முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 4 - காஸாவின் அழிவிற்கு மூலக்காரணம் ஹமாஸ்
முன்னுரை:
இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:
முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்:
2006ம் ஆண்டு ஜனவரி மாதம், பாலஸ்தீன பகுதியில் (காஸா மற்றும் மேற்கு கரை) தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஹமாஸ் கட்சி 44.45% ஓட்டு பெற்று ஆட்சி அமைத்தது, ஃபதா என்ற முன்னாள் கட்சி 41.43% ஓட்டு பெற்று தோல்வி அடைந்தது.[1]
தேர்தலில் ஒரு கட்சி வெற்றிப்பெற்றால், பொதுவாக நாடு அவர்களிடம் எதனை எதிர்ப்பார்க்கும்?
- நாட்டின் வளர்ச்சிக்காக அந்த கட்சி பாடுபடும்.
- நாட்டின் வேலையில்லா பிரச்சனையை அது தீர்த்து வைக்கும்.
- நாட்டு மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தும்.
- நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, அதன் மூலம் மக்களின் தரத்தை உயர்த்தபாடுபடும்.
- இன்னும் இது போல நாட்டின் நலன் சம்மந்தப்பட்ட விஷயங்களின் அந்த கட்சி முக்கியத்துவம் காட்டி, நாட்டை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.
இப்படி நாட்டின் நலனுக்காக அந்த கட்சி பாடுபட்டால், அடுத்த முறை தேர்தல் வரும் போது, மக்கள் அந்த கட்சிக்கே ஓட்டுபோடுவார்கள்.
ஆனால், ஹமாஸ் என்ன செய்தது? தன் மக்களின் நலனுக்காக பாடுபட்டதா? அல்லது அவர்களின் அழிவுக்கு அஸ்திபாரம் போட்டு, தன் மக்களை தன் கைகளினாலே கொன்றுக்கொண்டு இருக்கிறதா?
ஹமாஸ் 2006லிருந்து காஸாவிற்கு செய்ததென்ன?
1) காஸாவை கைப்பற்றிய ஹமாஸ் – ஜூன் 2007
ஃபதா என்ற முன்னாள் கட்சிக்கும், ஹமாஸுக்கும் சண்டை மூண்டது, ஹமாஸ் ஃபதாவை வீழ்த்தியது. இந்த சண்டையில் 161 பேர் கொல்லப்பட்டனர், 700 பேர் காயமுற்றனர். ஃபதா கட்சியின் தலைவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள்.[2]
ஹமாஸ் முதன் முதலில் 1987ம் ஆண்டு உருவானது.
2) காஸாவில் இன்றுவரை அடுத்த தேர்தல் நடைபெறவில்லை
மேற்கண்ட சண்டைக்கு பிறகு காஸா முழுவதுமாக ஹமாஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இப்போது ஹமாஸ் என்ன செய்யவேண்டும்? தன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமல்லவா?
நாட்டு மக்களுக்கு ஒரு கட்சி எவைகளை செய்யவேண்டுமோ, அவைகளைச் செய்யாமல், இது முழுவதுமாக ஒரு "தீவிரவாத குழுவாக" செயல்பட்டது.
தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், ஊடகங்கள் "ஹமாஸை ஆயுதக்குழு" என்று அழைக்கின்றனர். இப்படி "ஆயுதக்குழு" என்று அழைத்தால் மட்டும் அவர்களின் செயல்பாடுகள் நல்லவைகளாக மாறிவிடுமா என்ன?
3) மருத்துவமனைகளில், மசூதிகளில், பள்ளிக்கூடங்களில் தீவிரவாத தலைமையகம் - ஸிஃபா ஆஸ்பிடல்
முஸ்லிம்கள் ஐந்து வேளைகளில் தொழுகை செய்யும் மசூதிகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என்று மக்கள் கூடும் இடங்களுக்கு பக்கத்தில் தங்கள் தீவிரவாத செயல்களை நடத்துவதற்கான சுரங்கங்கள், தலைமையகங்கள், மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் கிடங்குகள் என்று பலவற்றை நிருவி, தங்கள் தீவிரவாத செயல்களை செய்துக்கொண்டு வருகிறார்கள்.
