உன்னைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்? (இயேசு மற்றும் மெஹதி)

(Who Do You Make Yourself Out To Be?)

ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்

முஸ்லிம்களோடு உரையாடும் போது நான் ஆச்சரியப்படும் விவரம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட விவரத்தை (லாஜிக்கை) இஸ்லாமோடு பெருமையாக ஒப்பிடுவார்கள். ஆனால், அதே விவரத்தை (லாஜிக்கை) கிறிஸ்தவத்தோடு எதிர்மறையாக ஒப்பிடுவார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், தங்கள் சொந்த லாஜிக்கின் மீது முஸ்லிம்களுக்கே நம்பிக்கை இருப்பதில்லை என்பதாகும். அதாவது ஒரே லாஜிக்கின் மூலமாக இஸ்லாமை புகழ்ந்து பேசுவார்கள், அதே லாஜிக்கை பயன்படுத்தி கிறிஸ்தவத்தை குறைசொல்வார்கள். 

இதனை புரிந்துக்கொள்ள ஒரு உதாரணத்தைக் காண்போம், அதாவது “நான் இறைவன் என்று இயேசு சொல்லவில்லை, எனவே அவர் இறைவன் அல்ல” என்ற முஸ்லிம்களின் வாதத்தை எடுத்துக்கொள்வோம். “நான் இறைவன்” என்ற சொற்றொடரை அப்படியே இயேசு சொல்லாதபடியினால், முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசு இறைவன் என்று நம்பமாட்டோம் என்றுச் சொல்கிறார்கள். இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் இப்படிப்பட்ட பல வாதங்களை முன்வைக்கிறார்கள். முஸ்லிம்களின் இந்த வாதத்தை இப்போது நம் கட்டுரையின் ஆய்விற்காக எடுத்துக்கொள்வோம்.  ஒரு முஸ்லிம் அறிஞர் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

இயேசு இறைவனா?” என்ற கேள்விக்கு பதில் தரும் வண்ணமாக இன்னொரு எதிர் கேள்வியை கேட்கவேண்டும். அதாவது இயேசு எப்போதாவது நான் இறைவன் என்று ஒப்புக்கொண்டுள்ளாரா? நான் இறைவன் என்னை வணங்குங்கள் என்றுச் சொல்லியுள்ளாரா? நாம் பைபிளை படிக்கும் போது, இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் இப்படி சொன்னதில்லை என்பதை அறியமுடியும் [i].

மேற்கண்ட வாதத்தை முன்வைத்த முஸ்லிம் யோவான் 10:33ஐ வாசிக்கவில்லை போல் தெரிகின்றது. பொதுவாக இப்படிப்பட்ட கேள்விகளுக்கு கிறிஸ்தவர்கள் பதில் சொல்லும் போது, பல வசனங்களை பைபிளிலிருந்து மேற்கோள் காட்டுவார்கள். இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்திய  வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். [ii]. இன்னொரு வகையிலும் கிறிஸ்தவர்கள் அருமையாக இக்கேள்விக்கு பதில் அளிப்பார்கள், அதாவது இயேசு நேரடியாக இதே வார்த்தைகளை பயன்படுத்தி “நான் இறைவன்” என்றுச் சொன்னால், அது திரித்துவ கோட்பாட்டை புரிந்துக்கொள்வதற்கு கடினமாக இருக்கும் என்பதாலும், அதே நேரத்தில், இதனால் பல கல்ட் மதங்கள் உருவாகும் ஆபத்து இருப்பதாலும், இயேசு இப்படி நேரடியாக சொல்லவில்லை என்ற பதிலாகும் [iii].

இப்படிப்பட்ட பாணியில் இக்கேள்விக்கு பதில் சொல்வது சரியானதாக இருந்தாலும், என்னுடைய தளத்தில் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் அறிந்திருக்கின்ற படி, நான் ஒரு தனிப்பட்ட பாணியில் விவரங்களை நோக்குகின்றேன், பதில் கொடுக்கின்றேன் என்பதால், ஒரு புதிய பாதையில் இக்கேள்விக்கான பதிலை தர நான் இப்போது முயலுகின்றேன். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்களின் (லாஜிக்கின்) படி, ஒரு நபர் தன் தெய்வீகத்தன்மையை நிருபிக்க விரும்பினால், அவர் “தான் யார் என்பதை நேரடியாக சொல்லவேண்டும்/ஒப்புக்கொள்ளவேண்டும்” என்பதாகும். இந்த லாஜிக்கை அப்படியே நாம் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வோம், இதன் விளைவு என்ன என்பதை இப்போது பார்ப்போம். முஸ்லிம்கள் கூர்ந்து கீழ்கண்ட விவரங்களை படிக்கவும். 

