சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: முஹம்மது - 100 சரித்திர புருஷர்களில் முதலாவது இடம் பிடித்தவர் (491-500) - பாகம் 21

சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 490 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். 

இந்த கட்டுரயில் "முஹம்மது என்ற தலைப்பில்" மேலதிக 10 கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.  இப்பொழுது பார்க்கப் போகும் பத்து கேள்விகளுக்கு ஒரு சிறப்பு உண்டு, அதாவது, மைக்கேல் ஹெச் ஹார்ட் (Michael H. Hart) என்பவர் எழுதிய  "The 100 - A Ranking of the Most Influential Persons in History" என்ற ஆங்கில புத்தகத்தில் முஹம்மதுவிற்கு முதலாவது இடம் கொடுக்கப்பட்ட விவரங்கள் பற்றிய  கேள்வி  பதில்களைப் பார்க்கப்போகிறோம்.

The 100 - A Ranking of the Most Influential Persons in History by Michael H. Hart

முஹம்மதுவையும் இஸ்லாமையும் புகழ்ந்து எழுதப்படும் புத்தகங்களை முஸ்லிம்கள் தூக்கிப் பிடிப்பார்கள். அப்புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களை வாழ்த்துவார்கள் கௌரவப்படுத்துவார்கள். ஆனால், இஸ்லாமையும் முஹம்மதுவையும் கேள்வி கேட்டு, விமர்சனம் செய்து எழுதப்படும் புத்தகங்களை முஸ்லிம்கள் தாக்கிப் பேசுவார்கள், முடிந்தால் சில‌ முஸ்லிம் தீவிரவாதிகள் அப்புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களை கொலை செய்வார்கள்.

இந்த வரிசையில் முஸ்லிம்களின் மனதை கொள்ளையிட்ட மைக்கேல் ஹார்ட் என்ற எழுத்தாளர் எழுதிய புத்தகம் பற்றிய விவரங்களை கேள்வி பதில்களாக நாம் காண்போம். 

(என் நண்பர் ஒருவர் என்னிடம் இந்த புத்தகம் பற்றி ஆய்வு செய்து, விளக்கும்படி கேட்டுக்கொண்டார். நானும் இந்த புத்தகத்தை படித்துப்  பார்க்கவேண்டுமென்று பல ஆண்டுகளாக (ஆம் பல ஆண்டுகளாக) நினைத்திருந்தேன், ஆனால் நேரம் வாய்க்கவில்லை. இந்த முறை கொரொனாவின் காரணத்தினால் களத்தில் இறங்கிவிடவேண்டியது தான் என்று முடிவு செய்துவிட்டேன். "கொரொனாவின் காரணம்" என்று நான் சொன்னது, "வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்ததால், தினமும் ஆபிஸுக்குச் சென்று வரும் நேரம் மிச்சமானது அல்லவா அதனால் தான்".)

முஸ்லிம்களின் அறியாமையும் அதன் விளைவுகளும் :

எப்பாடுபட்டாவது அறியாமையில் வாழ முஸ்லிம்கள் அதிகமாக விரும்புவார்கள்! இதற்கு உதவும் வண்ணமாக, அவர்களை  அறியாமையிலேயே வைத்திருக்கவேண்டுமென்று முஸ்லிம் அறிஞர்கள் பெரும்பாடுபடுகிறார்கள்.

இந்த தொடரில் நாம் பார்க்கப் போகும் கேள்வி பதில்கள் நிச்சயமாக‌ முஸ்லிம்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்று நான் நம்புகிறேன். கேள்வி கேட்காமல் கண்மூடித்தனமாக‌ எல்லாவற்றையும் நம்பும் முஸ்லிம்களின் கண்கள் திறக்கப்படும் என்று நான் விசுவாசிக்கிறேன்.  இந்த 10 கேள்வி பதில்களை படித்த பிறகு, "நாம் மதிக்கும் நம் முஸ்லிம் அறிஞர்களே சொன்னாலும் சரி, இனி நாம் கேள்வி கேட்காமல் நம்பக்கூடாது என்ற அறிவு நிச்சயம் முஸ்லிம்களுக்கு உண்டாகும்".

எந்த புத்தகத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் ஆடுகிறார்களோ, அப்புத்தகத்தை படித்து, அதன் ஆசிரியர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை முஸ்லிம்களுக்கு புரியும்படி விளக்குவது தான் இக்கட்டுரையின் நோக்கம்.

இதை முஸ்லிம்கள் செய்யவில்லையா? என்று கேட்டால், ஆம், முஸ்லிம்கள் இதை செய்யவில்லையென்றுச் சொல்லலாம். சராசரி முஸ்லிம்கள் அரைகுறையாக தங்கள் அறிஞர்களிடமிருந்து கேள்வி பட்டவைகளை கண்மூடித்தனமாக‌ பரப்ப அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423)

சரி வாருங்கள் அந்த பெய்ப்பொருள் என்னவென்பதை அறிந்துக்கொள்ளலாம். 


கேள்வி 491: மைக்கேல் ஹெச் ஹார்ட் (Michael H. Hart) என்பவர் யார்? அவரை ஏன் முஸ்லிம்கள் அதிகமாக கௌரவப்படுத்துகிறார்கள்?

பதில் 491: மைக்கேல் ஹெச் ஹார்ட் (Michael H. Hart) என்பவர் "The 100 - A Ranking of the Most Influential Persons in History" என்ற  புத்தகத்தை ஆங்கிலத்தில் 1978 ஆம் ஆண்டு எழுதினார். இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு 1992 ஆம் ஆண்டு சில சிறிய மாற்றங்களோடு வெளியானது.

இப்புத்தகத்தின் சிறப்பு: 

சரித்திரத்தில் இன்றுவரை அதிகமாக தாக்கம் உண்டாக்கிய 100 மனிதர்களின் பட்டியலை இவர் கொடுத்து, அதில் இஸ்லாமை தோற்றுவித்த முஹம்மதுவிற்கு முதல் இடம் கொடுத்தது தான்.  இப்புத்தகத்தின் இன்னொரு சிறப்பு அல்லது முஸ்லிம்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விபரம் என்னவென்றால், இயேசுக் கிறிஸ்துவின் பெயர் 3ம் இடத்தில் வருவது தான். 

முஸ்லிம்கள் ஒரு மனிதனை கௌரவப்படுத்த மேலே சொன்ன விவரங்களில் முதலாவது பாயிண்டே போதும் அவர்களுக்கு, ஆனால் பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று, இயேசு கிறிஸ்துவுக்கு மூன்றாம் இடம் கொடுத்தது, முஸ்லிம்களுக்கு இன்னும் குஷியாகிவிட்டது.  இதில் இன்னொரு போனஸ் மகிழ்ச்சி, இந்த விவரத்தை ஒரு மேற்கத்திய எழுத்தாளரே சொல்வது தான் (அதுவும் அமெரிக்கர் என்பது இன்னொரு சிக்ஸர்) அடேங்கப்பா, முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இப்பொழுது சொல்லுங்கள்? முஸ்லிம்கள் ஏன் மைக்கேல் ஹெச் ஹார்ட் என்ற எழுத்தாளரை விரும்பமாட்டார்கள்?!

தங்கள் உயிரினும் அதிகமாக நேசிக்கும் முகமதுவிற்கு, மேற்கத்திய ஆசிரியர் ஒருவர் உலக தலைவர்களின் பட்டியலில் முதலிடம் கொடுத்ததைப் பற்றி காலஞ்சென்ற இஸ்லாமிய அறிஞர், மேலும் திரு ஜாகிர் நாயக் (மலேசியாவில் தஞ்சம் புகுந்தவர்) அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அஹமது தீதத் முதற்கொண்டு, இன்று பட்டிதொட்டிகளில் இஸ்லாமிய தாவா செய்யும் ஒவ்வொரு முஸ்லிமும், மேற்கோள் காட்டாமல் இருந்ததில்லை. முக்கியமாக முஸ்லிமல்லாத மக்கள் கூடி இருக்கின்ற அவையில், இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, இந்தப் புத்தகம் பற்றியும், இந்த எழுத்தாளர் பற்றியும், இவர் முஹம்மது அவர்களுக்கு முதல் இடம் கொடுத்தது பற்றியும், இயேசுவிற்கு மூன்றாம் இடம் கொடுத்தது பற்றியும், பேசாமல் இருக்கவே மாட்டார்கள்.

மேலும் 1988 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், இந்த மைக்கேல் ஹெச் ஹார்ட் ஆசிரியரை அழைப்பித்து, கெய்ரோ நகரில் கௌரவபடுத்தினார்.

