பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? ஸுயூதியும் தொலைந்த குர்‍ஆன் வசனங்களும் பாகம் 3 (தொலைந்த 157 குர்ஆன் வசனங்கள்)

முன்னுரை: இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆனை பற்றி புகழ்ந்து கூறவேண்டுமென்றுச் சொல்லியும், தங்கள் பிழைப்பு இதனால் நடக்கவேண்டுமென்றுச் சொல்லியும், சாதாரண சராசரி இஸ்லாமியர்களை ஏமாற்றிவருகிறார்கள். குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து மாறாமல் அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது என்றும், உலகிலேயே மாற்றமடையாத ஒரே வேதம் குர்‍ஆன் என்றும், பொய்களை டன் கணக்கில் சொல்லிவருகிறார்கள். ஆனால், உண்மையில் குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன, சில அத்தியாயங்கள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுவதில்லை. இந்த உண்மைகளை ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள், முஹம்மதுவின் தோழர்கள் மூலமாக கிடைத்துள்ளது. இவைகளை இஸ்லாமிய அறிஞர்கள் சராசரி மக்களிடம் மறைக்கின்றனர். இந்த உண்மைகளை எல்லாரும் அறிய வேண்மென்பதற்காக, கீழ்கண்ட இரண்டு பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளன, இப்போது மூன்றாவது பாகத்தைக் காண்போம்.

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? 

1) ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1 

2) வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2


தொலைந்த 157 குர்ஆன் வசனங்கள் - பாகம் 3

ஸுயூதியின் இத்கான் புத்தகத்திலிருந்து: 

பாக‌ம் 3, ப‌க்க‌ம் 73ல் ஸுயூதி கீழ்க‌ண்ட‌ விவ‌ர‌ங்களை த‌ருகிறார்:

"அபீ யூனிஸ் என்ப‌வ‌ரின் ம‌க‌ள் ஹமீதா அறிவித்த‌தாவ‌து, "என் த‌ந்தை 80 வ‌ய‌து உடைய‌வ‌ராக‌ இருந்தபோது, ஆயிஷா அவ‌ர்க‌ளிட‌ம் இருந்த‌ குர்‍ஆனை படிப்பவராக இருந்தார்: "இறைத்தூத‌ர் மீது அல்லாஹ்வும் அவ‌ர‌து தூத‌ர்க‌ளும் வேண்டுத‌ல் செய்கிறார்கள், ஓ ந‌ம்பிக்கையாள‌ர்க‌ளே, அவ‌ர் மீதும் முத‌ல் வ‌ரிசையில் நின்று தொழுது கொள்ப‌வ‌ர்க‌ள் மீது ஆசீர் கூறுங்க‌ள்". மேலும் ஹமீதா கூறியதாவது "இது உஸ்மான் குர்‍ஆனின் பிர‌திக‌ளை மாற்றுவ‌த‌ற்கு முன்பாக‌ குர்‍ஆனில் இருந்ததாகும் ".

பக்கம் 74ல், நாம் கீழ்கண்ட விதமாக படிக்கிறோம்:

"அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் அவர்களிடம் உமர் கூறியதாவது, குர்‍ஆன் வசனங்களில் "நீ முதலாவது வந்ததுபோல முயற்சி செய்" என்ற‌ வசனத்தை கண்டாயா? இதை நான் கு‍ர்‍ஆனில் காணமுடியவில்லை. அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் உமரிடம் "குர்‍ஆனிலிருந்து நீக்கபப்ட்ட இதர வசனங்களோடு இந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது " என்று கூறினார்.

அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் என்பவர் சிறந்த நபித்தோழராக இருந்தவர் மற்றும் கலிபா பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர் ஆவார்.

