முஸ்லிம்களே! இந்த கேள்வியை நீங்கள் எப்போதாவது கேட்டுள்ளீர்களா?

ஒவ்வொரு முஸ்லிமும் விரும்பி கேட்கும் கேள்வி இது தான்:

இயேசு இறைவன் என்றால், அவர் எங்கு இப்படி சொல்லியுள்ளார் என்று எனக்கு பைபிளிலிருந்து காட்டமுடியுமா?

ஒரு முறை, நான் மத்தேயு 4ம் அத்தியாயத்தை வாசித்துக்கொண்டு இருந்தேன். அப்போது திடீரென்று எனக்குள் ஒரு கேள்வி தோன்றியது, அதாவது “முஸ்லிம்கள் அனைவரும் இந்த கேள்வியை கேட்கும் படி ஏன் போதிக்கப்பட்டுள்ளார்கள்?” என்பதாகும்.

மத்தேயு நற்செய்தி நூலில், சாத்தான் அடிக்கடி இயேசுவிடம் சவால் விடுவதை காணமுடியும், அதாவது “நீ உண்மையாகவே தேவகுமாரன் என்றால், இதை செய்துக்காட்டு” என்று இயேசுவிடம் சவால் விட்டான்.

முஸ்லிம்கள் ”இயேசு இறைவன் என்றுச் சொன்னால். . .” என்ற கேள்வியை கிறிஸ்தவர்களிடம் கேட்கிறார்கள். இதே கேள்வியைத் தான் சாத்தானும் இயேசுக் கிறிஸ்துவிடம் கேட்டான்.

நீங்கள் இந்த கேள்வியை கூர்ந்து கவனித்தால், இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்பது, ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே  சாத்தானுடைய ஒரு யுக்தியாக உள்ளது என்பதை காணமுடியும்.

சாத்தான் அன்று ஏவாளிடம் என்ன கேட்டான் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா?  அவன் தேவனுடைய வார்த்தையை கீழ்கண்டவாறு சந்தேகம் உண்டாகும் படி கேள்வி கேட்டான்:

ஆதியாகமம் 3:1

. . . அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

இங்கு சாத்தான் தேவனுக்கு சவால் விட்டான், தேவனுடைய வார்த்தைக்கு சவால் விட்டான்.

இயேசு சிலுவையில் அறைப்பட்ட அந்த நேரத்தில், அங்கு சாத்தான் கூட இருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா?

மத்தேயு 27:39-43வரையுள்ள வசனங்களை  வாசித்துப் பாருங்கள். மக்களில் சிலர், பிரதான ஆசாரியர்கள் மற்றும் இதர யூத  தலைவர்கள், இயேசுவை எப்படி கேலி செய்தார்கள், சவால் விட்டார்கள் தெரியுமா? 

“நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வாa” என்று கேட்டார்கள்.

ஏதோன் தோட்டத்தில் சவால் விட்ட அதே சாத்தானின் யுக்தி தான், அப்போது இயேசுவின் தெய்வீகத்தைக் குறித்து சவால் விட்டது.

ஏதோன் தோட்டத்தில் சாத்தான் தானாகவே சவால் விட்டான். இயேசுவை சிலுவையில் அறையப்பட்டபோது, அவன் சவால் விட மனிதர்களை பயன்படுத்தினான். அது மட்டுமல்ல, இயேசுவின் தெய்வீகத்தைக் கேள்விகேட்க, யூத மத தலைவர்களையும் பயன்படுத்திக்கொண்டான். இன்று, சாத்தான் 1.5 மில்லியன் ஜனத்தொகைக் கொண்ட முஸ்லிம்களை அதே சவால் விட பயன்படுத்திக்கொண்டு இருக்கிறான். அதாவது, “இயேசு இறைவன் என்றால்,. . . “ என்ற கேள்வியை முஸ்லிம்கள் கேட்கும் படி செய்திருக்கிறான்.

முஸ்லிம்களே! தூக்கத்திலிருந்து எழுந்திருங்கள்! உங்கள் கண்களையும் இருதயங்களையும் திறக்கப்பட முயற்சி செய்யுங்கள். சாத்தானின் தந்திரமான வலையில் விழாதீர்கள். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று அவன் விரும்புகிறானோ, அதனை நீங்கள் அறியாமையில் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களை அவன் அடிமைப் படுத்தி, தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறான்.

அன்று சாத்தான் கிறிஸ்துவிற்கு சவால் விட்டான், இன்று அவனைப் பின்பற்றும் சிலர் கிறிஸ்துவை பின்பற்றுபவர்களிடம் அதே சவாலை விடுகிறார்கள்.  

ஆங்கில மூலம்: HAVE YOU EVER ASKED THIS QUESTION?


ஃபெயித் ப்ரவுசர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்