பகனினி குர்‍ஆன்(1538) முதல் கெய்ரோ குர்‍ஆன் (1924) வரையிலான அரபி குர்‍ஆனின் அச்சுப்பயணம்

முதன் முதலில் அரபி குர்‍ஆன் அச்சுப் புத்தகமாக வெளிவந்தது பற்றி கீழ்கண்ட‌ கட்டுரையில் கண்டோம்.

உலகளாவிய முஸ்லிம்கள் இன்று பயன்படுத்தும் குர்‍ஆன், கெய்ரோவில் 1924ம் ஆண்டு பிரிண்ட் செய்யப்பட்ட ஹஃப்ஸ் கிராத்தின்படியுள்ள குர்‍ஆன் ஆகும்.

கி.பி. 1538ம் ஆண்டு முதல் 1924ம் ஆண்டுவரை குர்‍ஆனின் அச்சுப்பயணம்

பகனினி குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட்ட  1538ம் ஆண்டு முதல், கெய்ரோ குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட்ட 1924ம் ஆண்டுவரையிலான குர்‍ஆனின் அச்சுப்பயணம் பற்றிய ஒரு சுருக்கத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

  1. பகனினி அச்சுக் குர்‍ஆன் – Paganini Quran, Venice (1538) 
  2. பாஸ்டர் அப்ரஹாம் ஹின்கெல்மன் - Pastor Abraham Hinckelmann's Quran (1694)
  3. இத்தாலிய பாதிரியார் லுடொவிகோ மரக்கி - Priest Ludovico Maracci's Quran (1698)
  4. ரஷ்ஷியாவின் கேத்ரீன் அரசியின், செயிண்ட் பீடர்ஸ்பர்க் குர்‍ஆன் - Catherin's sponsor, Saint Peersburg's Quran - (1787, 1790 & 1793)
  5. கஜான் அச்சகத்தின் பிரிண்ட் குர்‍ஆன் - Islamic city Kazan's first Quran (1803) 
  6. ஈரானின் முதல் பிரிண்ட் குர்‍ஆன் - Iran’s 1st printed Quran (1828)
  7. கஸ்டவ் ஃப்லூகெல் அரபி குர்‍ஆன் - Gustav Flügel's Arabic Print Quran (1834)
  8. ஒட்டமன் அரசின் முதல் அதிகாரபூர்வமான பதிப்பு, காண்ஸ்டான்டிநோபுலில் பிரிண்ட் குர்‍ஆன் – Ottamon's first official Quran edition (1875-77)
  9. கெய்ரோ குர்‍ஆன் – Egypt, Cairo Quran (1924)

அரபி குர்‍ஆனின் அச்சுப்பயணத்தை பார்ப்பதற்கு முன்பு, ஏன் இஸ்லாமிய நாடுகளில் அரபி குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் 300 ஆண்டுகள் ஆனது, என்பதை சுருக்கமாக காண்போம்.

ஒட்டமன் இஸ்லாமிய அரசின் அரபி எழுத்து (குர்‍ஆன்) பிரிண்ட் தடைச்சட்டம் கி.பி. 1483 - 1726 
(Ottoman’s ban on printing Arabic Script - 1483 and 1726)

அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டும், 300 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய நாடுகளில் ஏன் அரபி குர்‍ஆன்களை பிரிண்ட் செய்ய தாமதித்தன?   அன்றைய இஸ்லாமிய தலைமையகமாக இருந்த ஒட்டமன் அரசு, அரபி எழுத்துக்களை கைகளினால் எழுதவேண்டுமே ஒழிய அவைகளை அச்சு இயந்திரங்களினால் பிரிண்ட் எடுக்கக்கூடாது என்று தடை விதித்து இருந்தது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும். அரபி எழுத்துக்களில் குர்‍ஆன் மட்டுமல்ல, வேறு விதமான சாதாரண மத‌சார்பற்ற புத்தகங்களும் பிரிண்ட் செய்யப்படக்கூடாது என்பது தான் இந்த சட்டத்தில் உள்ள பிரச்சனை.

இதனால் இஸ்லாமிய நாடுகளில், மற்ற மொழிகளில் அச்சு இயந்திரங்கள் மூலமாக புத்தகங்கள் வெளிவந்தாலும், அரபி மொழியில் குர்‍ஆனோ, அல்லது மற்ற புத்தகங்களோ அச்சடிக்காமல் விட்டுவிட்டனர். 15ம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிலிருந்து , பல துறைகளில் புத்தகங்களை பிரிண்ட் செய்து ஐரோப்பிய நாடுகள் முன்னேறிக்கொண்டு இருந்தாலும், இஸ்லாமிய நாடுகள் கிட்டத்தட்ட 2 அல்லது 3 நூற்றாண்டுகள் அரபி மொழியில் அச்சு இயந்திரங்களைக் கொண்டு புத்தக‌ங்களை பிரிண்ட் செய்யாமல், தங்கள் மக்களின் அறிவை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு அளிக்காமல் பின் தங்கிவிட்டனர்.

இந்த தடையை நீக்கும்படி பலர் எடுத்த முயற்சியினால், 1726ம் ஆண்டிலிருந்து இந்த தடை சட்டம் நீக்கப்பட்டது, அதுவும், அரபி மொழியில் 'குர்‍ஆனை தவிர்த்து' மற்ற புத்தகங்கள் அச்சடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடைசியாக, 1875ம் ஆண்டு, ஒட்டமன் இஸ்லாமிய அரசின் அதிகார பூர்வமான அரபி குர்‍ஆன் காண்ஸ்டான்டிநோபலில் பிரிண்ட் செய்யப்பட்டது.

1)  பகனினி அச்சுக் குர்‍ஆன் – Paganini Quran, Venice (1538) 

பகனினி குர்‍ஆன் (Paganini Quran) என்பது, இத்தாலியின் வெனிஸ் நகரில், 1537-1538ம் காலக்கட்டத்தில் 'அசையும் அச்சுப்பொறியின் (Movable Type Printer) மூலமாக' பிரிண்ட் எடுக்கப்பட்ட முதல் அரபு குர்‍ஆன் ஆகும்.[1][2]

இதற்கு “வெனிஸ் குர்‍ஆன் - Venice Quran” என்ற பெயரும் உள்ளது. பகனினி மற்றும் அவரது மகன் பகனினோ இருவரும் தங்கள் அச்சகத்தில் இந்த குர்‍ஆனை பிரிண்ட் செய்து, அக்காலத்தின் இஸ்லாமிய தலைமையகமாக இருந்த ஒட்டாமன் நாட்டுக்கு (இன்றைய துருக்கி) ஏற்றுமதி செய்து, நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்து, இந்த வேலையை தொடங்கினார்கள்.

ஆனால், அவர்களின் வியாபார கனவு நிறைவேறவில்லை என்று சொல்லப்படுகின்றது.  அக்காலத்தவர்கள், இந்த‌ குர்‍ஆன் பற்றி எழுதியிருந்தார்கள், ஆனால் 1987வரை, இந்த பிரிண்ட் குர்‍ஆனின் ஒரு பிரதியும் நம்மிடம் இல்லை. 

உலகின் முதல் அச்சு செய்யப்பட்ட முழு அரபி குர்‍ஆன்

1987ம் ஆண்டு, இந்த பிரிண்ட் குர்‍ஆனின் ஒரு பிரதி, வெனிஸ் நகரில் இருக்கும் ஒரு துரவி மாடத்தின் நூலகத்தில் (Isola di San Michele, Venice)  கிடைத்தது. இது தான் உலகின் முதல் அச்சு செய்யப்பட்ட முழு அரபி குர்‍ஆன் ஆகும்.

இந்த குர்‍ஆனின் அனைத்து பிரதிகளும் 1620ம் ஆண்டு எரிந்துவிட்டன, அதிலிருந்து தப்பித்த ஒரு குர்‍ஆன் 1987ம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  இதன் எரிப்பில் கத்தோலிக்க போப்பின் கை உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இந்த குர்‍ஆனில் பல எழுத்துப் பிழைகள் உள்ளன‌ என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதில் 464 பக்கங்கள் உள்ளன. 