இந்த புத்தகத்தை அமேஜானில் வாங்கலாம், மற்றும் இணையத்திலும் இதன்  பிடிஎஃப் கிடைக்கிறது, பதிவிறக்கம் செய்துக்கொண்டு படிக்கலாம்.

கேள்வி 492: முஹம்மதுவிற்கு முதலாவது இடத்தைக் கொடுத்தது சரிதானா? மைக்கேல் ஹார்ட் சொன்னது தன் சொந்த கருத்து தானே, இதை ஏன் முஸ்லிம்கள் பெரிது படுத்துகிறார்கள்?

பதில் 492:  இந்த புத்தகம் வெளிவந்தவுடன் பல  விமர்சனங்கள் எழுந்தன. பல எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கைகள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்தன.

இவருடைய 100 பேர் பட்டியலில் 3 ஆப்ரிக்கவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு தென் அமெரிக்கர் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்று "லாஸ் எஞ்ஜல்ஸ் டைம்ஸ்" பத்திரிக்கை விமர்சித்தது. “த சன்டே டைம்ஸ்” பத்திரிக்கையும் இவரது ஆய்வில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு விமர்சித்தது. “த வாஷிங்க்டன் போஸ்ட்” என்ற பத்திரிக்கையும், இவரது 100 பேர் பட்டியலில் 10ம் நூற்றாண்டு மற்றும் 15ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட  காலத்திலிருந்து வெறும் மூன்று  நபர்கள் தான் இடம் பெருகிறார்கள், இதுவே இவரது ஆய்வில் உள்ள குறையை தெரிவிக்கிறது என்று விமர்சித்தது. இதைப் பற்றி விக்கிபீடியா தளத்தில் “Reviews (Postive Reviews and Negative Reviews)" என்ற தலைப்பில் உள்ள விவரங்களை படிக்கவும்.

யாராவது ஒரு  விவரத்தைச் சொல்லும் போது, அது நமக்கு எதிரான கருத்தாக இருந்தால், உடனே நாம் கோபம் கொள்ளக்கூடாது, ஆராயாமல் செயலில் இறங்கக்கூடாது, ஆனால் துக்கப்படலாம்.  இதே போன்று ஒருவர் நமக்கு சாதகமாக‌ ஏதாவது சொல்லும் போது, அவர் சொல்வதில் உண்மை இருக்கின்றதா? இல்லையா? என்பதை ஆராயாமல், உடனே கண்மூடித்தனமாக அதை நம்பி, மற்றவர்களிடம் பரப்பக்கூடாது.

மைக்கேல் ஹார்ட் சொன்னது அவரது சொந்த ஆய்வில் வெளிவந்த அவரது சொந்தக்கருத்து, அதில் பல தவறுகள் இருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் இதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஒரு மேற்கத்தியர் சொல்லிவிட்டார், புத்தகம் எழுதிவிட்டார் எனவே அது உண்மையாக இருக்கும் என்று ஒரே போடு போடுகிறார்கள்.  

சரி, முஸ்லிம்களின் இந்த நிலைப்பாடு அடுத்த கேள்விக்கான பதிலிலும் இதே போன்று இருக்குமா என்று பார்ப்போம் வாருங்கள்.

(இன்னும் நான் மைக்கேல் ஹார்ட் அவர்களின் மேற்கோள்களை காட்டவில்லை, அடுத்தடுத்த கேள்விகளில் அவைகளைப் பார்ப்போம், அப்போது அறிவுள்ள முஸ்லிம்கள் நான் சொல்வது உண்மை என்று நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள்).

கேள்வி 493: ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் முஹம்மது: இவர்களில் முதலிடம் பெறும் கெட்டவர் யார்? என்ற புத்தகம் பற்றி முஸ்லிம்கள் என்ன சொல்வார்கள்?

பதில் 493:   டோவ் ஐவரி (Dov Ivry) என்ற கனடா  எழுத்தாளர் "Hitler, Stalin, Muhammad: Who ranks as the most evil human ever?" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 

புத்தகம்:  Hitler, Stalin, Muhammad: Who ranks as the most evil human ever?

ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் முஹம்மது: இவர்களில் முதலிடம் பெறும் கெட்டவர் யார்?

  • Buy in Amazon: Link 

இவரது புத்தகத்திற்கு இவர் அமேஜானில் கொடுத்துள்ள  முன்னுரையைப் பாருங்கள்:

Here's how the book begins.

If you are asked who is the most evil man who ever lived, you might immediately nominate Hitler, Stalin, Genghis Khan, and Mao Tse-Tung, all of whom easily exceed double figures in the numbers of their murder victims, and to round out the top five you could throw in Leopold II of Belgium although he won’t reach the finals.

May I have the envelope please? The winner is: None Of The Above.

The most evil man who ever lived is Muhammad.

That is my opinion and I shall endeavor to back it up with facts.

இவரது ஆய்வின் படி, "முஹம்மது தான் உலகிலேயே மிகவும் கெட்ட மனிதர்" என்றுச் சொல்கிறார், மேலும் இதற்கான சான்றுகளும் உள்ளன என்றும் கூறுகின்றார்.

இவர் இதுவரை 66 புத்தகங்களை எழுதியுள்ளார், அவைகளை அமேஜானில் கீழ்கண்ட தொடுப்பில் வாங்கலாம்.

சரி, இவரது புத்தகம் பற்றி முஸ்லிம்களின் கருத்து என்ன?

இது இவரது சொந்த ஆய்வின் கருத்து என்று சொல்ல வருகிறீர்கள் அல்லவா? இதே போன்று தான் மைக்கேல் ஹார்ட் என்பவரின் ஆய்வின் கருத்தைத் தான் அவர் சொல்லியுள்ளார். மேலும் மைக்கேல் ஹார்ட்டின் புத்தகத்தை முஸ்லிம்கள் படித்தால், நிச்சயம் அவரை புறக்கணிப்பார்கள், இதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தவே இந்த என் பதிவு, மேலும் படியுங்கள். 

சரி, மைக்கேல் ஹார்டின் மேற்கோள்களை பார்ப்பதற்கு முன்பாக, இன்னொரு புத்தகத்தைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

கேள்வி 494: யார் பெரியவர்? இயேசு? நெபோலியன்? முஹம்மது? ஷேக்ஸ்பியர் அல்லது அப்ரஹாம் லிங்கன்? இந்த புத்தகம் பற்றிய சிறு குறிப்பு?

பதில் 494: இன்னொரு புத்தகமும் என் கண்களுக்குப் பட்டது, அது தான் " Who's Bigger?: Where Historical Figures Really Rank " என்ற புத்தகம். 

இந்த புத்தகத்தை கணினி விஞ்ஞானி ஸ்டீவன் ஸ்கீனா என்பவரும், கூகுள் பொறியாளர் "சார்லஸ் வார்ட்" என்பவரும் "விக்கிபீடியா மற்றும் கூகுள்" என்ற இரு பெரும் இணைய தள விவரங்களை வைத்து ஆய்வு செய்து எழுதியுள்ளார்கள்.

Who's Bigger?: Where Historical Figures Really Rank is a 2013 book by the computer scientist Steven Skiena and the Google engineer Charles Ward which ranks historical figures in order of significance.

The authors used the English Wikipedia as their primary data source, and ran the data through algorithms written into computer programs to arrive at a ranking of all historical figures. According to the authors, a higher ranking indicates greater historical significance.[2]

Skiena and Ward compared all English Wikipedia articles against five criteria: two that draw on Google PageRank, and three that draw on internal Wikipedia metrics: the number of times the page has been viewed, the number of edits to the page, and the size of the page. The concept is that these criteria measure the current fame of the subject. This is then manipulated by other algorithms to compensate for a skewing of data toward more recent subjects, arriving at true likely historical significance.[2] In addition to the main list, various sublists (such as figures of a given field of endeavor or country) are included.

மூலம்: https://en.wikipedia.org/wiki/Who%27s_Bigger%3F

அமேஜானில் இப்புத்தகத்தை வாங்க தொடுப்பு:  Who's Bigger?: Where Historical Figures Really Rank Kindle Edition

இந்த ஆய்வில் வெளிவந்த முடிவு என்ன தெரியுமா? யார் முதலாவது இடத்தில் இருக்கிறார்கள்? இயேசு முதலிடமும், முஹம்மது மூன்றாவது இடமும் வகிக்கிறார்.

The top five entries on the overall list are Jesus, Napoleon, Mohammed, William Shakespeare, and Abraham Lincoln.[2]

என் கருத்து: அது கீழ்கண்ட புத்தகங்களில் எந்த புத்தகமானாலும் சரி, அவைகள் எல்லாம் ஒரு வரையறைக்குள், ஒரு குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளன‌. 

  1. The 100 - A Ranking of the Most Influential Persons in History - by Michael H. Hart
  2. Hitler, Stalin, Muhammad: Who ranks as the most evil human ever? - by Dov Ivry
  3. Who's Bigger?: Where Historical Figures Really Rank - by Steven Skiena and Charles Ward

இந்த மூன்றாவது புத்தகத்தில் இயேசு முதலிடம் வகிக்கிறார் என்றுச் சொல்லி நான் கூத்தாட விரும்புவதில்லை.  இதே போன்று முஹம்மது மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்றுச் சொல்லி, கும்மாளம் போடமுடியாது.  இந்த புத்தகங்களைப் பார்ப்பதைக் காட்டிலும்,  பைபிளில் இயேசு எப்படி வெளிப்பட்டிருக்கிறார்? அவரை நான் வணங்கி, அவரை பின்பற்ற தொடங்கிய பிறகு என் வாழ்க்கையை அவர் மாற்றியுள்ளாரா? என்பது தான் எனக்கு முக்கியம்.

இயேசுவை பின்பற்றுகின்ற நான், ஒரு நல்ல மனிதனாக வாழுகின்றேனா? (அல்லது ஒரு நல்ல மனிதனாக வாழ மனதளவில் விருப்பமாவது கொள்கின்றேனா?) என்பது தான் கேள்வி.  பைபிளின் மூலமாகவும், இயேசுவின் மூலமாகவும் நடத்தப்படுகின்ற நான், மற்றவர்களை நேசிக்கின்றேனா? அல்லது வெறுக்கின்றேனா? என்னை அவர் மாற்றினாரா இல்லையா? என்பது தான் முக்கியமே தவிர, எந்த புத்தகத்தில் இயேசு முதலிடம் பெறுகின்றார் என்பது அவ்வளவு முக்கியமில்லை.

இதே போன்று, குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் படித்த எனக்கு, முஹம்மது யார் என்று நன்றாகத் தெரியும்.  இஸ்லாமின் அடித்தளமாகிய குர்‍ஆனும் ஹதீஸ்களும் முஹம்மது ஒரு நல்லவர் என்று சொல்லித் தராத போது, அவருக்கு முதலிடம் கொடுத்து எழுதப்படும் புத்தகங்கள் எப்படி என்னை கன்வின்ஸ் செய்யும்?

இப்பொழுது நாம் மைக்கேல் ஹார்ட் எழுதிய வரிகள் எப்படி இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் தலைவலியாக மாறுகிறது என்பதையும், முஸ்லிம்கள் ஏன் மைக்கேல் புத்தகத்தை மேற்கோள் காட்டக்கூடாது என்பதற்கான காரணங்களைக் காண்போம்.

கேள்வி 495: முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்கள், யுத்தங்கள் கருத்தில் கொள்ளப்பட்டது - இதனால் தான் அவருக்கு முதலிடம் - இப்படியா  மைக்கேல் எழுதினார்?

பதில் 495: மைக்கேல் ஹெச் ஹார்ட் எழுதிய புத்தகத்தில் 591 பக்கங்கள் உள்ளன. அவைகளில் அவர் குறிப்பிட்ட ஒவ்வொரு நபருக்காகவும் சில காரணங்களை அவர் விளக்கினார். அதன்  பிறகு 'அக்காரணங்களினால் நான் இவரை இன்ன இடத்தில் வைக்கிறேன்' என்று எழுதி தன் சான்றுகளையும் தருகின்றார்.

இப்படி இவர் எழுதும்  போது, முஹம்மதுவிற்கு முதலிடம் தருகிறார், இதற்காக இவர்  முன் வைக்கும் இரண்டு காரணங்களில் ஒன்று: முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்களும், மற்ற நாடுகள்  மீது போர் செய்து அவைகளை கைப்பற்றியதும் தான் பிரதான காரணம்.

மைக்கேல் மேற்கோள்க‌ள்: 

a) முஹம்மது வெற்றியுள்ள அரசியல் தலைவர்:

முஹம்மது ஒரு சிறந்த அரசியல் தலைவர் என்று ஆசிரியர் மைக்கேல் எழுதுகின்றார்.

Of humble origins, Muhammad founded and promulgated one of the world's great religions, and became an immensely effective political leader. Today, thirteen centuries after his death, his influence is still powerful and pervasive. (பக்கம் 40 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 3)

மதினாவிற்குச் சென்று, அரசியல் பலத்தை பெருக்கிக்கொண்ட ஒரு சர்வாதிகாரி முஹம்மது:

This flight, called the Hegira, was the turning point of the Prophet's life. In Mecca, he had had few followers. In Medina, he had many more, and he soon acquired an influence that made him a virtual dictator. During the next few years, while Muhammad's following grew rapidly, a series of battles were fought between Medina and Mecca. This was ended in 630 with Muhammad's triumphant return to Mecca as conqueror. The remaining two and one-half years of his life witnessed the rapid conversion of the Arab tribes to the new religion. When Muhammad died, in 632, he was the effective ruler of all of southern Arabia. (பக்கம் 41 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 4)

மக்காவை கைப்பற்றிய அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பல அரபிய இனக்குழுக்கள் இஸ்லாமில் இணையும் படி செய்திருக்கின்றார் முஹம்மது, எப்படி? வாள் முனையில் தான்! இஸ்லாமின் மென்மையைக் கண்டு யாரும் அதில் சேரவில்லை, முஹம்மதுவின் வாளின் வன்மையைக் கண்டு தான் சேர்ந்தார்கள்.

அரேபியாவிலும், வெளியிலும் முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்கள்: 

முஹம்மது அரேபியாவின் இனக்குழுக்களை ஒன்றுச் சேர்த்து ஆச்சரியப்படக்கூடிய மிகப்பெரிய யுத்தங்களைச் செய்தார் என்று மைக்கேல் சொல்கிறார் (“the most astonishing series of conquests in human history”).

The Bedouin tribesmen of Arabia had a reputation as fierce warriors. But their number was small; and plagued by disunity and internecine warfare, they had been no match for the larger armies of the kingdoms in the settled agricultural areas to the north. However, unified by Muhammad for the first time in history, and inspired by their fervent belief in the one true God, these small Arab armies now embarked upon one of the most astonishing series of conquests in human history. To the northeast of Arabia lay the large Neo-Persian Empire of the Sassanids; to the northwest lay the Byzantine, or Eastern Roman Empire, centered in onstantinople. Numerically, the Arabs were no match for their opponents. On the field of battle, though, the inspired Arabs rapidly conquered all of Mesopotamia, Syria, and Palestine. By 642, Egypt had been wrested from the Byzantine Empire, while the Persian armies had been crushed at the key battles of Qadisiya in 637, and Nehavend in 642. (பக்கம் 42 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 5)

முஹம்மதுவின் சஹாபாக்களும் யுத்தங்களைத் தொடர்ந்தார்கள், நாடுகளை ஆக்கிரமித்தார்கள்:

முஹம்மதுவிற்கு பிறகும் அவரது சகாக்கள் பெரிய போர்களைச் செய்தார்கள், அதன் பிறகும் முஸ்லிம்கள் பல போர்களைச் செய்து ஸ்பெயின் வரை வலியச் சென்று ஆக்கிரமித்தார்கள்.

But even these enormous conquests-which were made under the leadership of Muhammad's close friends and immediate successors, Abu Bakr and 'Umar ibn al-Khattab -did not mark the end of the Arab advance. By 711, the Arab armies had swept completely across North Africa to the Atlantic Ocean There they turned north and, crossing the Strait of Gibraltar, overwhelmed the Visigothic kingdom in Spain. (பக்கம் 42 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 5)

b) வாள் முனையில் மக்கள் இஸ்லாமை ஏற்றார்கள்:

இந்தியாவரைக்கும் போர் செய்தார்கள் முஸ்லிம்கள், பெரிய அளவில் மதமாற்றம் நடந்தது: 

For a while, it must have seemed that the Moslems would overwhelm all of Christian Europe. However, in 732, at the famous Battle of Tours, a Moslem army, which had advanced into the center of France, was at last defeated by the Franks. Nevertheless, in a scant century of fighting, these Bedouin tribesmen, inspired by the word of the Prophet, had carved out an empire stretching from the borders of India to the Atlantic Ocean-the largest empire that the world had yet seen. And everywhere that the armies conquered, large-scale conversion to the new faith eventually followed.  (பக்கம் 42 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 5)

வாள் முனையில் மக்கள் இஸ்லாமை ஏற்றார்கள் என்பதை "முஸ்லிம்களின் ஹீரோ எழுத்தாளர்"  மைக்கேல் ஹார்ட் எப்படி சொல்கிறார் என்பதை பாருங்கள்:

  • And everywhere that the armies conquered, large-scale conversion to the new faith eventually followed.

