யார் முதலாவது வந்தார்கள்? ஜோசப் ஸ்மித்தா அல்லது முஹம்மதுவா?
19வது நூற்றாண்டில், ஜோசப் ஸ்மித் (Joseph Smith) என்ற பெயருடைய ஒரு நபர் ஒரு தரிசனத்தை காண்கிறார். ஒரு தேவதூதன் அவரை சந்தித்து, ஒரு புதிய மதத்தை உருவாக்கும் படி சொன்னான். ஏன் புதிய மதம்? ஏனென்றால் முந்தைய மதங்கள் அனைத்தும் கெடுக்கப்பட்டுவிட்டன, எனவே உலகத்துக்கு ஒரு புதிய மதம் தேவைப்படுகிறது என்று அந்த தூதன் கட்டளையிட்டான், என்று ஜோசப் ஸ்மித் கூறினார்.
இதோடு மட்டுமில்லாமல், அவருக்கு ஒரு புதிய புத்தகமும் அதாவது வேதமும் கொடுக்கப்பட்டது, அதன் பெயர் "Book of Mormon (மர்மொன் புத்தகம்)" என்பதாகும். இந்தப் புத்தகம், முந்தைய அனைத்து வேதங்களையும் தள்ளுபடி செய்கிறது என்று கூறினார்.
இந்த ஜோசப் ஸ்மித் என்பவர், மோசே மற்றும் எலியா போன்ற தீர்க்கதரிசிகளின் வழியாக வந்த கடைசி தீர்க்கதரிசி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
இவர் உருவாக்கிய புதிய மதமாகிய "மர்மொன்" என்ற மதம், அமெரிக்காவில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஒரு மதமாக உள்ளது. 2014 ஆம் ஆண்டின் கணக்குப்படி, 1,60,00,000 மக்கள் இதனைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். 2080ல் இவர்களின் வளர்ச்சி 2,50, 00,000 ஆக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு நிமிடம் நில்லுங்கள்.
உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஜோசப் ஸ்மித்தின் மதத்தை கண்டு சிரிக்கிறார்கள். ஏன்?
ஏனென்றால், ஜோசப் ஸ்மித் என்பவருக்கு முன்பாகவே, இஸ்லாம் உலகில் வந்துவிட்டது, மேலும் இவர் செய்த அதே உரிமை பாராட்டலை, முஹம்மது ஏற்கனவே செய்துவிட்டார். முஹம்மதுவிற்கு பின்பு ஜோசப் ஸ்மித் என்பவர் வந்ததால், இவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றும், பொய்யர் என்றும் முஸ்லிம்கள் முத்திரை குத்துகிறார்கள்.
முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, முஹம்மது தீர்க்கதரிசிகளுக்கு முத்திரையாக இருக்கிறார், அதாவது அவர்தான் உலகத்தின் கடைசி தீர்க்கதரிசியாக இருக்கிறார். அதேபோல, குர்ஆன் தான் உலகத்தின் கடைசி வேதமாக இருக்கிறது, ஏனென்றால் முந்தைய வேதங்கள் அனைத்தும் கெடுக்கப்பட்டுவிட்டன. எனவே கடைசியாக குர்ஆன் வெளிப்பட்டது. ஆகையால் இஸ்லாம் தான் உண்மையான மதம் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஒரு முக்கியமான விஷயம், மர்மொன் என்ற மதம் அமெரிக்காவிலே அதிவேகமாக வளருகிறது என்பதினால் அது உண்மையான மதமாக இருக்க முடியாது என முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆகையால் ஜோசப் ஸ்மித் என்பவர் ஒரு பொய்யர் என்று முஸ்லிம்கள் அவரை புறக்கணிக்கிறார்கள்.
சரி, இருக்கட்டும் இதற்கு என்ன பிரச்சனை இப்போது என்று கேட்கத்தோன்றுகிறதா? இன்னும் ஒரே நிமிடம், பொறுமையாக இருங்கள் விடை கிடைத்துவிடும்.
இயேசு கிறிஸ்து, ஒரு உவமையின் மூலம் "தாம் கடைசியாக வந்தவர்" என்று சொன்னார்.