இந்த பகனினி குர்‍ஆனின் பக்கங்களை காண இந்த தொடுப்புக்களை சொடுக்கவும்:

  1. madainproject.com/content/media/collect/venice_manuscript_2371.jpg
  2. madainproject.com/content/media/collect/venice_manuscript_3870.jpg
  3. madainproject.com/content/media/collect/venice_manuscript_2378.jpg
  4. madainproject.com/content/media/collect/venice_manuscript_3627.jpg
  5. Al-Fatiha – Image
  6. Qur'an printed by Paganino and Alessandro Paganini, 1537-38, Venice 
  7. Chapter 1 and start of Chapter 2

மூலம்: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/paganini_quran.html 

2) பாஸ்டர் அப்ரஹாம் ஹின்கெல்மன் - Pastor Abraham Hinckelmann's Quran (1694)

ஹிங்கெல்மேன் ஒரு புராட்டஸ்டன்ட் இறையியலாளர் மற்றும் ஓரியண்டலிஸ்ட் ஆவார், 1694 இல் இவர் அரபி குர்‍ஆனை ஹம்பர்க் நகரில் வெளியிட்டார்.  கி.பி. 1537/1538ம் ஆண்டில் வெனிஸ் நகரில் வெளியான பகனினி குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக, கிறித்துவ ஐரோப்பாவில் அச்சு செய்யப்பட்ட இரண்டாவது முழுமையான அரபி குர்‍ஆன், இந்த ஹிங்கெல்மனின் அரபி குர்‍ஆன் ஆகும்.

இந்த ஹிங்கெல்மேன்  தம்முடைய அரபி குர்‍ஆனுக்கு 80 பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட‌ முன்னுரையை கொடுத்தார். ஏன் 'குர்‍ஆனின் மூல மொழியிலே தாம் குர்‍ஆனை வெளியிட்டார் என்றும், ஏன் அரபியை கற்று ஆய்வு செய்யவேண்டும் என்பது பற்றியும் அதில் அவர் எழுதினார்'.

Hinckelmann’s edition of the Koran was a milestone in this respect. In an 80-page foreword Hinckelmann justifies not only his publishing of the Koran in its original language – a much contested initiative at the time – but also offeres a detailed description of “Arabic Studies,” based on his own extensive knowledge, that would be valuable from a scholarly and historical perspective.  . . . Source

அன்றைய முஸ்லிம் நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும், அவர்களோடு போராடி வெற்றி பெறவும், வெறும் யுத்த ஆயுதங்கள் போதாது, அவர்களின் வேதம், கலாச்சாரம், மொழியைக் கற்பது இன்றியமையாத‌து என்று, 12ன் நூற்றாண்டிலேயே அழுத்தம் திருத்தமாக கருத்து முன்வைக்கப்பட்டது. ஆகையால், கிறிஸ்தவ ஊழியர்கள், எபிரேய, கிரேக்க மொழிகளோடு கூட, அரபியையும் கற்கவும், அதில் திறமையை வளர்த்துக்கொள்ளவும் தொடங்கினர், அதன் வெளிப்பாடு தான் இந்த ஹம்பர்க் நகரில் வெளியான குர்‍ஆன்.

The first Latin translation of the Koran dates from the 12th century and came from the pen of Robert of Ketton, an English astronomer, translator, priest and diplomat in 1143. He was convinced of the necessity that the battle against the Muslims be carried on, not only with weapons, but also in the form of theological disputation with Islam. In the 14th century, it was resolved at the Council of Vienna (1311) that several European universities would institute the study of Arabic, Hebrew, and Aramaic (which was known as Chaldean at that time). In post-Reformation Europe, especially in the 17th century, numerous professorships were dedicated to the research of Hebrew and other “languages of the Orient.”. . .

That Hinckelmann presents himself in his foreword as a decided adversary of Islam seems to have been his way of getting around the criticism of his contemporaries. He likewise argues that one must know the Koran thoroughly in order to effectively fight it. Hinckelmann was a Christian theologian and biblical scholar and as such obliged to hold the received conception of Hebrew as the mother of all languages. 

