முதல் சிலுவைப்போரை நிஜமாக்கியவர்கள் யார்? செல்ஜுக் துருக்கி முஸ்லிம்களும் & அர்பன் II போப்பும் (பாகம் 4)

(முதல்  சிலுவைப்போரின் தொடக்க நிமிடங்கள். . .)

இடைவெளி 463 ஆண்டுகள்:

முஹம்மது இறந்த கி.பி. 632ம் ஆண்டு முதல், கி.பி. 1095ல் புனித இடங்களை விடுவிக்க முதல் சிலுவைப் போர் தொடங்கும் வரையில் 463 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. இந்த ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கும் ஐரோப்பிய அல்லது பைசாண்டைன் கிறிஸ்தவர்களுக்கும்(Byzantine Christians) இடையில் ஒரு அமைதி வாழ்வு நிலவியது (peaceful co-existence) என்று சிலர் கூறுவது தவறான கூற்றாகும். முஸ்லிம்கள் ஆக்கிரமித்திருந்த நாடுகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நிலைப் பற்றி மேலதிகமாகச் சொல்லத்தேவையில்லை.  முஸ்லிம் படையெடுப்பிற்கு முன்பு தங்கள் கிறிஸ்தவ நாடுகளில்  வாழ்ந்த கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு இரண்டாம்தர குடிமக்களாக, குறைந்த சலுகைகளை உடையவர்களாக‌ "இஸ்லாம் விதித்த‌ ஜிஸ்யா வரி" கொடுத்து வாழ்ந்து வந்தார்கள்.

கி.பி. 1000வது ஆண்டுக்கு பிறகு கிறிஸ்தவர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. கி.பி. 1009 ஆம் ஆண்டில் எகிப்தின் பாத்திமத் கலீஃபா, அபூ-அலி மன்சூர் அல்-ஹக்கீம் (Fatimid Caliph of Egypt, abu-'Ali Mansur al-Hakim), எருசலேமில் உள்ள "புனித கல்லறையை(Holy Sepulchre)" அழிக்க உத்தரவிட்டார். துரதிருஷ்டவசமாக வேறு வழியின்றி அந்த அழிவுக்கான கட்டளை ஆவணத்தில் அவரது கிறிஸ்தவ செயலாளர் இப்னு-அப்துன் கையெழுத்திட்டார். முஸ்லிம்கள் இயேசுவின் கல்லறையையும், அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த திருச்சபையின் மேல் பகுதிகளையும் அழித்தனர். அவர்கள் இடித்த கட்டிடத்தின் உடைந்த சுவர்கள், ஒரு பெரிய குவியலாக இருந்தது. அதனால் முழூ திருச்சபையையும் அவர்கள் அழிக்கமுடியவில்லை. அதன் பிறகு, 11 ஆண்டுகள் கிறிஸ்தவர்களுக்கு அந்த‌ இடிக்கப்பட்ட திருச்சபை இடிபாடுகளைப் பார்க்கவோ அல்லது இடிபாடுகள் மத்தியில் நின்று ஜெபிக்கவோ கூட தடை விதிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் புனிதமான ஆலயம் அழிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போப் IV செர்ஜியஸ்(Pope Sergius IV) அதை மீண்டும் கட்ட பாலஸ்தீனத்திற்கு செல்ல உதவி கோரினார். அவரது வேண்டுகோள் செவிடன் காதில் சங்கு ஊதியதைப்போன்று பயனற்றதாகிவிட்டது. 

போப் கிரிகோரி VII:

கி.பி. 5ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது முஹம்மது தோன்றுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் 700 கத்தோலிக்க ஆயர்கள் (பிஷப்கள்) இருந்தனர்[1]. அவர்களில் 200 ஆயர்கள் கி.பி 535 இல் நடந்த கார்தேஜ் கவுன்சிலில் (Council of Carthage) கலந்து கொண்டார்கள். கி.பி. 10 ம் நூற்றாண்டின் (900) மத்திய காலத்தில் வெறும் 40 ஆயர்கள் மட்டுமே மிஞ்சி இருந்தனர். இந்த நிலை  கி.பி. 1050ம் ஆண்டில்  முஸ்லிம்களின் அமைதியான! ஆட்சியின் விளைவாக வெறும் 5 ஆயர்களாக குறைந்தனர். இவர்கள் 1076ன் ஆண்டில் 2 ஆயர்களாக ஆக்கப்பட்டனர். இந்த விவரங்களை நாம் போப் கிரிகோரி VII (Pope Gregory VII), "கி.பி. 1076ம் ஆண்டில், கர்தேஜ் பகுதியின் பேராயர் சிரியகஸ்ஸுக்கு (Cyriacus, Archbishop of Carthage) எழுதிய கடிதத்திலிருந்து அறிகிறோம்".