இஸ்லாமிலே மஸீஹா போன்ற அந்தஸ்தில் ஒரு கதாநாயகன் கடைசி காலத்தில் வெளிப்படப்போகிறார். மேலும் அவர் இஸ்லாமுக்காக சில ஆண்டுகள் தலைவராக இருந்து ஆட்சி செய்யப்போகிறார். முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கும் இந்த நபருக்கு “மெஹ்தி/மஹதி” என்று பெயர், இதற்கு அரபியில் “நேர்வழியில் நடத்தப்பட்டவர் (The rightly guided one)” என்று அர்த்தமாகும். ஷியா பிரிவு முஸ்லிம்கள், இவர் 12து இமாம் என்றும், மேலும் இவர் தற்போது மறைந்துள்ளார், உலகத்தின் கடைசி காலத்தில்  வெளிப்படுவார் என்றும் நம்புகிறார்கள். இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, மஹதி என்ற இவர் ”உலகத்தின் கடைசி காலத்தில் வெளிப்படும் நபர் ஆவார் [iv] மேலும், இஸ்லாமின் போதனைகளின்படி, இவர் பல நல்ல காரியங்களைச் செய்வார். அவைகளில் இரண்டு முக்கியமான நல்ல காரியங்கள் ”இஸ்லாமிய நம்பிக்கையை புதுப்பிப்பது, மற்றும் இஸ்லாமின் எதிரிகளோடு சண்டையிட்டு அவர்களை தோற்கடிப்பதாகும்” [v].

முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கும் இந்த தலைவரினால் இஸ்லாமுக்கும், முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் மிகப்பெரிய நன்மை உண்டாக இருக்கிறது என்று முஸ்லிம்களால் நம்பப்படுகிறது. இஸ்லாமில் மெஹதிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணமாக அனேக ஹதீஸ்கள் இஸ்லாமில் உள்ளன. மேலும், மெஹதி வெளிப்படும் போது அவரை எப்படி அடையாளம் காணவேண்டும் என்பதைப் பற்றி   முஸ்லிம்கள் அனேக புத்தகங்களை எழுதியுள்ளார்கள். இந்த மெஹதி பற்றி அனேக விசித்திரமான விவரங்கள் உள்ளன, அவைகள் பற்றி நாம் இன்னொரு கட்டுரையில் பார்ப்போம். ஆனால், இந்த கட்டுரையின் கருப்பொருளுக்கு வருவோம், அது என்னவென்றால், “மெஹதி தம்மைப் பற்றி என்ன சொல்கிறார்?” என்பது தான். 

இவரைப் பற்றி நான் சொல்வதை கேட்பதைக் காட்டிலும், முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேளுங்கள்.

“அவரிடம் நீங்கள் மெஹதியா? என்று கேட்டால், நான் மெஹதி இல்லை என்று அவர் பதில் அளிப்பார். மேலும் அவர்கள் அவரிடம் ”இது தான் உங்கள் பெயர் (மெஹதி), இது தான் உங்கள் தந்தையின் பெயர், நாங்கள் எதிர்ப்பார்த்த அடையாளங்கள் அனைத்தும் உங்களிடம் காண்கிறோம்” என்றுச் சொல்லும் போது, இவைகள் அனைத்தையும் அவர் மறுப்பார் [vi].

கூர்ந்து கவனியுங்கள். முஸ்லிம்கள் மெஹதியை அடையாளம் காணும் விதங்களில் ஒரு முக்கியமான அடையாளம், “அவர் (மெஹதி) ஒரு போதும் தன்னை மெஹதி என்று ஒப்புக்கொள்ளமாட்டார்” என்பது தான். அவர் மெஹதி என்பதற்கான ஒரு அடையாளம், ”நான் மெஹதி” என்று அவர் ஒப்புக்கொள்ளமாட்டார் என்பது தான் (விசித்திரமாக இருக்கிறதல்லவா?). சுருக்கமாகச் சொல்வதென்றால், “நான் மெஹதி” என்று அவர் ஒரு போதும் சொல்லமாட்டார் என்பது தான். 

நம்புவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் முஸ்லிம்களின் முரண்பாடு என்னவென்றால், ”இயேசுவின் தெய்வீகத்தன்மைக்கு எதிராக முஸ்லிம்கள் முன்வைக்கும் அதே வாதத்தை, தாங்கள் எதிர்பார்க்கும் இஸ்லாமின் நம்பிக்கை நட்சத்திரம் மெஹதியின் நம்பகத்தன்மைக்கு ஆதாரமாக முன்வைக்கிறார்கள் என்பதாகும். 