- “கடைசியிலே அவன் (தேவன்): என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை (இயேசுவை) அவர்களிடத்தில் அனுப்பினான்.” (மத்தேயு 21:37)* அடைப்பிற்குள் இருப்பவைகளை நான் எழுதினேன்
- அவரை(இயேசுவை) பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்(யோவான் 6:27)
- “நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.” (மத்தேயு 11:13)
- தேவனுடைய வருகைக்கு வழியை ஆயத்தம் செய்யும்படி யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டான் (மல்கியா 3:1 & மாற்கு 1:12).
- “உலக மக்களுக்கு தேவனுடைய இராஜ்ஜியத்தின் நற்செய்தியை கொடுக்க இயேசு உலகில் வந்தார் “(யோவான் 5:39-40, 10:10).
உங்களுக்கு (இயேசுவிற்கு) பிறகு யாராவது வரவேண்டியுள்ளதா? என்ற கேள்வி இயேசுவிடம் கேட்கப்பட்டடது.
- “வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.” (மத்தேயு 11:3)
இந்த கேள்விக்கு இயேசு பதில் அளிக்கும் போது, தாம் செய்துக்கொண்டு இருக்கும் அற்புதங்கள், மற்றும் அடையாளங்களை பட்டியலிடுகிறார், இதன் மூலமாக, தனக்கு பிறகு இன்னொருவர் வரவேண்டிய அவசியமில்லை என்று இயேசு சொல்கிறார்.
- இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். (மத்தேயு 11:4-6)
பைபிள் மாற்றப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்கள் சொல்கிறார்களே, இது பற்றி என்ன? அதே போல, ஜோசப் ஸ்மித் குர்ஆனும் முந்தைய வேதங்களும் மாற்றப்பட்டுவிட்டது என்கிறாரே இது பற்றி என்ன? ஜோசப் ஸ்மித்தின் இந்த வாதத்தை முஸ்லிம்களிடம் கூறினால், "இல்லை, இல்லை, குர்ஆன் மாற்றப்படவில்லை, ஏனென்றால், குர்ஆனை மாற்றமுடியாது என்று குர்ஆனே சொல்கிறது" என்ற பதிலைச் சொல்வார்கள்.
- “. . .அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை . . .” (குர்ஆன் 6:115)
ஓ.. அப்படியானால், பைபிளும் இதே போலச் சொல்கிறதே! இதற்கு முஸ்லிம்களின் பதில் என்ன?
- . . . நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது. (ஏசாயா 40:8)
இயேசு தம்முடைய வார்த்தைகள் பற்றி கூறும் போது:
- வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (மாற்கு 13:31)
கிறிஸ்தவம் தான் உண்மையான மார்க்கம் என்று பைபிள் கூறுகின்றதா?
மத்தேயு (13:24-29 & 36-43) வசனங்களின் படி, இயேசு ஒரு உவமையின் மூலமாக, இராஜ்ஜியத்தின் மக்களாகிய உண்மை கிறிஸ்தவர்கள், நல்ல விதைகளாக அவரால் உலகில் விதைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறார்.
அதன் பிறகு, சாத்தான் வந்து கெட்ட விதைகளை நல்ல விதைகளுக்கு மத்தியில் விதைத்தான். (அவைகள் தான் மர்மொன் மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களாகிய களைகள் என்று இயேசு கூறுகிறார்). இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த களைகள் மிகவும் வேகமாக வளருகின்றது என்று இயேசு சொல்கிறார். (அமெரிக்காவில் மர்மொன் வேகமாக வளரும் மதம், இஸ்லாம் உலகில் வேகமாக வளரும் மதமென்று சொல்கிறார்கள்).
கடைசியில், இயேசு திரும்ப வரும் போது, இந்த களைகள் பிடுங்கப்பட்டு அக்கினியில் போடப்படும் என்று இயேசு தன் உவமையை முடித்தார்.
- மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன். (மத்தேயு 13:41-43)
கிறிஸ்தவத்திற்கு பிறகு வரும் புத்தகங்கள் (குர்ஆன் & மர்மொன் புத்தகம்), தீர்க்கதரிசிகள் (முஹம்மது & ஜோசப் ஸ்மித்), மதங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை கவனித்தீர்களா?
- வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலாத்தியர் 1: 7,8,9)
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)
மூலம: http://www.faithbrowser.com/whos-first/