ஏன் 'முஹம்மதுவின் வாழ்க்கை' படமாக அடிக்கடி இஸ்லாமியரல்லாதவர்களால் எடுக்கப்படுகின்றது?

முன்னுரை:

இஸ்லாமியர்கள் "முஹம்மதுவை" நபியாக கருதுகின்றனர். இஸ்லாமின் ஆணிவேர் முஹம்மது ஆவார். சமீப காலங்களில் இந்த முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படங்கள் இஸ்லாமியரல்லாதவர்களால் அதிகமாக படமாக்கப்பட்டு வருகின்றது. உதாரணத்திற்கு, கீழ்கண்ட இரண்டு வீடியோ படங்களைக் கூறலாம்:

1) முஸ்லிம்களின் அறியாமை (The Innocence of the Muslims) [1]

2) அறியாமையுள்ள நபி (The Innocent Prophet) [2]

மேலும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதையாகவும்  (காமிக்ஸ்) வெளிவந்துள்ளது, இதன் தொடுப்பை கீழே காணலாம்.

Biography of Prophet Muhammad - Illustrated - Vol. 1  

(இந்த படக்கதை புத்தகம், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இந்தோனேஷியன் மொழிகளில் கிடைக்கிறது).[3]

மேற்கண்ட வீடியோக்களில் "அறியாமையுள்ள நபி" என்ற வீடியோவை இந்த வாரம் நான் பார்த்தேன். இந்த வீடியோவை பார்த்தவுடன் இந்த சிறிய கட்டுரையை எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

இஸ்லாமியரல்லாதவர்கள், ஏன் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை சொல்ல முற்படுகிறார்கள்? இவர்களுக்கு இதைப் பற்றிய ஆர்வம் எங்கே இருந்து வந்தது? ஏன் தங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவழித்து இந்த வீடியோ படங்களை எடுக்கிறார்கள்? என்று சில கேள்விகள் எனக்குள் எழுந்தன. அதற்கான பதிலை தேடிப்பார்த்ததில் (உண்மையில் சொல்லவேண்டுமென்றால் சிந்தித்து பார்த்ததில்) உதித்தது தான் இந்த சிறிய கட்டுரை.

ஏன் இஸ்லாமியரல்லாதவர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறார்கள்?

1) ஏனென்றால், இஸ்லாமியர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இமாலய அளவிற்கு வேறுபாடு "இஸ்லாமியரல்லாதவர்களுக்குத்" தெரிகின்றது.

பொதுவாக தற்கால இஸ்லாமியர்களின் பேச்சுக்களையும், புத்தகங்களையும் நாம் படித்தால், அவர்களின் இஸ்லாமிய மார்க்கம்  ஒரு அழகான மார்க்கமென்றும், அமைதியை விரும்பும் மார்க்கமென்றும் எழுதியிருப்பார்கள். இவைகளை படிக்கும், வேற்று மார்க்கத்தார்களுக்கும், நாத்தீகர்களுக்கும் இஸ்லாம் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டாகிவிடும்.

அதன் பிறகு இஸ்லாமியர்களின் செயல்களையும், இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளையும் மக்கள் பார்க்கும் போது, இஸ்லாமிலிருந்து வெளியேறியவர்களை கொல்ல இஸ்லாம் துடிப்பதை மக்கள் பார்க்கும் போது, இஸ்லாமியர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் மாற்று மார்க்கத்தார்களுக்கு புரிந்துவிடுகிறது. இது இஸ்லாமியர்களின் நம்பிக்கைத் துரோகம் என்றும், ஏமாற்று வேலை என்றும் மக்கள் புரிந்துக்கொள்கின்றனர்.

இஸ்லாமியர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம் என்று கேள்வி கேட்டால், அதற்கும் ஒரு சப்பைக் கட்டு வைத்திருப்பார்கள் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களின் இந்த பதிலை கேட்கும் போது, "நம்மை அவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து பேசுகின்றார்கள்" என்பதை தெளிவாக புரிந்துவிடும். 

ஆகையால், இஸ்லாமியர்களிடம் சென்று 'எங்களுக்கு இஸ்லாமை விவரியுங்கள்' என்றுக் கேட்பது ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதை அறிந்துக்கொள்ளும் இஸ்லாமியரல்லாதவர்கள் தாங்களாக இஸ்லாமிய மூல நூல்களாகிய குர்-ஆன், ஹதீஸ்கள் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ளும் இஸ்லாமியரல்லாதவர்கள், தங்களுக்கு ஏற்றபடி வீடியோ படங்களை வெளியிட, படக்கதைகள் வெளியிட ஆரம்பித்துவிடுகின்றனர். இப்படி வெளியிடும் போது, சிலர் நேர்மையற்ற முறையில் சில சொந்த கருத்துக்களையும் சேர்த்து வெளியிடுகின்றனர்.