காஸாவின் மிகப்பெரிய ஸிஃபா மருத்துவமனை, தீவிரவாதிகள் தங்களை மறைத்துக்கொள்ளும் இடமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அதில் பல ஆயுத கிடங்குகளும், ஹமாஸின் தலைமையகமும் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இன்னும் சில நாட்களில் ஹமாஸின் உண்மை முகம் உலகிற்கு தெரியவரும்.[3]
4) ஹமாஸின் தீவிரவாத தாக்குதல்கள்
ஹமாஸ் தீவிரவாத குழுவினால் 2000 லிருந்து 2004 வரை, 425 தாக்குதல்களை செய்து, 400 இஸ்ரேல் குடிமக்களை கொன்றுள்ளார்கள், மேலும் 2000 பேர் காயமுற்றுள்ளனர்.[4]
From 2000 to 2004, Hamas was responsible for killing nearly 400 Israelis and wounding more than 2,000 in 425 attacks, according to the Israeli Ministry of Foreign Affairs. From 2001 through May 2008, Hamas launched more than 3,000 Qassam rockets and 2,500 mortar attacks into Israel. Source: Hamas - Wikipedia
பல நாடுகள் ஹமாஸ் குழுவை "தீவிரவாத குழுவாக" அடையாளப்படுத்துகின்றன.
இன்னும் ஹமாஸ் தீவிரவாதிகள் செய்த வன்முறை செயல்கள் பற்றிய இதர விவரங்களை இந்த தொடுப்பில் (Hamas - Wikipedia) சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள்.
5) ஹமாஸ் காஸா மக்களுக்கு என்ன செய்திருக்கலாம்?
ஹமாஸை நம்பி காஸா மக்கள் (மேற்கு கரை மக்களும்) அதற்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்கவைத்தார்கள், பதவியில் அமர வைத்தார்கள்.
இஸ்ரேல் காஸா மக்களை கொல்கிறது என்று இன்று வாய் கிழிய கத்துகிறோமே! காஸாவிற்கு விடுதலை வேண்டுமென்று கத்துகிறோமே! காஸா மக்களுக்கு கடந்த 17 ஆண்டுகளாக ஹமாஸ் என்ன நல்ல காரியங்களை செய்துள்ளது என்று பட்டியலிடமுடியுமா?
ஐக்கிய நாடுகள் சபையின் 2022ம் அறிக்கையின் படி [5],
- 80% காஸா மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகள் நம்பியே வாழுகிறார்கள்.
- அவர்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை
- 65% மக்கள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
- 45% மக்களுக்கு வேலையில்லை.
நாட்டு மக்களின் நிலைமை இப்படி இருக்கும் போது: ஹமாஸ் தீவிரவாத அரசாங்கம் என்ன செய்துக்கொண்டு இருக்கிறது என்பதையும், அது என்ன செய்திருக்கவேண்டும் என்பதையும் பாருங்கள்:
a) வெளி நாடுகளிலிருந்து வரும் உதவிகளை, பொருட்களை தங்கள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக காஸா மக்களுக்கு வரும் உதவிகளையும் அவர்களுக்கு கிடைக்கச் செய்யாமல், அவைகளை திருடிக்கொண்டு, தங்கள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் ஹமாஸ் தீவிரவாதிகள்.
b) காஸா நிலப்பரப்பில் உள்ள பல அடிகள் தோண்டி, அவைகளில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக சுரங்கங்களை உருவாக்கியுள்ளார்கள். அவைகள் மூலமாக ஆயுத கடத்தல்களைச் செய்கிறார்கள். இதன் மூலமாக இஸ்ரேலோடு சண்டையிட்டு, அடிக்கடி அவர்கள் மீது ராக்கெட்டுக்கள் விசுகிறார்கள். இதற்கு பதிலடியாக அவர்கள் திருப்பி அடித்தால், 'அய்யோ அய்யோ என்று கூப்பாடு' போடுகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக ஊடகங்களும் செய்திகளை பதிக்கிறார்கள்.
