை காண்கிறோம்.

கடைசியாக, நாம் கவனிக்கின்ற ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், ஹதீஸ் 985ன் படி, ஒருவருக்கு இடையே மனஸ்தாபங்கள் இருக்கும் போது, யார் முதலாவது சென்று முதலில் வாழ்த்துக்கள் சொல்கிறாரோ அவரே சிறந்தவர் ஆவார். ஏனென்றால், அவனது ஆன்மீக நிலை மற்றவனைக் காட்டிலும் சிறந்ததாகவும், அவர் மார்க்க விஷயங்களில் முதிர்ச்சி அடைந்தவராகவும் இருக்கிறார் என்பதைக் காட்டுகின்றது. இஸ்லாமின் படி, யுதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்கள் முதலாவது வாழ்த்துக்கள் சொல்லக்கூடாது என்று முஹம்மது போதனை செய்வது என்பது நமக்கு எதைக் காட்டுகின்றது?  அதே போல அவர்கள் வாழ்த்துக்கள் முதலாவது சொல்லிவிட்டால், உங்களுக்கும் வாழ்த்துக்கள் என்று முஸ்லிம்கள் ஒரிரு வார்த்தைகளால் வாழ்த்துக்கள் திருப்பிச் சொல்வது எதனைக் காட்டுகின்றது?

முஸ்லிம்களுக்கு யூதர்களும், கிறிஸ்தவர்களும் முதலாவது வாழ்த்துக்கள் சொல்வது என்பது இவர்களின் ஆன்மீக முதிர்ச்சியையும், மேன்மையையும் காட்டுகின்றது. இந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஆன்மீக முதிர்ச்சி முஹம்மதுவின் ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என்பதை இதைக் காட்டுகின்றது. ஆக, வாழ்த்துக்கள் சொல்வதில் முஹம்மதுவை விட, உயர்ந்தவர்கள் சிறந்தவர்கள் யூதர்களே, கிறிஸ்தவர்களே ஆவார்கள்.

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Muhammad/Inconsistent/greeting_nonbelievers.html

சாம் ஷாமானின் இதர கட்டுரைகள்