இந்த நிலைக்கு யார் காரணம்? சிந்தியுங்கள். இஸ்லாம் பற்றிய உண்மைகளை மறைக்கும் இஸ்லாமியர்கள் தான்.

2) முஹம்மதுவின் இருண்ட பக்கங்களை மறைத்து, இஸ்லாமியர்கள் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அந்த இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர மற்றவர்கள் முயற்சிக்கிறார்கள்.

முஸ்லிம்கள் 'இஸ்லாமிய உண்மைகளை' மட்டும் மறைப்பதில்லை, முஹம்மது பற்றிய சில உண்மைகளை அப்படியே மறைக்க முயற்சிக்கிறார்கள். அதாவது இஸ்லாமிய மூல நூல்கள் சொல்லும் விவரங்களில் உள்ள சில தர்மசங்கடமான நிகழ்வுகளை வெளியே சொல்லாமல் மறைக்கின்றனர். இதனை அறிந்துக்கொள்ளும் இஸ்லாமியரல்லாத மக்கள், இஸ்லாமிய மூல நூல்களை படித்து, ஆராய்ந்துப்பார்த்து முஸ்லிம்களின் மறைக்கப்பட்ட முழுபூசணிக்காயை வெளியே காட்டிவிடுகின்றனர். 

எந்த ஒரு மார்க்கமாக இருந்தாலும், அந்த மார்க்கத்தின்: 

அ) இறைவன்

ஆ) தூதுவன் (ஸ்தாபகர்), 

இ) மார்க்க கட்டளைகள் அடங்கிய வேத புத்தகம்

ஆகிய மூன்றும் அந்த மார்க்கத்தின் உண்மை நிலையை அறிந்துக்கொள்ள உதவும் முக்கியமான ஆதாரங்களாகும்.  இஸ்லாமியர்கள் இந்த மூன்று விஷயங்களிலும் பொய்களை கலந்து இதர மக்களுக்கு போதிக்கிறார்கள். இவைகளை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடியாது. முக்கியமாக இஸ்லாமிய நபியாகிய முஹம்மது என்பவர் ஒரு நல்ல வழிகாட்டி என்று பொய்களை அள்ளிவீசுகிறார்கள். ஆனால், அவரின் வாழ்க்கை சரிதையை படிக்கும் இதர மக்கள் முஹம்மதுவின் வாழ்வை நெருப்பில் புடமிட்டு சோதித்துப் பார்க்கும் போது, அவர் சுத்த தங்கமல்ல, அவர் ஒரு கலப்படமுள்ள தங்கம் என்பதை உணர்ந்து அதனை இதர மக்களுக்கு அறிவிக்க முயற்சி எடுக்கிறார்கள். இதன் பயனாக அனேக வீடியோ படங்கள் வெளியாகின்றன. 

இதற்கு காரணம் யார்? உண்மையை மறைத்து பொய்களை பேசும் முஸ்லிம்கள் தானே!

முஸ்லிம்கள் மடியில் நெருப்பை வைத்துக்கொண்டு அதனை மறைக்க முயன்றால் அது பயனளிக்காது என்பதை உணரமாட்டார்களா?

3) முஸ்லிம்களே, நீங்கள் ஏன் உங்கள் முஹம்மது பற்றிய 'அனைத்து' உண்மைகளையும் மக்களுக்கு  விளக்கக்கூடாது?

சில முஸ்லிம்கள் இப்போது கீழ்கண்டவிதமாக கேள்விகளை என்னிடம் கேட்கலாம்:

அ) நாங்கள் இஸ்லாம் பற்றிய விளக்க புத்தகங்களை எழுதவில்லையா?

ஆ) முஹம்மதுவின் வாழ்க்கை பற்றிய புத்தகங்களை எழுதவில்லையா?

இ) "த மெசேஜ் (The Message)" என்ற படம் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுக்கப்பட்டுள்ளதே?