அட்டவணை: ஆப்ரிக்காவில் ஆயர்களின் எண்ணிக்கை - இஸ்லாமுக்கு முன்னும் பின்னும்

வரைபடம் (Bar Chart): ஆப்ரிக்காவில் ஆயர்களின் எண்ணிக்கை - இஸ்லாமுக்கு முன்னும் பின்னும்

ஒரு ஆயரை நியமிக்க (பிரதிஷ்டை செய்ய) மூன்று வேறு ஆயர்கள் தேவைப்படுகிறார்கள். ஆகையால், பேராயர் கிரிகோரி ரோமுக்கு ஒரு பாதிரியாரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். அவரை துணை ஆயரகாக நியமித்தால், ஒரு புதிய ஆயரை நியமிக்க மூன்று ஆயர்கள் கிடைத்துவிடுவார்கள்.  இதன் மூலம் தானும் (சிரியாகஸ்), சர்வாண்டஸ்ஸும் (மவுரித்தேனியாவில் உள்ள புஜியாவின் ஆயர் - Servandus, bishop of Buzea in Mauritania) மற்றும் இந்த புதிய துணை ஆயரும் சேர்ந்து, ஆப்ரிகக கத்தோலிக்கர்களுக்காக வேறு புதிய ஆயர்களை நியமிக்கமுடியும்[2].

கிரிகோரி VII, 1085இல் தம்முடைய மரணத்தருவாயில், இஸ்லாத்திற்கு எதிராக ஒரு கிறிஸ்தவ இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதைப் பற்றி, அவர் 'நான் இந்த உலகை ஆளுவதைவிட, முஸ்லிம்களிடமிருந்து கிறிஸ்தவ புனித இடங்களை  மீட்பதற்காக என் உயிரைப் பணயம் வைப்பேன்' என்று கூறினார். [3]

செல்ஜுக் துருக்கி(Seljuk Turkish) முஸ்லிம்கள்:

கி.பி. 1076இல் ஜெருசலேமை செல்ஜுக் துருக்கி முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். அதுவரை பொறுமையை காத்துக்கொண்ட ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் பொறுமையை இழந்தார்கள்.  போப் கிரிகோரியின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டிய தேவையை அப்போது தான் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் உணர்ந்தார்கள்.

செல்ஜுக் முஸ்லிம்கள் ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு, அங்கு புனித யாத்திரை செல்வது மிகவும் கடினமாகிவிட்டது. ஜெருசலெமுக்கு புனித யாத்திரையாக வருபவர்கள் மீது, அதிக வரிகளை விதித்தார்கள். இந்த தொல்லைகளின் மத்தியிலும் ஜெருசலேமுக்கு  பயணம் செய்யத் துணிந்தவர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்பட்டனர், கொள்ளையடிக்கப்பட்டனர், சிலர் அடிமைப்படுத்தப்பட்டனர்.

போப் அர்பன் II (Pope Urban II):

கி.பி. 1095ல், இரண்டாம் போப் அர்பன் "பியாசென்சா கவுன்சிலுக்கு -Council of Piacenza" அழைப்புவிடுத்தார். பைசாண்டன் நாட்டு கிறிஸ்தவ பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு, இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்களால் கிறிஸ்தவ உலகம் சந்தித்துக்கொண்டு இருக்கும் வேதனைகளையும், ஒடுக்கப்படுதலையும் வலியுறுத்தினார்க‌ள். முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு தடை போடவேண்டும் என்றும், மத்திய கிழக்கு கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டத்தையும் எடுத்துக்காட்டினார்கள். இதிலிருந்து தங்களை விடுவிக்கும் படி கேட்டுக்கொண்டார்கள் [4].

முஸ்லிம்களுடன் போராடுகின்ற பைசாண்டன் அரசுக்கு இராணுவ உதவி செய்யும் படி, அரசர் அலேக்ஸியஸ் (Emperor Alexius), ஃப்ளாண்டரின் அரசர் ராபர்ட்(Robert of Flanders) என்பவரை கேட்டுக்கொண்டார். அதே ஆண்டின் இறுதியில், பிரான்சில் கிளேர்மாண்டில்  (Council held at Claremont in France) நடைபெற்ற மற்றொரு கவுன்சிலில், போப்  அர்பன் II, இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். மேலும்  'ஜெருசலேமில் உள்ள புனித ஸ்தலங்களை நோக்கி செல்லுங்கள் ... ஒவ்வொருவரும் தன்னை தான் வெறுத்து  தன் சிலுவையை எடுத்துக்கொண்டு புறப்படுவானாக' என்று ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கு பிரசங்கம் செய்தார். அதை கேட்டுக்கொண்டு இருந்த கிறிஸ்தவர்கள், 'இது கர்த்தருடைய சித்தமாகும், என்று ஆக்ரோஷமாக சத்தமிட்டனர்'.

இது தான் முதல் சிலுவைப்போர் தொடக்கத்தின் கடைசி நிமிடங்களில் நடந்த நிகழ்வுகள்.

முஹம்மது கி.பி 632 ஜூன் 8 அன்று இறந்தார். ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் தங்கள் படைகளை ஒன்றிணைத்து தங்களையும் தங்கள் விசுவாசத்தையும் பாதுகாக்கவேண்டும் என்று முடிவு செய்து,  எழுந்திருக்க‌  அவர்களுக்கு 463  ஆண்டுகள் பிடித்தது.

ஆங்கில மூலம்: https://www.answering-islam.org/Authors/Stenhouse/crusades.01.htm

அடிக்குறிப்புக்கள்:

[1] H. Daniel-Rops, The Church in the Dark Ages, ed. cit., pp. 340, 344.

[2] Register of Gregory VII, III, 19.

[3] H. Daniel-Rops, Cathedral and Crusade, J.M.Dent and Sons, London, 1957, p. 434.

[4] Steven Runciman, A History of the Crusades, ed. cit., vol. i, p. 105.

தேதி: ஜனவரி 6, 2020


ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர்கள் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்