2012ம் ஆண்டில், அப்ரஹாம் ஹின்கெல்மேன் அவர்களின் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட பல குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன, அவைகள் பற்றிய தொடுப்பு:  Quran Manuscripts from the Library of Abraham Hinckelmann

3) இத்தாலிய பாதிரியார் லுடொவிகோ மரக்கி - Priest Ludovico Maracci's Quran (1698)

லூயிஸ் (அ) லுடோவிகோ மரச்சி (கி.பி. 1612-1700) என்பவர், ஒரு இத்தாலிய ஓரியண்டல் அறிஞர் ஆவார் மற்றும் ரோமில் உள்ள விஸ்டம் கல்லூரில், அரபு மொழி பேராசிரியராக இருந்தார். இவர் அரபி குர்‍ஆன் பதிப்பகர்  என்ற பட்டப்பெயராலும் அறியப்பட்டார். இவர் லத்தீன் மொழியில் குர்ஆனை மொழிப்பெயர்த்தார், மற்றும் அரபி பைபிளில் இவரது பங்கும் சிறப்பானதாகும். 

வாடிகன் குர்‍ஆன் (Vatican Quran):  

இவர் ஹென்கில்மேனின் அரபி குர்‍ஆனை, லத்தீன் மொழியாக்கத்தோடு 1698ல் வெளியிட்டார். இவரது குர்ஆன் பதிப்பில் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளும், மற்றும் முஸ்லீம் கோட்பாடுகளின் மறுப்புகளும் கொடுக்கப்பட்டு இருந்தன என்பது சிறப்பம்சமாகும். இவர் 1691 இல், லத்தீன் மொழியில், "குர்ஆனுக்கு மறுப்பு" என்ற தலைப்பில் ஒரு மறுப்பு புத்தகத்தையும் வெளியிட்டார்.

ஜார்ஜ் சேலின் (George Sale) கி.பி. 1736ல் வெளியான‌ "குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு", மரச்சியின் 1698 லத்தீன் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் மொழியாக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது குர்‍ஆனின் முதல் பக்கத்தை பார்க்க இந்த தொடுப்பை சொடுக்கவும்:

4) ரஷியாவின் கேத்ரீன் அரசியின், செயிண்ட் பீடர்ஸ்பர்க் குர்‍ஆன் - Catherin's sponsor, Saint Peersburg's Quran - (1787, 1790 & 1793)

1786 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் கேத்தரின் த கிரேட் (Catherin the Great) என்ற அரசி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் "டாடர் (Tatar) மற்றும் துருக்கிய அச்செழுத்து முறையில்" குர்‍ஆனை அரபியில் பிரிண்ட் செய்ய, ஒரு அச்சகத்திற்கு அனுமதி அளித்து, உதவியும் அளித்தார்.  அரபி அச்சு எழுத்துக்களை உருவாக்கும் பொறுப்பை, முல்லா உஸ்மான் இஸ்மாயில் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அரபி குர்‍ஆன் செயிண்ட் பீடர்ஸ்பர்க் நகரின் இந்த அச்சகத்திலிருந்து 1787, 1790 மற்றும் 1793ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ரஷியாவிலிருந்து வெளியிடப்பட்ட முதல் அச்சு அரபி குர்‍ஆன் இதுவே.

5) கஜான் அச்சகத்தின் பிரிண்ட் குர்‍ஆன் - Islamic city Kazan's first Quran (1803) 

இதுவரை மேலே பார்த்த அரபி குர்‍ஆன்கள் அனைத்தும் 'இஸ்லாமியரல்லாத நகரங்களில்' பிரிண்ட் செய்யப்பட்டவைகளாகும். ஆனால், ரஷ்ஷியாவின் கஜான் என்ற இஸ்லாமிய நகரில் முதன் முதலாக பிரிண்ட் செய்யப்பட்டது, இந்த குர்‍ஆன் தான். 

TEHRAN (IQNA) – The people of the Republic of Tatarstan are proud that the Republic’s capital city of Kazan was the first Muslim city where a copy of the Quran was printed, Mufti Kamil Samigullin said. 

Speaking at an event at the Islamic University of Kazan, Samigullin said it was in Kazan in the year 1803 that the first copy of Quran was printed in an Islamic city, an7a.com website reported.

He noted that at that time, printing books in Arabic was very difficult and faced many restrictions under Russian tsars.

The cleric also said that the first printed copy of the Quran was produced in Venice, Italy, in 1537.

Later, copies Islam’s Holy Book were printed elsewhere in Europe, including in Hamburg, Germany, in 1694, he noted.

Those copies had many errors in them, including printing errors, Samigullin went on to say.

Kazan is a city in southwest Russia, on the banks of the Volga and Kazanka rivers. It is the capital of the Republic of Tatarstan, a semi-autonomous region of the Russian Federation.

Source: Kazan, First Muslim City Where Quran Was Printed

KAZAN QURAN PROPOSED FOR THE UNESCO LIST - கஜான் குர்‍ஆனை யுனெஸ்கோ பண்டைய கலாச்சார பட்டியலில் சேர்க்கவேண்டும்

"In order to enter the UNESCO list it is necessary that our Kazan historical Quran, which has had dozens of editions, went through the international Quranic certification.

It will be passed when the examining sccholars express their opinion and will outline ways to do it," one of the organizers of the forum, an Islamic scholar Farid hazrat Salman, said in an interview with TASS.

The first printed Koran was published in Kazan in 1803 by order of Catherine II. 

Thanks to the joint efforts of the state and the Tatar clergy, printed versions of the Kazan Quran were widely circulated not only among the Muslims of the Russian Empire, but also the neighboring Muslim states, and later all over the world.

Source: islam.ru/en/content/news/kazan-quran-proposed-unesco-list

The First Edition of the Qur'an Printed by Muslims is Issued in Kazan, Tartarstan

By a decree of December 15, 1800 restrictions on the publication of Islamic religious literature were lifted in Russia, and in 1801 the Arabic typeface of the St. Petersburg press was transferred to Kazan where in 1801 the Qur'an (Koran) was first published in a printed edition issued in 1801 printed by Muslims in Kazan , capital of the Republic of Tartarstan . Prior to this date, and for most of the nineteenth century, the Qur'an was primarily transmitted by manuscript copying.

6) ஈரானின் முதல் பிரிண்ட் குர்‍ஆன் - Iran’s 1st printed Quran (1828)

ஈரான் நாட்டில் 1828ம் ஆண்டிலிருந்து பிரிண்ட் செய்யப்பட்ட குர்‍ஆன்கள் வெளிவர ஆரம்பித்தன.இந்த குர்‍ஆன் பற்றி எனக்கு மேலதிக விவரங்கள் கிடைக்கவில்லை.

7) கஸ்டவ் ஃப்லூகெல் அரபி குர்‍ஆன் - Gustav Flügel's Arabic Print Quran (1834)

கஸ்டவ் ஃப்லூகெல் 1834ல் அரபி குர்‍ஆனை பிரிண்ட் செய்து வெளியிட்டார். ஐரோப்பாவில் அடுத்த 100 ஆண்டுகள், அதாவது கெய்ரோ 1924ம் ஆண்டு குர்‍ஆன் வெளியிடும் வரை, இவரது குர்‍ஆனே அதிகார பூர்வமான பயன்பாட்டில் இருந்தது. இந்த குர்‍ஆனின் அரபி எழுத்துக்கள் நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு தரப்படுத்தப்பட்டதால், இதன் பிறகு வெளிவந்த குர்‍ஆன் பதிப்புக்களுக்கு இது அடித்தளமாக அமைந்தது எனலாம்.