எங்கேயெல்லாம் இஸ்லாம் ஆக்கிரமித்ததோ அங்கேயெல்லாம் மதமாற்றம் பெரிய அளவில் நடந்தது என்கிறார், இதைவிட இஸ்லாமுக்கு மிகப்பெரிய கேவலம் ஏதாவது உண்டா?

இதைத் தானே இன்றைய உலகமும் இஸ்லாம் மீது சுமத்தும் குற்றச்சாட்டாக உள்ளது, அதாவது வாள் முனையில் இஸ்லாமை முஹம்மது பரப்பினார் என்பது எவ்வளவு உண்மையாக உள்ளது பாருங்கள்.

இல்லை, இல்லை முஹம்மது அமைதியாக இஸ்லாமை பரப்பினார் என்று மார்தட்டுகின்ற முஸ்லிம்களின் தலையில் ஒரு கொட்டுவிட்டு "முஹம்மதுவும், சஹாபாக்களும், அதன் பிறகு வந்த இஸ்லாமிய தலைவர்களும், வாளால் தான் இஸ்லாமை பரப்பினார்கள்" என்று அடித்துச் சொல்கிறார் மைக்கேல் ஹார்ட். இப்போது தான் முஸ்லிம்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும்.

கிறிஸ்தவர்கள் சண்டையிட்டு (சிலுவைப்போர்கள்), முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள், எகிப்தும் மெசபடோமியா (ஈரான் பகுதிகள்) மட்டும் முஸ்லிம் நாடுகளாக தொடர்ந்தன. 

இதனை சொல்லிவிட்டு, மைக்கேல் முஹம்மதும், முஸ்லிம்களும் ஆக்கிரமித்த வரைபடத்தைப் போட்டு, இஸ்லாமின் முகத்திரையை கிழிக்கிறார் (பக்கம் 6,7).

c) முதல் வரிசையில் குதிரையில் இருப்பது யார்? முஹம்மதுவா?

பக்கம் 8ல் முஸ்லிம்கள் போர் செய்வதாக ஒரு படத்தை போட்டு இருந்தார், அதில் முதல் வரிசையில் குதிரையில் இருப்பது முஹம்மதுவா? அடடே, முஸ்லிம்களுக்கு எரியுமே மனசு! முஹம்மதுவின் படத்தை மைக்கேல் ஹார்ட் எப்படி போடலாம்? முஸ்லிம்களின் இரத்தம் கொதிக்குமே!  இதையெல்லாம் தெரியாமலா, இத்தனை ஆண்டுகளாக இந்த புத்தகத்தை தூக்கி பிடித்துக்கொண்டு இருந்தோம்! அவமானம், வெட்கம்!

Muslem crusaders under Muhammad conquer in Allah’s name

முஹம்மதுவின் தலைமையின் கீழ் முஸ்லிம் குருசேடர்கள் (ஜிஹாதிகள்) அல்லாஹ்வின் பெயரால் வெற்றி பெறுகிறார்கள்.

ஆனால், மைக்கேல் இந்த படத்தின் கீழே எழுதியுள்ள தலைப்பு என்ன தெரியுமா?

இது தான்: "Muslem crusaders under Muhammad conquer in Allah’s name" - முஹம்மதுவின் தலைமையின் கீழ் முஸ்லிம் குருசேடர்கள் (ஜிஹாதிகள்) அல்லாஹ்வின் பெயரால் வெற்றி பெறுகிறார்கள்

இதன் படி பார்த்தால், முதல் வரிசையில் குதிரையில் இருப்பவர் முஹம்மது என்று கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது. 

இதுவரையில் பார்த்த விவரங்களின் படி, மைக்கேல் ஹார்ட் என்பவர் தன் ஆய்வில் எடுத்துக்கொண்ட விவரம் முஹம்மது சிறந்தவர் என்றோ, நல்லவர் என்றோ, தீர்க்கதரிசி என்றோ அல்ல, அவர் ஆரம்பித்த ஆக்கிரமிப்புக்களை, அவருக்கு பிறகு முஸ்லிம்கள் "பேஷாக" தொடர்ந்தார்கள், நாடுகளை பிடித்தார்கள், இதன் அடிப்படையில்  முஹம்மது முதலிடத்தில் இருக்கிறார்.

d) முஹம்மதுவின் முதலிடம் பற்றி "மைக்கேலின் இரத்தினச் சுருக்கமான வரிகள்" 

இந்த கேள்வியில் நான் குறிப்பிட்டது போன்று, முஹம்மது அரசியல் தலைவர்களில் முதலிடம் வகிக்கிறார், என்ன காரணம்? சண்டைகளும், யுத்தங்களும் இரத்தம் சிந்துதலும் தான் காரணம். அதனால் தான் முதலிடம் அவருக்கு. 

Furthermore, Muhammad (unlike Jesus) was a secular as well as a religious leader. In fact, as the driving force behind the Arab conquests, he may well rank as the most influential political leader of all time. (பக்கம் 46 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 9)

மேலும், முஹம்மது (இயேசுவைப் போலல்லாமல்) ஒரு அரசியல் தலைவராகவும் மற்றும் மதத் தலைவராக இருந்தார். உண்மையில், அரபியர்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு யுத்தங்களுக்கு உந்துசக்தியாக முஹம்மது இருந்தார், எனவே, அவர் எல்லா காலத்திலும் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக இருந்தார் (ஆகையால் முதலிடம்).

மேற்கண்ட ஒரே பத்தியைக் காட்டிவிட்டு, நான் இந்த கேள்வியை முடித்து இருந்திருக்கலாம், ஆனால், முஸ்லிம்கள் அறியாமையில் பொய் சொல்வதில் கைத்தேர்ந்தவர்கள், சாரி வாய்த்தேர்ந்தவர்கள், எனவே ஆசிரியரின் வேறு பல மேற்கொள்களைக் காட்டி இதுவரை விளக்கிக்கொண்டு வந்தேன்.  மேற்கண்ட வரிகளில் (unlike Jesus - இயேசுவைப் போலல்லாமல்) என்று அடைப்பிற்குள் எழுதியது கூட, மைக்கேல் ஹார்ட் ஆசிரியர் தான், நான் சொந்தமாக எழுதவில்லை. இயேசு வெறும் ஆன்மீகத்தலைவர், ஆனால் முஹம்மது அப்படி இல்லை, அவர் அரசியல் தலைவராகவும் இருந்தார், ஆன்மீகத் தலைவராகவும் இருந்தார் என்று சொல்லிவிட்டு, முஹம்மதுவிற்கு முதலிடத்திற்கு தகுதிபடுத்தியது, அவரது "அரசியல் தலைமைத்துவமேயன்று வெறு இல்லை" என்று ஆசிரியர் கூறுகின்றார். 

போர் செய்து யுத்தம் செய்வதில் முதலிடம் முஹம்மது வகித்ததால் தான், இன்றும் சண்டைகளும் சச்சரவுகளும், ஜிஹாத்களும் நடக்கின்றன! இல்லையென்றுச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுத்து மைக்கேல் ஹார்ட் முஸ்லிம்களுக்கு உதவி செய்யவில்லை, அதற்கு பதிலாக, மறைமுகமாக, வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது போன்று தன் காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டார். இஸ்லாம் வாளால் தான் பரவியது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார். இதனை புரிந்துக்கொள்ளாத முஸ்லிம்கள் அவரை கௌரவப்படுத்துகிறார்கள்.  தன்னை செருப்பால் அடித்தவனுக்கு கவுரப்பட்டம் கொடுத்து வாழ்த்தும் கூட்டம் ஒன்று உண்டு என்றுச் சொன்னால், அது முஸ்லிம்களாகத் தான் இருப்பார்கள்.  இதைத் தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன், முஸ்லிம்களுக்கு அறியாமை அதிகம், அதை தக்கவைத்துக்கொள்ள எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வார்கள். 

முஹம்மதுவின் வாள் முனை தான் அவரை முதலிடத்திற்கு தள்ளியது என்று மைக்கேல் ஹார்ட் எழுதியதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது தான் என் கருத்தும் கூட.

கேள்வி 496: மைக்கேலின் நெத்தியடி வரிகள்: குர்‍ஆனின் ஆசிரியர் முஹம்மது தான். முஹம்மதுவின் வார்த்தைகள் தான் குர்‍ஆன். இதனையும் முஸ்லிம்கள் ஏற்பார்களா?

பதில் 496: முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுத்ததற்கு காரணம், அவர் போர்களைச் செய்து நாடுகளை பிடித்தது தான் என்று மைக்கேல் கூறினார், இது முஸ்லிம்களுக்கு முதலாவது மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியாகும். 