அருமையான முஸ்லிகளே, நீங்கள் சொன்ன மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் உண்மை தான். ஆனால், மேற்கண்ட அனைத்து விஷயங்களிலும் நீங்கள் 100% உண்மையை சொல்லியுள்ளீர்களா என்பது தான் கேள்வி?  இஸ்லாமியரல்லாதவர்களுக்கு படிக்க நீங்கள் கொடுக்கும் புத்தகங்களில் முஹம்மது பற்றிய அனைத்து விவரங்களும் சொல்லப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை. அனேக இருண்ட பக்கங்களை நீங்கள் மறைத்து இருக்கிறீர்கள். முஹம்மதுவைப் பற்றி இஸ்லாமிய மூல நூல்கள் சொல்லும் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்கிறீர்கள், அதே மூல நூல்கள் சொல்லும்  முஹம்மது பற்றிய தர்மசங்கடமான விஷயங்கள் பற்றி மூச்சு விடுவதில்லையே, அது ஏன்?

ஆகையால், தான் இஸ்லாமியரல்லாதவர்கள் உங்கள் இஸ்லாமை விளக்க முன்வந்துவிட்டனர், உங்கள் நபியைப் பற்றி அனைத்து விவரங்களையும் படித்து ஆராய முன்வந்துவிட்டனர். 

முஸ்லிம்களே, இது 19ம் நூற்றாண்டு காலக்கட்டம் அல்ல, இது 21ம் நூற்றாண்டு ஆகும். இணையம் வந்துவிட்டது, மக்களின் அறிவு பசிக்கு, ஆர்வ பசிக்கு, ஆய்வு பசிக்கு சரியான தீணி கிடைக்க எந்த தடையும் இப்போது இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் மனதில் ஆழமாக பதித்துவைத்துக் கொள்ளுங்கள், அதாவது நீங்கள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கேள்வி கேட்காமல் நம்பவேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்காதீர்கள். ஒருவேளை இஸ்லாமியர்கள் இப்படி வாழக்கூடும், ஆனால், இஸ்லாமியரல்லாதவர்கள் இனி உங்களின் அனைத்து விஷயங்களையும் கேட்டுவிட்டு, தலை ஆட்டமுடியாது. 

எனவே, நீங்கள் இஸ்லாமை சரியாக விளக்கப்போகிறீர்களா? அல்லது மற்றவர்கள் அதனை விளக்க இடம் கொடுக்கப்போகிறீர்களா? 

என்னைப்பொறுத்தமட்டில், நீங்கள் இஸ்லாமை விளக்கும் போது எப்படி சிலவற்றை மறைக்கிறீர்களோ அதே போல, இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்ட அந்த வீடியோ படங்களை எடுத்த மற்றவர்களும், சிலவற்றை சுயமாக சேர்த்து வெளியிட்டுள்ளனர். நீங்கள் இருவரும் தவறு செய்கிறீர்கள். ஆனால், இதனால் யாருக்கு அதிக நஷ்டம் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

இஸ்லாமிய அறிஞர்களாகிய உங்கள் செயல்களினாலும், இஸ்லாமிய தீவிரவாதிகளினாலும், சாதாரண நல்ல முஸ்லிம்கள் அனேக இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஹைதராபாத் போன்ற பட்டணங்களில் இஸ்லாமியர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட மற்ற மக்கள் பயப்படுகிறார்கள். முக்கியமாக, ஒரு நல்ல வேலையில் இருக்கும் ஒரு நல்ல முஸ்லிம், தாடி வைத்து தொப்பி வைத்துக்கொண்டும்  வீட்டை வாடகைக்கு கேட்டால், வீடு காலியாக இருந்தாலும் மக்கள் அவருக்கு வாடகைக்கு கொடுக்க பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நபர் தெருவில் நடந்துச் செல்லும் போது, மற்ற மக்கள் ஒரு மாதிரியாக (இவர் ஒரு தீவிரவாதியாக இருப்பாரோ என்ற எண்ணத்தில்) பார்க்கிறார்கள். 

இஸ்லாம் பற்றி உள்ளதை உள்ளதென்று எழுதவும், பேசவும் உங்களுக்கு ஏன் தயக்கம்? மற்றவர்கள் அந்த வேலையை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள ஏன் நீங்கள் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறீர்கள்? 