c) மக்களுக்கு குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது, உட்கொள்ள உணவு கிடையாது, பாதி பேருக்கு வேலை கிடையாது, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், சுரங்கங்களை அமைத்து, ஆயுதங்களை சேகரித்து, இப்படி பக்கத்து நாடு மீது தாக்குதல் செய்தால், அவர்கள் வந்து "கன்னத்தை தொட்டு முத்தமா கொடுப்பார்கள்?".
d) இஸ்ரேல் அனுமதித்தால் தான் காஸா மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உதவி, உணவுகள், மற்றும் மின்சாரம் போன்றவை கிடைக்கும், இஸ்ரேலின் வழியாகத் தான் இந்த உதவிகள் அவர்களை போய்ச் சேரும். நாட்டின் நிலை இப்படி இருக்கும் போது, அவர்கள் மீதே ஹமாஸ் தாக்குதல் செய்தால், ரோஷமுள்ள எந்த நாடும் என்ன செய்யும், இஸ்ரேல் இன்று செய்துக்கொண்டு இருக்கும் செயலைத் தான் செய்யும்.
e) இந்த வரியை எழுதுவதற்கு மனதுக்கு துக்கமாகத் தான் இருக்கிறது, இருந்தாலும் சிலருக்கு புரியவேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன்: பிச்சை எடுத்து சாப்பிடும் உனக்கே இவ்வளவு திமிரு இருந்தால், சுயமாக உழைத்து தன் சொந்த உணவை சாப்பிடும் இஸ்ரேலுக்கு எவ்வளவு திமிரு இருக்கும்.
f) இஸ்ரேல் அனுமதித்தால் தான் உனக்கு உணவு, இஸ்ரேல் அனுமதித்தால் தான் உனக்கு மின்சாரம், இன்டர்னெட் போன்ற தொலைத்தொடர்பு வசதிகள், இஸ்ரேல் அனுமதித்தால் தான் நீ வாழவே முடியும், இல்லையென்றால் "பசியாலேயே நீ அதாவது காஸா மக்கள்" சாகவேண்டும். இப்படிப்பட்ட துரதிஷ்டமான இடத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் போது, ஹமாஸ் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கவேண்டுமல்லவா?
g) பாலஸ்தீன மக்கள் 55000 பேருக்கு இஸ்ரெல் நாடு வேலை வாய்ப்பு கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழி வகுத்து கொடுத்து, அவர்களின் வாழ்வு கூட உயரட்டும் என்று இஸ்ரேல் உதவி செய்தால், ஹமாஸ் செய்வதைப் பார்த்தீர்களா? உணவு போடுகின்ற வீட்டுக்கே துரோகம் செய்யும் மக்கள் தான் இந்த ஹமாஸ்.
In 2011, the Palestinian Authority (PA) claimed it would take actions to limit the number of Palestinians who are employed in Israel and in settlements. Shaher Saad, the Secretary General of the Palestinian workers association said that such action can't be done because the PA doesn't provide any alternative. He stated that 35,000 Palestinian workers are employed within Israel and in the settlements which provide the local economy with 2 billion dollars budget every year.[4]
In 2013, Haaretz reported that 48,000 Palestinians are legally employed in Israel and Israeli settlements, the highest number since the outbreak of the Second Intifada. It also states that according to evaluations, up to 30,000 worked illegally without a work permit.[5]
முடிவுரை: ஹமாஸ் அழிந்தால், காஸா மக்கள் நிம்மதியாக வாழலாம்:
மேற்கண்ட விவரங்களை நடுநிலையோடு படித்து, இன்னும் மேலதிக ஆய்வுகளை இணையத்தில் படித்துப் பார்த்து, 'தற்போதைய' சூழ்நிலையை கவனித்துப் பாருங்கள்.
ஹமாஸ் தீவிரவாதிகளை நாங்கள் அழிக்கப்போகிறோம், காஸா மக்களே நீங்கள் தப்பித்து காஸாவின் இதர பகுதிக்குச் சென்றுவிடுங்கள் என்று இஸ்ரேல் நாடு எச்சரிக்கை கொடுக்கும் போது, ஹமாஸ் தலைவர்கள் கத்தார், துருக்கி போன்ற நாடுகளில் ஏசி அறைகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அமர்ந்துக்கொண்டு, "காஸா மக்களே நீங்கள் போகாதீர்கள்" என்று வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்.