இரண்டாவதாக, முஸ்லிம்களின் நம்பிக்கையில் பெரிய கல்லை எடுத்துப்போடுகின்றார் மைக்கேல், அதாவது குர்‍ஆனின் ஆசிரியர் முஹம்மது என்று நேரடியாகச் சொல்லியுள்ளார். மனுஷன் மறைமுகமாகவாவது சொல்லியிருக்கலாம் அல்லவா! இல்லை, நேரடியாகவே "முஸ்லிம்களின் வேதத்தின் ஆசிரியர் முஹம்மது என்றுச் சொல்கிறார்".

முஸ்லிம்கள் வேதமான குர்‍ஆனின் ஆசிரியர் முஹம்மது, இவரது வார்த்தைகள் தான் குர்‍ஆன்:

பக்கம் 9ல், முஸ்லிம்கள் கவுரவித்த மைக்கேல் ஹெச் ஹார்ட் கீழ்கண்ட முத்துக்களை உதிர்த்து உள்ளார்:

Muhammad, however, was responsible for both the theology of Islam and its main ethical and moral principles. In addition, he played the key role in proselytizing the new faith, and in establishing the religious practices of Islam. Moreover, he is the author of the Moslem holy scriptures, the Koran, a collection of certain of Muhammad's insights that he believed had been directly revealed to him by Allah. Most of these utterances were copied more or less faithfully during Muhammad's lifetime and were collected together in authoritative form not long after his death. The Koran therefore, closely represents Muhammad's ideas and teachings and to a considerable extent his exact words. (பக்கம் 46 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 9)

இதில் அவர் எழுதிய இரண்டு வரிகளைப் பாருங்கள்: 

1. Moreover, he is the author of the Moslem holy scriptures, the Koran, a collection of certain of Muhammad's insights that he believed had been directly revealed to him by Allah (மேலும், அவர்(முஹம்மது) முஸ்லீம்களின் புனித நூலான குர்‍ஆனின் ஆசிரியர் ஆவார். இந்த குர்‍ஆன் தொகுப்பை அல்லாஹ் தனக்கு நேரடியாக வெளிப்படுத்தப்பட்டதாக முஹம்மது நம்பினார்)

2. The Koran therefore, closely represents Muhammad's ideas and teachings and to a considerable extent his exact words (ஆகவே, குர்ஆன் முஹம்மதுவின் கருத்துக்களையும் போதனைகளையும் கொண்டுள்ளது. வேறு வகையாகச் சொல்லவேண்டுமென்றால், கிட்டத்தட்ட குர்‍ஆன் என்பது முஹம்மதுவின் சொந்த வார்த்தைகளே - Muhammad’s exact words ஆகும்.)

இதை விட யார் குர்‍ஆனை அவமானப்படுத்திவிட முடியும்? முஸ்லிம்களே உங்களுக்குப் புரிகின்றதா? மைக்கேலின் படி "முஹம்மதுவின் போதனைகளும், கருத்துக்களும் அடங்கிய புத்தகம் தான் குர்‍ஆன், இதன் ஆசிரியர் முஹம்மது, மேலும் கிட்டத்தட்ட குர்‍ஆன் என்பது முஹம்மதுவின் சொந்த வார்த்தைகளே".

ஆக, மிச்சம் மீதியிருந்த இஸ்லாமின் மேன்மையையும் எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார் மைக்கேல் ஹார்ட் என்ற மேற்கத்தியர்.

இதையெல்லாம் அறிந்த பிறகும் அஹமத் தீதத், ஜாகிர் நாயக் போன்ற முஸ்லிம் அறிஞர்கள் முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.  இப்பொழுது இந்த விவரங்களை இந்த கேள்வி பதில்கள் மூலம் முஸ்லிம்கள் அறிந்துக்கொண்டார்கள், இருந்த போதிலும் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? "எது எப்படி இருந்தாலும், எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது அவர்களை மைக்கேல் ஹார்ட் முதலாவது இடத்தில் வைத்தாரே" இது எங்களுக்கு போதும் என்பார்கள்.

அந்த மைக்கேல் என்பவர் "முஹம்மது போர்களைச் செய்து தான் இஸ்லாமைப் பரப்பினார், மேலும் குர்‍ஆனின் ஆசிரியர் முஹம்மது தான் என்றுச் சொல்லி", இஸ்லாமை அவமானப்படுத்திவிட்டார் என்று விளக்கிச் சொன்னாலும், "பரவாயில்லை, அதை பார்க்காதது போல நாங்கள் இருந்துவிடுகிறோம் என்று அறியாமையில் இருக்கும் சில அறிவு ஜீவி முஸ்லிம்கள்  கூறுவார்கள். 

செருப்பை 5000 ரூபாய் கொடுத்து வாங்கினாலும், செருப்பு செருப்பு தானே! காலில் தானே போடவேண்டும்! விலை உயர்ந்தது என்பதால் கழுத்திலா மாட்டிக்கொள்வீர்கள்? 

இஸ்லாமை விமர்சிப்பவர்களின் இரண்டு ஆயுதங்கள்:

இஸ்லாம் வாளால் பரவியது & குர்‍ஆன் முஹம்மதுவின் கைவேலை

பொதுவாக இஸ்லாமை விமர்சிப்பவர்கள், முக்கியமாக‌ இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். அவைகள்: இஸ்லாமை முஹம்மது வன்முறையை கையாண்டு பரப்பினார், மேலும், குர்‍ஆன் இறைவேதமில்லை, அது மனித வார்த்தைகள் முக்கியமாக முஹம்மது தன் வசதிக்காக உருவாக்கிக்கொண்டது என்பதாகும்.

இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் மைக்கேல் ஹார்ட் முன்வைத்துவிட்டு, அதே நேரத்தில் முஸ்லிம்களிடமிருந்தும் "சபாஷ்'ஐயும் பெற்றுக்கொண்டார்  என்றுச் சொன்னால், அவருடைய சாதுரியமான அறிவை என்னவென்றுச் சொல்வது!

இப்போது நாம், மைக்கேலின் ஞானத்தை மெச்சிக்கொள்வதா? அல்லது முஸ்லிம்களின் அறியாமையை நொந்துக்கொள்வதா?

உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா!?!

கேள்வி 497: செங்கிஸ் கான் மற்றும் முஹம்மது சரியான ஒப்பீடா? மைக்கேலுக்கு ஒப்பிட யாருமே கிடைக்கவில்லையா? இருந்தாலும் முஹம்மதுவே இதிலும் முதலில் வந்தார்! 

பதில் 497:  முஹம்மதுவின் வாள் வலிமைக்கு நிகராக யாரை ஒப்பிடலாம் என்று முஸ்லிம்களின் ஹீரோவாகிய மைக்கேலிடம் கேட்டால், ஒரே ஒரு நபரோடு மட்டும் தான் ஒப்பிடமுடியும் என்று பதில் கூறுகின்றார்.  

அந்த நபர் யார்? முஹம்மதுவைப் போன்று ஒரு மத ஸ்தாபகரா? ஒரு நபியா? ஒரு துறவியா? இல்லை, இல்லை பல லட்ச மக்களை கொன்று குவித்த சர்வாதிகாரியாக செயல்பட்ட மங்கோலிய அரசன் செங்கிஸ்கான்.

இந்த ஒப்பிடுதலைப் பற்றி மைக்கேல் எழுதும் வரிகளை பாருங்கள்:

But this cannot be said of the Arab conquests The only comparable conquests in human history are those of the Mongols in the thirteenth century, which were primarily due to the influence of Genghis Khan. These conquests, however, though more extensive than those of the Arabs, did not prove permanent, and today the only areas occupied by the Mongols are those that they held prior to the time of Genghis Khan (பக்கம் 46 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 10)

முஹம்மதுவின்  ஆக்கிரமிப்புக்கள்  பற்றி வரலாற்றில் ஒப்பிட வேண்டுமென்றால், 13ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த செங்கிஸ்கான் என்ற அரசனின் ஆக்கிரமிப்புக்களோடு மட்டுமே ஒப்பிடமுடியுமாம். 

அப்படி ஒப்பிட்டாலும், இன்று சங்கிஸ்கானின் ஆக்கிரமிப்புக்கள் முழுவதும் அழிந்துவிட்டது, ஆனால் முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்கள் இன்றும் பல நாடுகளை இஸ்லாமின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, எனவே முஹம்மதுவின் வாள் வலிமை மற்றும் ஆக்கிரமிப்புக்களை யாருமே வெற்றிக்கொள்ள முடியாது, எனவே தான் முஹம்மதுவிற்கு முதலிடம் என்று மைக்கேல் கூறுகின்றார்.