சுருக்கமாகச் சொல்வதானால், முஸ்லிம்களின் நம்பிக்கை இவ்விதமாக உள்ளது:

இயேசு, ”நான் இறைவன்” என்றுச் சொன்னால் மட்டுமே அவரை நம்புவோம், 

மெஹதி, ”நான் மெஹதி இல்லை” என்றுச் சொன்னால் மட்டுமே அவரை நம்புவோம்.

இறைவனைச் சார்ந்த ஒரு மனிதன் தன் அடையாளத்தை வெளிப்படையாக அறிக்கையிடவேண்டுமா? இது ஒரு எளிமையான கேள்வி ஆகும். 

இதற்கு முஸ்லிம்கள் “ஆம்” என்று பதில் அளிப்பார்களானால், அவர்களின் பதிலின் அடிப்படையில், இஸ்லாமின் மெஹதியை கண்டுபிடிக்கும் அடையாளத்தில் பிழையுள்ளது, எனவே, மெஹதி பற்றிய அடையாள குறிப்பு பிழையானது என்ற முடிவிற்கு முஸ்லிம்கள் வரவேண்டும். 

ஒருவேளை, “இல்லை” என்று முஸ்லிம்கள் பதில் சொல்வார்களானால், இயேசுவிற்கு எதிராக அவர்கள் முன்வைக்கும் வாதம் பிழையானது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும், இனி அவ்வாதத்தை முன்வைப்பதை முஸ்லிம்கள் கைவிடவேண்டும்.

இந்த இரண்டு தெரிவுகளில், ஏதாவது ஒரு தெரிவை முஸ்லிம்கள் தெரிவு செய்யலாம், ஆனால், அந்த தெரிவு இயேசு மற்றும் மஹதி என்ற இவ்விரண்டு நபர்களுக்கும் ஒரே மாதிரியாக பொருந்துவதாக இருக்கவேண்டும். (நான் இறைவன் என்று இயேசு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்த்தால், நான் மெஹதி என்று மெஹதியும் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று எதிர்ப்பார்க்கவேண்டுமல்லவா?).

முஸ்லிம் அறிஞர்களின் இந்த முக்கியமான முரண்பாட்டின் முடிச்சியை அவிழ்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், ஒரு அறிவுரையை கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கவேண்டியுள்ளது. முஸ்லிம் அறிஞர்களின் இப்படிப்பட்ட முரண்பட்ட வாதங்களுக்கு இக்கட்டுரையில் நாம் பதில் கொடுத்த பாணியில் பதில் தருவது சில நேரங்களில் அவர்களின் இதயங்களை கடினமாக்கிவிடும். நற்செய்தி என்பது எப்போதும் ஜெபத்தினாலும், நட்பினாலும் நிறைந்து பகிர்ந்துக்கொள்வதாகும். நம் தளத்தில் காணும் கட்டுரைகள் அனைத்தும், கிறிஸ்தவர்கள் படித்து பயன்பெறவேண்டும் என்பதற்காகவே ஆகும். இவைகள் முஸ்லிம்களோடு ஒரு ஆரோக்கியமான உரையாடல்களை புரிவதற்காக எழுதப்படுகின்றன, அவர்களோடு  விவாதம் புரிந்து வெற்றிப்பெறுவதற்காக அல்ல. முஸ்லிம்களோடு ஆரோக்கியமான உரையாடல்களை புரிந்தவர்கள் தங்கள் அனுபவங்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ள நான் அழைக்கிறேன்.

[i] shajahanahmed.wordpress.com/2010/01/10/%E2%80%98i-am-he%E2%80%99-does-that-really-make-jesus-pbuh-god/

[ii] www.radicaltruth.net/index.php

[iii] www.muhammadanism.org/Jesus/Jesus_did_not_claim.htm

[iv] Zwemer, Samuel. Heirs of the Prophets. Chicago, IL: Moody Bible Institute, 1946, p115.

[v] Esposito, John L. The Oxford Dictionary of Islam. New York, NY: Oxford University Press, 2003, p185.

[vi]http://harunyahya.com/en/Ahir_Zamana_ait_Yeni_Bilgiler/13256/Hazrat_Mahdi_(as)_will_accept_no_claims_regarding_his_being_the_Mahdi

ஆங்கில மூலம்: unravelingislam.com/blog/