4) இஸ்லாமியரல்லாதவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, ஒரு இந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது நாத்தீகராகவோ இருந்தாலும் சரி, இஸ்லாம் பற்றி உண்மையை நீங்கள் அறிந்துக்கொண்டால், அதனை அப்படியே சமுதாயத்திற்குச் சொல்ல முற்படுங்கள். அதனோடு எவைகளையும் சேர்க்கவேண்டாம். இஸ்லாமிய மூல நூல்களில் சொல்லப்பட்ட 'இஸ்லாமை' அப்படியே நீங்கள் சமுதாயத்திற்குச் சொன்னால் போதும், சமுதாயம் விழிப்புணர்ச்சி அடைந்துவிடும்.  உண்மையை மனிதன் அறியும் போது, அந்த உண்மை அவனை விடுதலையாக்கிவிடும், அந்த சக்தி உண்மைக்கு உண்டு, அதனை கிரகித்துக்கொள்ளும் தன்மையும் மனித மனதுக்கு உண்டு.

எனவே, இஸ்லாமிய படக்கதைகள், வீடியோ படங்கள் எடுக்கும் பொது, உள்ளதை உள்ளது போலவே சொல்லப்பாருங்கள், அதனால் அதிக பயன் உண்டாகும்.

நான் தனிப்பட்ட முறையில் மேலே சுட்டிக்காட்டப்பட்ட இரண்டு வீடியோக்களை பார்த்தேன், அவைகளில் இஸ்லாம் பற்றிய அனேக மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியே கொண்டுவரப்பட்டது, அதே நேரத்தில், சில பொய்யான கற்பனையான விவரங்கள் ஆங்காங்கே இருப்பதை என்னால் காணமுடிகிறது.   எனவே, இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும் என்ற நல்ல எண்ணம் யாருக்கு இருந்தாலும் சரி, அவர்கள் இஸ்லாம் பற்றிய மூல நூல்களில் சொல்லப்பட்ட உண்மைகளை மட்டுமே சொல்லவேண்டும்.

முடிவுரை:

முஸ்லிம்களே, இப்போது முடிவு உங்கள் கையில் உள்ளது. உண்மை இஸ்லாமை சமுதாயத்திற்கு நீங்கள் சொல்லப்போகிறீர்களா? அல்லது இஸ்லாமியரல்லாதவர்கள் உங்கள் இஸ்லாமை விளக்க இடம் கொடுக்கப்போகிறீர்களா?  இது ஏழாம் நூற்றாண்டு அல்ல. நீங்கள் சொல்வதையெல்லாம் அப்படியே நம்பும் மக்கள், மிகக்குறைவு என்பதை மனதில் வையுங்கள். 

ஒவ்வொரு ஆண்டும், ஏதோ ஒரு விதத்தில் இஸ்லாம் மற்ற மக்களால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அது ஒரு படமாகவோ, புத்தகமாகவோ வெளிவருகிறது. இனி காலம் செல்லாது, உண்மை மட்டுமே நிலைத்து நிற்கும், பொய் தானாக அழிந்துவிடும்.

ஒரு வேளை நீங்கள் சொல்லலாம், கடந்த 14 நூற்றாண்டுகளாக இஸ்லாம் இந்த சவால்களை சந்தித்துக்கொண்டு வருகிறது, இருந்தும் நிலைத்து நிற்கிறது என்று நீங்கள் சொல்லக்கூடும், ஆனால், ஒரு விஷயம் மனதில் வையுங்கள், இது அந்த காலமல்ல, இது 21ம் நூற்றாண்டு, இன்று மனிதனுக்கு அரபி மொழியில் உள்ள ஒரு விவரம் தேவைப்பட்டால், உங்களிடம் விளக்கத்திற்கு வருவதில்லை, இணையத்தில் ஒரு சொடுக்கில் தெரிந்துக்கொள்கிறான். எனவே, இஸ்லாமியரல்லாதவர்களை மிகவும் தரங்குறைவாக நினைக்காதீர்கள்.

பின்குறிப்புகள்

[1] The Innocence of the Muslims – யூடியூபில் தேடிப்பாருங்கள்.

[2] The Innocent Prophet - யூடியூபில் தேடிப்பாருங்கள்

[3] முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - www.prophetmuhammadillustrated.com

ஹிந்தி - www.prophetmuhammadillustrated.com/hindi.html

இந்தோனேசியன் - www.prophetmuhammadillustrated.com/buku-riwayat-hidup-nabi-muhammad.html

ஆங்கிலம் - http://www.prophetmuhammadillustrated.com/the-book.html

மூலம்: http://isakoran.blogspot.in/2012/12/blog-post.html

உமரின் இதர தலைப்புகளில் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்