ஸலாம் மற்றும் இஸ்லாம்: ஒரே வேர்ச்சொல்

முகமதுவின் கடிதங்களில் உள்ள வன்முறையைப் பற்றிய கட்டுரைகளுக்கு மேலதிக விவரங்களுக்காக இக்கட்டுரை பதிக்க‌ப்படுகிறது.

முந்தைய கட்டுரைகள்:

  1. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم) : அபூமுஹையும் மறைத்த விவரங்களும் 
  2. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்) 
  3. ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம்

செமிடிக் மொழிகளில்(Semitic Languages) ஒரு வேர் சொல்லின் இடையில் வித்தியாசமான உயிர் எழுத்துக்களை சொருகுவதால் பல வார்த்தைகளை உருவாக்க முடியும். உதாரணத்திற்கு மூன்று மெய் எழுத்துக்கள் கொண்ட ஒரு வேர்ச்சொல் பற்றி காண்போம். "SLM" என்பது ஒரு வேர்ச்சொல், இதனினின்று உருவானது தான் இந்த இரண்டு சொற்கள் "iSLaM" மற்றும் "SaLaM" என்பதாகும். இப்படி ஒரு வேர்ச்சொல் அல்லது மூல சொல்லிலிருந்து இரண்டு வார்த்தைகள் உருவானதால், இந்த இரண்டு வார்த்தைகளின் பொருளிலும் ஒற்றுமை இருக்குமா? 

ரோமானிய மற்றும் ஜெர்மனிய மொழிகளில், உயிரெழுத்துக்களை சொருகுவதால் அல்ல, அதற்கு பதிலாக ஒரு வேர் சொல்லின் முன்பும் அதன் பின்பும் (prefix or suffix) சில எழுத்துக்களை சேர்ப்பதால், பல வார்த்தைகள் உருவாகின்றன. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், "Love" என்ற வார்த்தையை ஒரு மூல வார்த்தையாகக் கொண்டால், இந்த வார்த்தை பல உரிச்சொற்களை(Adjective) உருவாக்குகிறது, அதாவது, "Loving" மற்றும் “Loveless” என்ற இரண்டு வார்த்தைகளைச் சொல்லலாம். இந்த இரண்டு சொற்களின் மூலச் சொல் "Love" என்பதாகும், ஆனால், இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் "ஒன்றுக்கொன்று எதிர் மறையானது". இதே போல, "type" என்ற மூலச் சொல்லினை பயன்படுத்தி "typical" மற்றும் "atypical" என்ற இரண்டு வார்த்தைகளை உருவாக்கலாம். ஆனால், இந்த இரண்டு சொற்களின் பொருள் மறுபடியும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானது தான். அரபி மொழியின் விவரங்களை தெரிந்துக் கொள்ள ஆங்கில மொழியை நாம் ஒரு அளவு கோளாக கொள்ள முடியாது. இருந்தாலும், அரபி மொழி தெரியாதவர்களுக்கு கீழே படிக்கப்போகின்ற கட்டுரையை புரிந்துக்கொள்ள மேலே கண்ட இரண்டு ஆங்கில உதாரணங்கள் உதவியாக இருக்கும். 

  1. இஸ்லாம் மற்றும் அமைதி - தமிழ் கட்டுரை
  2. இக்கட்டுரையை அரபி மொழியில் படிக்க இங்கு சொடுக்கவும்.

அபூ முஹைக்கு கொடுத்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்