உனக்கு உன் மக்கள் மீது அக்கரை இருந்தால், அவர்களோடு காஸாவில் இருந்துக்கொண்டு நீ உதவி செய்திருக்கவேண்டும், இப்படி பாதுகாப்பான நாடுகளில் நட்சத்திர ஹோட்டல்களில் அமர்ந்துக்கொண்டு காஸா மக்களின் உயிர்களோடு விளையாடக்கூடாது.
- இஸ்ரேல் சொல்கிறது, "ஓடிப்போ, உயிர்தப்பித்துக்கொள்".
- ஹமாஸ் சொல்கிறது, "ஓடாதே செத்துமடி".
இப்போது யார் காஸா மக்கள் மீது அக்கரை கொண்டு செயல்படுகிறார்கள்?
ஹமாஸின் கடைசி தலைவன், தொண்டன் அதாவது தீவிரவாதி காஸாவில் இருக்கும் வரை காஸாவிற்கு விடுதலை இல்லை.
இந்த ஹமாஸை வழிநடத்துவது எது? இஸ்லாம். ஒரு சிறிய கேள்வி, இஸ்லாமில் உலகில் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க யாருக்காவது தெம்பு இருக்கிறதா?
இந்த கீழ்கண்ட தொடுப்பில், 2001 லிருந்து இன்று வரை ஆண்டு வாரியாக இந்த அமைதி மார்க்கத்தவர்களின் தீவிரவாத மற்றும் வன்முறை செயல்களால் மரித்தவர்களின் மற்றும் காயப்பட்டவர்களின் பட்டியலை செய்திகளை பாருங்கள்.
குறிப்பு: பாலஸ்தீனம் யாருக்கு சொந்தம்? 1948ல் என்ன நடந்தது என்று தெரியுமா? போன்ற கேள்விகளை கேட்பவர்கள், இன்னும் கொஞ்சம் சரித்திரத்தின் பின்னாகச் சென்று, கி.பி. 610க்கு பிறகு, முஹம்மதுவும் அவரது கலிஃபாக்கள் அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி போன்றவர்கள் என்ன செய்தார்கள் என்று படித்து வாருங்கள். உமர் எப்போது எருசலேமை பிடித்தார்? ஏன் பிடித்தார்? போன்ற சரித்திரத்தை படித்துவிட்டு வாருங்கள். அன்று கிறிஸ்தவர்களும் யூதர்களும் இருந்த இடத்தை/எருசலேமை கலிஃபா உமர் ஆக்கிரமித்துவிட்டு, இன்று பாலஸ்தீனம் எங்களுக்குத் தான் என்றுச் சொல்வதற்கு முஸ்லிம்களுக்கு கொஞ்சமாவது சரித்திர அறிவு இருக்கிறதா? என்று கேள்வி கேட்கத்தோன்றுகிறது. கலிஃபா உமரும் முஸ்லிம்களும் எருசலேமுக்கு வந்தேரிகள் தானே! இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம். இந்த வரிகளை படித்து ரோஷம் பொத்திக்கொண்டு வந்தால், உடனே சரித்திரத்தை எடுத்துப் பாருங்கள், இஸ்லாம் ஒன்றும் அமைதி மார்க்கமல்ல, அது ஒரு தீவிரவாத மார்க்கமென்று சரித்திரம் சொல்லும். அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருந்த நாடுகளை வலியச் சென்று பிடித்தவர்கள் தானே முஹம்மதுவும், கலிஃபாக்களும். இந்த இலட்சணத்தில், 'இஸ்லாம் ஒரு அமைதிமார்க்கம்' என்ற பொய் வேறு!
References:
[1] 2006 Palestinian legislative election - Wikipedia
[2] Battle of Gaza (2007) - Wikipedia
[3] Al-Shifa Hospital - Wikipedia
[4] Hamas - Wikipedia
[5] Prior to current crisis, decades-long blockade hollowed Gaza’s economy, leaving 80% of population dependent on international aid | UNCTAD
[6] Palestinian workers in Israel - Wikipedia