முஸ்லிம்களே, இஸ்லாமின் படி ஈஸா தம் அழைப்பு பணியில் படுதோல்வி அடைந்தாரா?

முஸ்லிம்களே, இதை சிந்தித்துப் பாருங்கள்.

1. ஈஸா ஒரு இஸ்லாமிய நபி என்றும் இஸ்லாமின் அழைப்புப்பணியை செய்ய வந்தார் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால், இவருடைய அழைப்பு பணியின் மூலமாக‌ ஒருவரும் இஸ்லாமை ஏற்கவில்லை. கி.பி 1 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் வேரூன்றியதாக எந்த பதிவும் சரித்திரத்தில் இல்லை.

2. ஈஸாவிற்கு ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டதாக நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால், அந்த புத்தகம் இப்போது உலகில் இல்லை. அல்லாஹ் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட  அந்த புத்தகத்தை ஈஸா எப்படியோ தொலைத்துவிட்டார் அல்லது அதனை பாதுகாக்க தவறிவிட்டார். ஆச்சரியம் என்னவென்றால் அல்லாஹ் கொடுத்த அந்த புத்தகத்தின் ஒரு  அத்தியாயத்தையும் இன்று ஒரு நபரும் உலகில் அறியமாட்டார்கள்.

3. ஈஸாவை பின்பற்றியவர்கள் (சீடர்கள்) இஸ்லாமிய அழைப்புப்பணியை (தாவா) செய்யவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் அல்லாஹ்வால் ஏமாற்றப்பட்டு, அல்லாஹ் சொல்லாத ஈஸா சொல்லாத மார்க்கத்தை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஒன்று மட்டும் இங்கு சொல்லவேண்டி உள்ளது, அதாவது அல்லாஹ் இறக்கிய புத்தகம் உலகில் இன்று பாதுகாக்கப்படவில்லை, ஆனால், இவர்கள் உருவாக்கிய புத்தகங்கள் இதுவரைக்கும் காக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்களை படித்தால் அல்லாஹ் சொல்லாத செய்திகள் தான் உள்ளது. மேலும் ஈஸா தான் இறைவன் என்று அந்த புத்தகங்கள் சொல்கின்றன. அதனை முஸ்லிம்கள் ஷிர்க் என்றுச் சொல்கிறார்கள். எப்படிப்பட்ட குழப்பத்தை அல்லாஹ் செய்திருக்கிறான் பாருங்கள்.

4. முஸ்லிம்களே, ஈஸா பற்றி இப்படியும் நம்புகிறீர்கள். எந்த மக்களுக்கு ஈஸா இஸ்லாமிய அழைப்புப்பணி (தாவா பணி) செய்ய வந்தாரோ, அந்த மக்களே அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள். அல்லாஹ் அனுப்பிய ஈஸா உதவியற்ற நிலையில் இருந்தார். ஆனால், அல்லாஹ் ஒரு கோழையைப்போல அவரை காப்பாற்றி, அவரது இடத்தில் வேறு ஒரு நபரை இறக்கிவிட்டான். இப்படி செய்து அல்லாஹ் உலக மக்கள் அனைவரையும் முட்டாள்களாக்கிவிட்டான்.

5. கடைசியாக, தான் செய்த குழப்பங்களை சரி செய்ய அல்லாஹ் ஒரு காரியத்தை கடைசியாகச் செய்தான். இதற்காக அல்லாஹ் தன்னுடைய கடைசி தீர்க்கதரிசியை அனுப்பி, முந்தைய வேதங்கள் தொலைந்துவிட்டன அல்லது கறைபடுத்தப்பட்டுவிட்டன என்றுச் சொல்லி, ஒரு புதிய வேதத்தை கொடுத்தான். அல்லாஹ் அனுப்பிய ஈஸா அடைந்த தோல்வியை சரி செய்ய, இந்த கடைசி நபி அனுப்பப்பட்டதாக நீங்கள் நம்புகிறீர்கள்.

முஸ்லிம்களே! இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். அல்லாஹ் அனுப்பிய ஈஸா எப்படிப்பட்ட நபியாக இருந்தார்? ஈஸா இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஒரு சதவிகிதம் (1%) கூட வெற்றிப்பெற்றதாகத் தெரியவில்லையே! இப்படி படுதொல்வி அடைந்த ஈஸாவை நீங்கள் கௌரவப்படுத்துகிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள் என்று ஒரு பக்கம் சொல்கிறீர்கள். ஆனால், இன்னொரு பக்கம், அவர் படுதோல்வி அடைந்ததாகச் குர்‍ஆனும் இஸ்லாமும் சொல்கிறது. இது அவருக்கு அவமானமில்லையா!

உமரின் முடிவுரை:

அல்லாஹ் அனுப்பிய ஈஸாவுடைய பிறப்பு விசேஷமானது என்று நம்புகிறீர்கள். ஆணின் துணையின்றி இயற்கைக்கு அப்பாற்பட்ட விதமாக அவர் பிறந்தார் என்று நம்புகிறீர்கள். வேறு எந்த ஒரு  அல்லாஹ்வின் நபியும் செய்யாத அற்புதங்கள் அவர் செய்ததாக நம்புகிறீர்கள், இருந்தபோதிலும் அவர் மிகப்பெரிய தோல்வி அடைந்தார் என்று இஸ்லாம் சொல்கிறது.

ஈஸா பற்றி குர்‍ஆன் சொல்லும் விவரங்கள் அனைத்தையும் சேர்த்து பார்க்கும் போது ஒரு படுதோல்வி அடைந்த நபியாக ஈஸா இருக்கிறார். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இல்லை, ஈஸா தோல்வி அடையவில்லை! என்று சொல்வீர்களானால், கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து இஸ்லாம் உலகில் இருந்திருக்கவேண்டுமே! அவருக்கு அல்லாஹ் கொடுத்த புத்தகம் உலகில் இருந்திருக்கவேண்டுமே! அல்லாஹ்வின் பெயர் தாங்கிய விளக்கவுரைகள், கடிதங்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து எழுதப்பட்டிருக்கவேண்டுமே! ஆனால், உண்மையில் இப்படிப்பட்ட ஒன்றையும் சரித்திரம் பதிவு செய்துவைக்கவில்லையே!

  • முஸா நபிக்கு இறக்கப்பட்ட தவ்ராத், தாவூத் நபிக்கு (500+ ஆண்டுகள்) பாதுகாக்கப்பட்டு கிடைத்தது.
  • தாவூத் நபிக்கு கொடுக்கப்பட்ட ஜபூர், ஈஸா நபிக்கு (1000+ ஆண்டுகள்) பாதுகாக்கப்பட்டு கிடைத்தது.
  • ஆனால், ஈஸா நபிக்கு அல்லாஹ் கொடுத்த புத்தகம் முஹம்மதுவிற்கு, 600+ ஆண்டுகள்  பாதுகாக்கப்பட்டு கிடைத்திருக்கவேண்டுமல்லவா!

ஈஸாவிற்கு அல்லாஹ் கொடுத்த புத்தகம் பாதுகாக்கப்படவில்லை என்று முஸ்லிம்கள் சொல்கிறீர்கள், கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து ஒரு முஸ்லிமும் வாழ்ந்ததாக, அல்லாஹ்வை தொழுததாக சரித்திரம் இல்லை, அப்படியானால் இஸ்லாமிய ஈஸா ஒரு படுதோல்வி அடைந்த அல்லாஹ்வின் நபி என்று சொல்லலாமா?

ஆங்கில மூலம்: www.faithbrowser.com/was-isa-pbuh-a-failure/


ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்