இத்கான் புத்தகத்தில், அதே பக்கத்தில் (பாகம் 3, பக்கம் 74), நாம் கீழ்கண்ட விவரங்களை படிக்கிறோம்:

"முஹம்மதுவின் தோழர்களிடம் மஸ்லமா அல் அன்ஸார் கூறியதாவது: "உஸ்மான் தொகுத்த குர்‍ஆனில் காணப்படாத இரண்டு குர்‍ஆன் வசனங்களை என்னிடம் யாராவது கூறுங்கள்? ". அவர்களால் அவ்வசனங்களை கண்டுபிடித்து சொல்ல முடியவில்லை. அதன் பிறகு மஸ்லமா கூறியதாவது: 

"ஓ நம்பிக்கையாளர்களே! சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு குடியேறியவர்களே, அல்லாஹ்விற்காக உங்கள் உடைமைகளோடு போராடுகிறவர்களே, உங்களுக்கு நன்மை உண்டாகும், நீங்கள் பாக்கியமுள்ளவர்கள். மற்றும் அல்லாஹ்வின் கோபத்தை பெற்றவர்களிடமிருந்து இவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர்களே, தங்க இடம் அளித்தவர்களே, உதவி செய்பவர்களே நீங்கள் பாக்கியமுள்ளவர்கள். அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிய அவர்களின் ஆத்துமாவிற்கு அவர்கள் செய்த செய்கைக்கு தக்க பலன் காத்துக்கொண்டு இருக்கிறது."

ஸுயூதி தம்முடைய இத்கான் புத்தகத்தின் பாகம் 3ல், 73 மற்றும் 74ம் பக்கங்களில், முஹம்மதுவின் தோழர்களின் எல்லா விமர்சனங்களையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இன்று நம்மிடம் இருக்கும் உஸ்மான் தொகுத்த குர்‍ஆனில் காணப்படாத வசனங்கள் பற்றி நபித்தோழர்கள் கொடுத்த விமர்சனங்களை அவர் குறிப்பிடுகிறார். அவ்வசனங்கள் இன்று நம்மிடமுள்ள குர்‍ஆனில் காணப்படுவதில்லை. ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், நாங்கள் மேற்கோள் காட்டும் மேற்கோள்கள் அனைத்தும், இஸ்லாமிய அறிஞர்களும், குர்‍ஆன் விரிவுரையாளர்களும் "சிறந்தவர்கள்" என்று கருதும் அலி, உஸ்மான், அபூ பக்கர் மற்றும் முஹம்மதுவின் மனையாகிய ஆயிஷா, இப்னு மஸூத் மற்றும் இப்னு அப்பாஸ் போன்றவர்களின் மேற்கோள்களாகும். இவர்களின் மேற்கோள்களை எல்லா இஸ்லாமியர்களும் நம்பகமானது என்று கருதுகிறார்கள். குர்‍ஆனை விவரிக்கவேண்டுமென்றால், முஹம்மதுவின் வாழ் நாட்களில் குர்‍ஆனின் வசனங்கள் எப்பொது எங்கே வெளிப்பட்டது என்பதை அறிய இந்த நபித்தோழர்களின் உதவி நமக்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்களை போல இஸ்லாமின் கோட்பாடுகளை விவரிக்க வேறு யாரால் முடியும்? 

ஸுயூதியின் இத்கான் புத்தகத்தின் முதல் பாகத்தை நாம் படித்தால், கீழ்கண்ட விவரங்களை அறியலாம் (பக்கம் 184):

குர்‍ஆனின் தொலைந்த 157 வசனங்கள்

"மாலிக் கூறியதாவது: ஆரம்பத்தில் 9வது (தௌபா) அத்தியாயத்திலிருது அனேக வசனங்கள் விடுபட்டுவிட்டது. அவைகளில் ஒரு வசனம்: "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவக்குகிறேன்" என்பதாகும். ஸூரா பகராவிற்கு நிகரான வசனங்கள் இந்த தௌபா ஸூராவில் இருந்தன என்பது நம்பகமான விவரமாகும்.

இதன் பொருள் என்னவென்றால், இந்த அதிகாரத்திலிருந்த 157 வசனங்கள் தொலைந்துவிட்டன. மற்றும் ஸுயூதி (பக்கம் 184ல்) கூறும் போது, "இப்னு மஸூத்தின் குர்‍ஆன் பிரதியில் "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ..." என்ற வசனம் இந்த அதிகாரத்தில் காணப்பட்டது. நம்மிடமுள்ள குர்‍ஆனை பிரதி எடுக்கும் சமயத்தில், உஸ்மான் "இப்னு மஸூத்தின்" குர்‍ஆன் பிரதியை பறிமுதல் செய்து எரித்துவிட்டார். 