இதன் பொருள் என்ன? இஸ்லாம் வாளால் பரவியது என்பதையும், அதன் தாக்கம் இன்றும் உலகில் உள்ளது என்றும் கூறுகின்றார்.

சரி இந்த செங்கிஸ்கான் யார்? என்பதைப் பற்றி சில விவரங்களைக் காண்போம்.

கோடிக்கணக்கில் இனபடுகொலை செய்த அரசன் செங்கிஸ் கான்:

The conquests and leadership of Genghis Khan included widespread devastation and mass murder, and he, along with the Mongols in general, perpetrated what has been called ethnocide and genocide. The targets of campaigns that refused to surrender would often be subject to reprisals in the form of enslavement and wholesale slaughter.  . . . A number of present-day Iranian historians, including Zabih Allah Safa, have likewise viewed the period initiated by Genghis Khan as a uniquely catastrophic era.[132] Steven R. Ward writes that the Mongol violence and depredations in the Iranian Plateau "killed up to three-fourths of the population... possibly 10 to 15 million people. Some historians have estimated that Iran's population did not again reach its pre-Mongol levels until the mid-20th century (மூலம்: https://en.wikipedia.org/wiki/Genghis_Khan)

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக ஈரானில் செங்கிஸ் கான் கிட்டத்தட்ட அனைவராலும்  இனப்படுகொலை செய்த போர்த்தலைவராகக் கண்டிக்கப்படுகிறார். இந்தப் பகுதிகளின் மக்கள்தொகைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியவராகக் கருதப்படுகிறார்.இசுதீவன் ஆர். வார்த் என்பவர் மங்கோலியப் படையெடுப்புகளைப் பற்றி எழுதியதாவது "ஒட்டுமொத்தமாக, மங்கோலிய வன்முறை மற்றும் அட்டூழியங்கள் ஈரானியப் பீடபூமியின் மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கு வரை கொன்றன, அதாவது 1 முதல் 1.5 கோடி மக்கள் வரை கொல்லப்பட்டார்கள். (மூலம்:  செங்கிஸ் கான்: https://ta.wikipedia.org/s/30y)

அக்கால உலகின் 11% மக்கள் செங்கின்ஸ் கான் அரசனாலும், அடுத்தடுத்த மங்கோலிய‌ அரசர்களாலும் கொல்லப்பட்டனர்:

Destruction under the Mongol Empire: 

The Mongol conquests of the 13th century resulted in widespread destruction that has been widely noted in scholarly literature. The Mongol army conquered hundreds of cities and villages and also killed millions of men, women and children. It has been estimated that approximately 11% of the world's population was killed either during or immediately after the Turco-Mongol invasions.[1] If the calculations are accurate, the events would be the deadliest acts of mass killings in human history. (மூலம்: https://en.wikipedia.org/wiki/Destruction_under_the_Mongol_Empire)

முஹம்மதுவின் வாளின் வலிமை, "இனப்படுகொலை செய்து, 11% உலக மக்களைக் கொன்ற செங்கிஸ்கானையே" வென்றுவிட்டதென்றால், ஏன் முஹம்மதுவிற்கு முதலிடம் கிடைக்காது, இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

ஆசிரியர் மைக்கேல் இந்த  இடத்தில்  முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்கள், மற்றும் செங்கிஸ்கானின் ஆக்கிரமிப்புக்களை முதலாவது ஒப்பிட்டார் அதன் பிறகு, முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்கள் நடந்த நாடுகளில் இன்றும் இஸ்லாம் இருப்பதினால், முதலிடம் முஹம்மதுவிற்கு கிடைத்தது. செங்கிஸ்கானின் ஆக்கிரமிப்புக்கள் நடந்த நாடுகளில் இன்று அவனது ஆட்சி இல்லை. இதற்கு இதற்கு இன்னொரு காரணம், முஹம்மது நாடுகளை பிடித்த பிறகு, அவர்களை முஸ்லிம்களாக மாற்றியது  தான், ஆனால் செங்கிஸ்கான் அதனைச் செய்யவில்லை, ஏனென்றால் அவன் ஒரு மத ஸ்தாபன் அல்லவே!

இப்போது முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுத்ததற்கு முஸ்லிம்கள் மைக்கேலை மெச்சிக்கொள்வதா? அல்லது செங்கிஸ்கான் போன்ற ஒரு கொடுங்கோல் அரசனோடு முஹம்மதுவை ஒப்பிட்டு எழுதியதால் துக்கப்படுவதா என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்படவேண்டும், தள்ளப்படுவார்களா? விஷயம் புரிந்தால் தள்ளப்படுவார்கள், புரியவில்லையென்றால் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!

கேள்வி 498: முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுப்பதற்கு உதவியது எது? ஆன்மீக இஸ்லாமா? அல்லது அரசியல் இஸ்லாமா (Political Islam)?

பதில் 498: மைக்கேல் ஹார்ட் தனது புத்தகத்தின் 3வது பக்கத்திலிருந்து 10வது பக்கம் வரை, "ஏன் முஹம்மதுவிற்கு தான் உலகத்திலேயே முதலிடம் கொடுத்தார்? என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்? 

மொத்தம் 8 பக்கங்கள் அவர் முஹம்மது பற்றி எழுதியுள்ளார்.

இந்த பக்கங்களில் அவர்:

  • முஹம்மது ஒரு நபி என்றுச் சொல்லவில்லை, நல்லவர் என்றுச் சொல்லவில்லை, 
  • அவரது ஆன்மீக கோட்பாடுகள் உலகத்திலேயே மிகவும் நல்ல கோட்பாடுகள் என்று கூறவில்லை, 
  • குர்‍ஆன் மிகவும் உயர்ந்த புத்தகம் என்று கூறவில்லை, 
  • மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாம் சிறந்த மதம் என்று கூறவில்லை
  • முஹம்மது உலகம் பின்பற்றவேண்டிய ஒரு நல்ல  எடுத்துக்காட்டு என்று கூறவில்லை.
  • ஆனால் முஹம்மதுவின் யுத்தங்களை ஆக்கிரமிப்புக்களை, இஸ்லாமின்  முகத்தை எடுத்துக்காட்டிவிட்டார்.

முஹம்மது பற்றிய  தம்முடைய ஆய்வை முடிக்கும்போது கீழ்கணட  வரிகளை எழுதியுள்ளார்:

We see, then, that the Arab conquests of the seventh century have continued to play an important role in human history, down to the present day. It is this unparalleled combination of secular and religious influence which I feel entitles Muhammad to be considered the most influential single figure in human history. (பக்கம் 46 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 10)

முடிவாக‌, ஏழாம் நூற்றாண்டின் அரபு ஆக்கிரமிப்புக்கள் மனித வரலாற்றில் இன்றுவரை ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன என்பதை நாம் காண்கிறோம். முஹம்மதுவின் அரசு செல்வாக்கு  மற்றும் மத செல்வாக்கின் இந்த இணையற்ற கலவையே முஹம்மதுவை மனித வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக நான் உணர்கிறேன்.

மேற்கண்ட ஆங்கில வரிகளில் "secular" என்ற வார்த்தை  முஹம்மதுவின் ஆட்சி, ஆக்கிரமிப்புக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியதாகும். Secular - இந்த வார்த்தை "மதசார்பற்ற" என்று  நாம் இன்று புரிந்துவைத்துக்கொண்டு இருக்கும் பொருளில் அவர் பயன்படுத்தவில்லை.

இந்த புத்தகத்தின் பிடிஎஃப் தொடுப்பை நான் கொடுத்துள்ளேன், அதனை பதிவிறக்கம் செய்துக்கொண்டு நான் கொடுத்த மேற்கோள்களை சரி பார்த்துக்கொள்ளவும். 

முஹம்மதுவின் 8 பக்க விவரங்களை மட்டும் ஒரு முஸ்லிம் கீழ்கண்ட தொடுப்பில் கொடுத்துள்ளார், அதனையும் சொடுக்கி நீங்கள் படித்துக்கொள்ளலாம்.

கேள்வி 499: முஹம்மது பலதெய்வ வழிபாடுகளைச் செய்தார், யூத கிறிஸ்தவர்களிடம் ஏக தெய்வம் பற்றி அறிந்துக்கொண்டார். இப்படி எழுதியது முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுத்த மைக்கேல் ஹெச் ஹார்ட். முஸ்லிம்கள் இதனை படிக்கவில்லையா? முஸ்லிம்கள் இதனை ஏற்பார்களா? 

பதில் 499:  முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக மைக்கேல் ஹெச் ஹார்ட் என்ற ஆசிரியரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு நாட்டியம் ஆடினார்கள். ஆனால் ஒரு முறை கூட அவர் எழுதிய புத்தகத்தை படிக்கவில்லை. இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகள் தகர்ந்துவிடும் படி அவர் கூறியவைகளை முஸ்லிம்கள் கவனிக்க தவறினார்கள்.

குர்‍ஆனில் இருப்பது முஹம்மதுவின் வார்த்தைகள் என்றார் இவர், முஸ்லிம்கள் படிக்கவில்லை. முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்களும், வாள் வலிமையும் தான் அவரை இந்த‌ நிலைக்கு உயர்த்தியது என்றார், முஸ்லிம்கள் கவனிக்கவில்லை.  இயேசுவை விட முஹம்மது பெரியவர்  என்று நான் சொல்லவில்லை என்றார் இவர் (அடுத்த கேள்வியை படியுங்கள்), முஸ்லிம்கள் பார்த்தும் பாராதவர்கள் போல இருந்துவிட்டார்கள்.

இப்போது இன்னொரு விவரத்தையும் அவர் சொல்லியுள்ளார்:

Most Arabs at that time were pagans, who believed in many gods. There were, however, in Mecca, a small number of Jews and Christians; it was from them no doubt that Muhammad first learned of a single, omnipotent God who ruled the entire universe. When he was forty years old, Muhammad became convinced that this one true God (Allah) was speaking to him, and had chosen him to spread the true faith. (பக்கம் 41 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 4)

முஹம்மதுவின் காலத்தில் பெரும்பான்மையான  அரபியர்கள் பல தெய்வ வழிபாடுகளை செய்துக்கொண்டு  இருந்தார்கள். மக்காவில் ஒரு குறிப்பிட்ட சிறிய அளவு யூதர்களும் கிறிஸ்தவர்களும் வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் முஹம்மது இவர்களிடமிருந்து தான்  உலகை ஆளும் சர்வல்லவரான ஒரே இறைவன் பற்றி கற்றுக்கொண்டு இருக்கவேண்டும். முஹம்மதுவிற்கு நாற்பது வயது ஆகும் போது, அந்த ஒரே மெய்யான இறைவன் (அல்லாஹ்) தான் தன்னோடு பேசி, உண்மை மார்க்கத்தை பரப்ப தம்மை தெரிவு செய்தார் என்று அவர் நம்பினார்.

ஆசிரியர் மைக்கேல் முஹம்மதுவின் இறைச்செய்திப் பற்றி எழுதும் போது, கீழ்கண்டவைகளை கூறியுள்ளார்.

  1. முஹம்மது,  பலதெய்வ வழிபாடு செய்கின்றவராக இருந்தார்.
  2. முஹம்மதுவின் குடும்பத்தார்களும், வம்சத்தார்களும் இதே போன்று வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள்.
  3. மக்காவில் அன்று வாழ்ந்த யூத கிறிஸ்தவர்கள் ஒரே தெய்வத்தை வணங்குகிறவர்களாக இருந்தார்கள்.
  4. இவர்களிடமிருந்து தான் முஹம்மது 'ஏக இறைவன்' பற்றி கற்றுக்கொண்டார்.
  5. அதன் பிறகு, தன்னிடம் அந்த ஏக இறைவன் பேசியதாக முஹம்மது நம்பினார்

இந்த ஆசிரியரின் வரிகளின் படி, முஹம்மதுவிற்கு ஏக இறைவன் தோன்றி அவரை நபியாக்கவில்லை, அதற்கு பதிலாக, முஹம்மதுவிற்கு ஏக இறைவன் பற்றிய  அறிவு கிடைத்ததே யூத கிறிஸ்தவர்கள் மூலமாகத் தான்(ஆனால் இஸ்லாமின் படி, ஜிப்ரீல் தூதன் தான் அல்லாஹ் பற்றி முஹம்மதுவிற்கு அறிவிக்கின்றார்). அதன் பிறகு, அந்த யூத கிறிஸ்தவ ஏக இறைவன் தன்னை சந்தித்ததாக முஹம்மது நம்பினார். முஹம்மது ஒரு நபியில்லை, தம்மை அல்லாஹ் நபியாக்கினார் என்று முஹம்மது நம்பிவிட்டார்.

இஸ்லாமுக்கு இது எவ்வளவு பெரிய அடியாக இருக்கிறது என்பதைப் பாருங்கள்.  இதையெல்லாம் படிக்காமல், அல்லது படித்தாலும் வெளியே சொல்லாமல் மக்களை ஏமாற்றவேண்டுமென்பதற்காக முஸ்லிம் அறிஞர்கள் பொய்களைச் சொல்லிக்கொண்டு  இருக்கிறார்கள்.

இந்த புத்தகத்தில் சோல்லப்பட்ட விவரங்களை படிக்கும் நேர்மையான முஸ்லிம்கள் 'இப்புத்தகத்தையோ, அதன் ஆசிரியரையோ' புகழமாட்டார்கள், ஏனென்றால், இவரது புத்தகம் முஹம்மதுவிற்கு நன்மை செய்வதைவிட தீமையைத் தான் அதிகமாக செய்துள்ளது.

கேள்வி 500: முஹம்மது இயேசுவை விட பெரியவர், சிறந்தவர் என்று மைக்கேல் கூறவில்லை! இவரது பட்டியலில் கேடுகெட்ட தீயவர்களுக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறாரா?

பதில் 500:  முஸ்லிம்களின் அறியாமைக்கு ஒரு அளவு என்பது இல்லை, அல்லது முஸ்லிம் அறிஞர்களின் வஞ்சக வேலைக்கு ஒரு அளவு இல்லை, இது தான் இஸ்லாம் இவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது. முஸ்லிம் அறிஞர் அஹமத் தீதத் கூறும் போது, 'இயேசுவை விட முஹம்மதுவே சிறந்தவர், பெரியவர்' என்று  மைக்கேல் இந்த புத்தகத்தில் கூறுவதாக கூறுகின்றார், இதே போன்று பல முஸ்லிம்கள் அறிஞர்கள் கூறுகிறார்கள். இது எவ்வளவு பெரிய  ஏமாற்றுவேலையென்று பாருங்கள்.

முஹம்மது பற்றி எழுதப்பட்ட 8 பக்கங்களை சரியாக படித்து, உண்மையை உலகிற்குச் சொல்லத் தெரியாத இவர்கள் முஸ்லிம் அறிஞர்கள் என்ற பெயரை வைத்துக்கொண்டு இஸ்லாமிய தாவா செய்கிறார்கள், பாவம் முஸ்லிம் மக்கள், இப்படிப்பட்ட முஸ்லிம் அறிஞர்களின் வார்த்தைகளை உண்மையென்று நம்பி, தங்கள் நித்தியத்தை முஸ்லிம்கள் இழந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

என் பட்டியலில் நல்லவனைக் காட்டிலும், கெட்டவனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும்

This book presents my own answer to that question, my list of 100 persons in history whom I believe to have been the most influential. I must emphasize that this is a list of  the most influential persons in history, not a list of greatest. For example, there is room in my list for an enormously influential, wicked, heartless man like Stalin, but no place at all for the saintly Mother Cabrini. (பக்கம் 25 PDF புத்தகம்)

அந்த கேள்விக்கு நான் கொடுக்கும் பதில் தான் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரித்திரத்தில் அதிகமாக செல்வாக்கு பெற்றுள்ள 100 பேர்களின் பட்டியலை நான் என் புத்தகத்தில் கொடுத்துள்ளேன். என்னுடைய இந்த பட்டியல் 'சரித்திரத்தில் அதிகமாக செல்வாக்கு பெற்றவர்கள் பற்றியது மட்டுமே, சரித்திரத்தில் பெரியவர்கள், சிறப்பானவர்கள் பற்றியது அல்ல' என்பதை கவனிக்கவும் (I must emphasize that this is a list of the most influential persons in history, not a list of the greatest). உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், என்னுடைய பட்டியலில் அதிக செல்வாக்குமிக்க ஒருவரின் பெயர் இடம் பெறலாம், ஆனால், அவர் மிகவும் கொடுமைக்காரராகவும், இதயமில்லாதவராகவும் இருக்கலாம், ஸ்டாலினைப் போன்று.  ஆனால், இதே போன்று என்னுடைய பட்டியலில் மிகவும் நல்லவராக இருந்த அன்னை கேப்ரீனி இடம் பெறவில்லை, ஏனென்றால், இந்த அன்னை செல்வாக்கு இல்லாதவர்.

இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு 'தாம் என்ன எழுதுகிறோம் என்று நன்றாக தெரிந்துள்ளது. இயேசுவின் வாழ்க்கையும் தெரியும், முஹம்மதுவின் வாழ்க்கையும் தெரியும். எனவே, தன் புத்தகத்தின் அறிமுகத்தில் மேற்கண்டவிதமாக எழுதியுள்ளார்.  இனபடுகொலை செய்த முஹம்மது, வலியச் சென்று நாடுகள் மீது போர் தொடுத்த முஹம்மது எங்கே, சமாதானப் பிரபுவாகிய இயேசு எங்கே!  இதை விளக்குவதற்குத் தான் அவர் 'என் பட்டியலில் ஸ்டாலின் போன்ற தீயவனுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு இருக்கும், ஆனால் நல்லவர்கள் சிலர் பட்டியலிலேயே இல்லாமல் இருப்பார்கள்' என்று கூறுகின்றார்.

ஹிட்லருக்கும் அதிக முக்கியத்துவம் ஏன்? 

ஹிட்லர் நல்லவர் என்பதால் அல்ல, அவர் அதிகமாக மக்களை இன்ஃபுலியன்ஸ் செய்தார் என்பதால் தான்.

பக்கம் 26: 

In composing this list, I have not simply selected the most famous or prestigious figures in history. Neither fame, nor talent, nor nobility of character is the same thing as influence. Thus Benjamin Franklin, Martin Luther King, Jr., Babe Ruth, and even Leonardo da Vinci are omitted from this list – although some find a place among the Honorable Mentions that follow the One Hundred. On the other hand, influence is not always exerted benevolently; thus an evil genius such as  Hitler meets the criteria for inclusion.  (பக்கம் 26 PDF புத்தகம், பிரிண்ட் புத்தக எண்: 28 - xxviii)

இந்த பட்டியலில், வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற‌ அல்லது மதிப்புமிக்க நபர்களை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் ஒரு மனிதனின் புகழோ, திறமையோ, நற்குணங்களோ என்பவைகள் ஒரு பக்கம், "செல்வாக்கு(Influence)" என்பது இன்னொரு பக்கம். இவ்விரண்டும் வெவ்வேறானவையாகும். இதனால் பெஞ்சமின் பிராங்க்ளின், மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர், பேப் ரூத் மற்றும் லியோனார்டோ டா வின்சி போன்றவர்கள் கூட இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். எனினும், இவர்களை 'கவுரப் பட்டியலில் என் புத்தகத்தில் சேர்த்துள்ளேன்'. வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், 'செல்வாக்கு' என்பது வேறு, 'நற்குணமுள்ளவர்கள் என்பது வேறு". இதனால் ஹிட்லர் போன்ற ஒரு கேடுகெட்ட தீயவன் கூட இந்த நிபந்தனையில் ஜெயித்து, பட்டியலில் இடம் பிடித்துவிட்டான்.

ஆசிரியரின் மேலேயுள்ள வரிகளையும் கவனியுங்கள். நல்லவர்களை இந்த ஆசிரியர் கருத்தில் கொள்ளவில்லையாம், யார் (அவன் நல்லவனோ, கெட்டவனோ) சரித்திரத்தில் அதிக பாதிப்பை (Influence) உண்டாக்கினானோ அவன் பட்டியலில் இடம் பெறுவானாம். இந்த வகையில் பார்த்தால், ஹிட்லருக்கும், ஸ்டாலினுக்கும் 'உலக சரித்திரத்தில் அதிக செல்வாக்கு (Influence) உடையவர்கள் பட்டியலில் இடம் கிடைத்தது, இவர்களில் முஹம்மதுவிற்கு முதலிடம் கிடைத்தது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?  பட்டியலில் முதலில் இருப்பதினால் அவர் நல்லவர் என்று அர்த்தமில்லையென்று ஆசிரியர் கூறுகின்றார்.

வாசகர்கள் ஒன்று செய்யலாம், ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளை படித்துப் பார்க்கலாம், அதன் பிறகு இவர்களுக்கிடையே  ஏதாவது ஒற்றுமை தெரிகின்றதா? என்பதைப் பார்த்து முடிவு செய்யலாம்.

முஹம்மது இயேசுவை விட பெரியவர் என்று நான் சொல்லவில்லை! 

ஆசிரியர் மைக்கேல் ஹெச் ஹார்ட் 27ம் பக்கத்தில் கூறியதை கவனிக்கவும்.  

I have tried to divide the credit for a given development in proportion to each participant’s contribution. Individuals, therefore, are not ranked in the same order as  would be the important events or movements with which they are associated. Sometimes a person who is almost exclusively responsible for a significant event or movement has been ranked higher then one who played a less dominant role in a more important movement.

A striking example of this is my ranking Muhammad higher than Jesus, in large part because of my belief that Muhammad had a much greater personal influence on the formulation of the  Moslem religion than Jesus had on the formulation of the Christian religion. This does not imply, of course, that I think Muhammad was a greater man than Jesus. (பக்கம் 27 PDF புத்தகம்)

நான் என் பட்டியலில், ஒரு முக்கியமான இயக்கத்தை உருவாக்கியவருக்கும், அந்த இயக்கம் பரவுவதற்கு அவரது பங்களிப்பு என்ன என்பதையும் கணக்கில் கொண்டுள்ளேன். இயக்கங்களை(மதங்களை/கண்டுபிடிப்புக்களை) உருவாக்கிய நபர்களையும், அந்த இயக்கங்களையும் நான் வெவ்வேறாக பிரித்திருக்கிறேன்.  இதனால் தான் சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவருக்கு முதலிடம் கொடுத்திருந்திருப்பேன், ஆனால், அந்த இயக்கத்திற்கு முக்கிய காரண கர்த்தாவாக இருந்தாலும், குறைவான பங்கு வகித்தவருக்கு நான் குறைவான இடத்தை கொடுத்திருக்கிறேன்.

இதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், இயேசு மற்றும் முஹம்மதுவின் உதாரணத்தைச் சொல்லலாம். அதாவது நான் முஹம்மதுவிற்கு இயேசுவைக் காட்டிலும் ஒரு படிமேலே இடம் கொடுத்ததற்கு இது ஒரு காரணமாகும். என் கருத்தின்படி சுருக்கமாக சொல்வதானால், 'இஸ்லாம் மதத்தை முழுவதுமாக உருவாக்குவதில் முஹம்மதுவின் தனிப்பட்ட பங்கு அதிகமாக உள்ளது. ஆனால், கிறிஸ்தவ மதத்தை முழுவதுமாக உருவாக்குவதில் இயேசுவின் செல்வாக்கோடு கூட மற்ற சீடர்களின் பங்கும் தேவையாக உள்ளது. இப்படி நான் சொல்வதினால் "முஹம்மது இயேசுவை விட பெரியவர் என்று நான் கருதுகிறேன்" என்று அர்த்தமில்லை. 

இங்கு மைக்கேல் என்ன சொல்கிறார்?

இந்த வரிகளில் மைக்கேல் "இயேசுவை விட முஹம்மது பெரியவர் என்று நான் சொல்லவில்லை" என்கிறார். ஆனால், முஸ்லிம் அறிஞர்கள் "முஹம்மது மற்றவர்களைக் காட்டிலும் சிறப்புமிக்கவர்(Greatest) என்று மைக்கேல் சொல்கிறார், அதனால் தான் முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுத்தார்" என்று பொய்களைச் சொல்கிறார்கள். 

ஆனால், “Influence” என்ற வார்த்தை "Greatest" என்ற வார்த்தைக்கு சமமல்ல என்பது தான் மைக்கேல் ஹார்ட்டின் கருத்து. 

உலகில் அதிக "Influence" உள்ள ஒரு நபர் ஸ்டாலினாகவும், ஹிட்லராகவும் முஹம்மதாகவும் இருக்கக்கூடும், ஆனால், அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் "Greatest" ஆகமுடியாது என்று தம்முடைய அறிமுகத்தில் ஆசிரியர் எடுத்துக் காட்டிவிட்டுத்தான் தன் பட்டியலைத் தொடர்கிறார்.

ஆக, முஹம்மது தம்முடைய "அரசியல் இஸ்லாமினாலும், ஆக்கிரமிப்புக்களினாலும்" தான் அதிகமாக செல்வாக்கு (Influence) படைத்தவராக இருக்கிறார். இதனால் அவர் மற்றவர்களைக்  காட்டிலும் சிறந்தவர்(Greatest) ஆகமுடியாது என்று ஆசிரியர் ஆணித்தரமாக கூறுகின்றார்.  

முஸ்லிம்கள் தில்லுமுல்லு செய்து தம் வார்த்தைகளை மாற்றிச் சொல்லக்கூடும் என்பதை அறிந்ததாலோ என்னவோ, ஆசிரியர் "முஹம்மதுவையும், இயேசுவையும்" ஒரு உதாரணமாக எடுத்து எழுதி, பொய் சொல்பவர்களின் முகத்திரையை கிழித்துள்ளார்.

தேதி: 29th Dec 2020


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்