415 பக்கங்கள் கொண்ட இந்த குர்‍ஆனை, இணையத்தில் நாம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம், அதன் தொடுப்பு இங்கே உள்ளது: 

இவர் இன்னொரு புத்தகத்தையும் எழுதியுள்ளார், அதாவது குர்‍ஆனின் அரபி மொழியின் ஒவ்வொரு மூல வார்த்தையும், அதனிலிருந்து பிறந்த வார்த்தைகளையும் ஆய்வு செய்து எழுதியுள்ளார்(Concordance of the Koran). அதனையும், இங்கு பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இது அரபி மொழி அகராதி போன்று பயன்படும்.

ஈரானிகா கலைக்களஞ்சியம் இவரைப் பற்றி எழுதியவைகளில் சில வரிகள்:

Quote:

Flügel was an eminent Arabist and Islamologist, who, in addition to his minor works, produced several fundamental studies on Islamic religion, philosophy, and literary history: an edition of the Koran which went through ten printings, writings on Kindī and the Hanafites, a history of the caliphate, editions of Ḥājī Ḵalīfa’s Kašf al-ẓonūn and Ebn al-Nadīm’s Fehrest (q.v.), as well as his catalogue of the Arabic, Persian, and Turkish manuscripts in Vienna. Flügel was awarded many academic awards and honors for his work including the Albert Decoration in Saxony and a university degree (Lizenz) from Jena in theology. He was a member of the Deutsche Morgenländische Gesellschaft in Halle and Leipzig and of the Altertumsverein of the Kingdom of Saxony; a corresponding member of the academies of Vienna and Turin; an associé étranger of the Société Asiatique in Paris; a corresponding member of the Asiatic Society in London; and a member of the Asiatic Society in Boston.

2015ல், 1750 அமெரிக்கன் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவரது பிரிண்ட் குர்‍ஆனின் ஒரு பிரதி: 

8) ஒட்டமன் அரசின் முதல் அதிகாரபூர்வமான பதிப்பு, காண்ஸ்டான்டிநோபுலில் பிரிண்ட் குர்‍ஆன் – Ottamon's first official Quran edition (1875-77)

துருக்கியில், ஒட்டமன் இஸ்லாமிய அரசின் அனுமதியுடன் 1875ம் ஆண்டு குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட்டது. இதைப் பற்றி வேறு தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை.

கீழ்கண்ட தளத்தில், ஒருவருக்கு இந்த குர்‍ஆன் கிடைத்துள்ளது, அதனை அவர் சில படங்களுடன் பதித்துள்ளார்.

Ancient Manuscript Review 180 : Antique Ottoman Quran with Tajwid Notes 1292 AH ( 1875 C.E )

This is an Ottoman Quran acquired from Istanbul a few years ago. It is incomplete as the first few pages are missing. Many of the pages are torn along the gold frame due to the copper reaction with the paper. The Quran dated 1292 AH on the inner cover which is equivalent to 1875 CE. I purchased this Quran due to its being different than other Ottoman Qurans. This particular Quran has notes on the rules of reading Quran ( Tajwid) on the margin on every page. Check my other Ottoman Quran which has similar feature as below :

9) கெய்ரோ குர்‍ஆன் – Egypt, Cairo Quran (1924)

எகிப்திய அரசு, 1924ல், கெய்ரோவில் ஹஃப்ஸ் கிராத்தில் உள்ள குர்‍ஆனை அரபியில் பிரிண்ட் செய்து வெளியிட்டது, மேலும், அதனையே சௌதி அரசாங்கம் பிரிண்ட் செய்து இப்போது உலகமெங்கிலும் அனுப்பிக்கொண்டு இருக்கிறது.

இதன் அடிப்படையில் தான் இன்று மற்ற குர்‍ஆன்கள் உலகில் பிரிண்ட் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


நான் தேடியதில் எனக்கு கிடைத்த பிரிண்ட் குர்‍ஆன்கள் பற்றிய விவரங்களை இங்கு கொடுத்துள்ளேன். வாசகர்களுக்கு ஏதாவது பிரிண்ட் குர்‍ஆன்கள் பற்றிய இதர விவரங்கள் கிடைத்தால், தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அடிக்குறிப்புக்கள்:

[1] en.wikipedia.org/wiki/Ludovico_Maracci

[2] https://en.wikipedia.org/wiki/Quran

தேதி:  16th Oct 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்