குர்‍ஆனிலிருந்து வெறும் வசனங்களை மட்டும் உஸ்மான் விட்டுவிடவில்லை, முழு ஸூராக்களும் நீக்கப்பட்டுள்ளது. இப்படி ஸூராக்கள் நீக்கப்பட்ட குர்‍ஆன் தான் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ளது. ஸூயூதி மற்றும் இதர இஸ்லாமிய அறிஞர்களின் சாட்சிகளின் படி, உபை மற்றும் இப்னு மஸூத் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் இரண்டு ஸூராக்கள் காணப்பட்டன, அதாவது "ஹஃப்த்" மற்றும் "க்ஹல்" என்ற இரண்டு ஸூராக்கள் காணப்பட்டன. அவைகள் அஸ்ர் என்ற 103வது ஸூராவிற்கு அடுத்தபடியாக அமைக்கப்பட்டு இருந்தன. (பார்க்கவும் பக்கம் 182 மற்றும் 183) 

இன்றைய குர்‍ஆனில் காணப்படாத அத்தியாயங்களை தொழுகையில் ஓதுதல், உமரின் வழக்கமாக இருந்தது. 

ஸுயூதி மேலும் கூறும் போது "அப்துல்லாஹ் இப்னு மஸூத் அவர்களின் குர்‍ஆன் பிரதியில், ஸூரா 113 மற்றும் 114 என்ற அத்தியாயங்கள் காணப்படவில்லை. இத்கான் 184வது பக்கத்தில், ஸுயூதி கூறும் போது, "உபை இப்னு கஅப்" என்பவரின் குர்‍ஆன் பிரதியில் இரண்டு அத்தியாயங்கள் காணப்பட்டன. இந்த அதிகாரங்கள் "ஓ இறைவா, உன்னுடைய உதவியை நாங்கள் கேட்கிறோம்" மற்றும் "ஓ இறைவா, உன்னையே நாங்கள் தொழுதுக்கொள்கிறோம்" என்று ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு அத்தியாயங்களின் பெயர்கள் "ஹஃப்த்" மற்றும் "க்ஹல்" என்பதாகும். ஸுயூதி, 185வது பக்கத்தில் இறைத்தூதரின் மிகவும் புகழ்பெற்ற தோழராகிய "அலி இப்னு அபி ஸாபித்" என்பவரும் இந்த இரண்டு அத்தியாயங்களை அறிந்திருந்தார் என்பதை தெரிவிக்கிறார். உமர் இப்னு அல் கத்தாப்பும் தமது தொழுகையில் இவ்வதிகாரங்களை ஓதுவது வழக்கமாக கொண்டு இருந்தார் .

"இப்னு அப்பாஸ்ஸின் குர்‍ஆன் பிரதி, அல்லது இப்னு மஸூத் என்பவரின் குர்‍ஆன் பிரதி, ...ஆயிஷா அவர்களின் குர்‍ஆன் பிரதி " என்றெல்லாம் கூறுகின்றீர்களே, இதன் பொருள் என்ன? "அனேக குர்‍ஆன்கள் இருந்தன என்றுச் சொல்கிறீர்களா?" என்று வாசகர்கள் கேட்கலாம். 

இந்த கேள்விக்கான பதிலை நான் சொல்லப்போவதில்லை. இதற்கான பதிலை இஸ்லாமிய அறிஞர்களிடமும், இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களிடமும் விட்டுவிடுகிறேன். ஏனென்றால், குர்‍ஆனின் மூல பிரதிகள் எப்படி எரிக்கப்பட்டன, மற்றும் எப்படி ஒரே ஒரு பிரதியை தயார்படுத்தி மற்ற குர்‍ஆன் பிரதிகள் அழிக்கப்பட்டன என்பதை நாம் அலசி இருக்கிறோம். 

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It. 

குர்‍ஆனிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு அத்தியாயங்களை தமிழிலும், அரபியிலும் படிக்க: 

சூரா ஹப்த் மற்றும் க்ஹல் - (உபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்)

மூலம்: http://isakoran.blogspot.in/2011/10/3.html

பீஜேவிற்கு மறுப்புக்கள்

உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள்