தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - குர்‍ஆன் 4:24 -பாகம் 1

(பெண் விடுதலைக்காக உழைக்கும் சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்)

முன்னுரை:

சகோதரி சபரிமாலா அவர்களின் "தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன்" என்ற வீடியோக்களை நான் காணநேர்ந்தது. உடனே  சகோதரி சபரிமாலா அவர்களுக்காக ஒரு கட்டுரையை எழுதவேண்டுமென்று நினைத்து இருந்தேன், ஆனால் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதத்தில் நேரம் கிடைக்கவில்லை.

இப்போது சிறிது நேரமெடுத்து, சகோதரி சபரிமாலா அவர்களுக்கு சில ஆலோசனைகளை, அல்லது இஸ்லாம் பற்றிய பாடங்களை எடுக்கலாம் என்ற (நல்) எண்ணத்தில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

சகோதரி அவர்களின் சமூக சேவை தொடரவேண்டும் என்று விரும்புகிறேன், வாழ்த்துகிறேன். பெண்களுக்காக போராடவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு பெண் முன்வருவது பாராட்டப்படத்தக்கது. ஆனால், திடீரென்று அவர் இஸ்லாமை தழுவியதாக தெரிவதினால், உண்மையில் 'சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய உண்மைகள் தெரியுமா?', அவர் முழுமையாக குர்‍ஆனையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளையும், ஹதீஸ்களையும் அறிந்துள்ளாரா’ என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே. சகோதரி அவர்கள் சிந்திக்கும்படி சில கேள்விகள் கேட்டு, சில உண்மைகளைச் சொல்லி, அவர் தம்முடைய இஸ்லாமிய பயணத்தை மறுபரிசீலனைச் செய்ய உதவலாம் என்ற எண்ணத்தில், இந்த கட்டுரையை எழுதுகிறேன்.  இஸ்லாமிய வாசனையில்லாமல், “பெண் விடுதலை”  என்ற சேவையை சகோதரி தொடருவார்களானால், நீண்ட காலத்திற்கு அவரது சேவையினால் சமூகத்திற்கு நன்மை உண்டாகும். இஸ்லாமிய போர்வையில் இச்சேவையை அவர் செய்ய முயன்றால், இஸ்லாமே அவரது வாயை மூடிவிடும், பெண் விடுதலைச் சேவையை கைவிடும்படி, இஸ்லாம் அவர்களை கட்டாயப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள் சகோதரி...!

இன்றைய சூழலில், முஸ்லிம்கள் எழுதிய புத்தகங்களை படித்துவிட்டு, சகோதரி சபரிமாலா அவர்கள் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது. அவர் குர்‍ஆனை முழுவதுமாக விளக்கவுரைகளோடு படித்துவிட்டு, முஹம்மதுவைப் பற்றிய உண்மைகளை ஆழங்களை அறிந்துக்கொண்டு, செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்பது என் விருப்பம். இதுவரை சகோதரி அவர்கள் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொண்டு இருப்பது, கடலில் வெளியே தெரியும், சிறிய பனிக்குன்று போன்றது, ஆனால், கடலுக்கு அடியில் ஒரு பெரிய பனிமலையே மறைந்திருக்கிறது என்ற ஆபத்தை சகோதரி அறிந்துக்கொள்ள வேண்டும்.

பெண் விடுதலை கட்சி தலைவருக்கும் இஸ்லாமுக்கும் என்னம்மா சம்மந்தம்?

பெண் விடுதலைக்காக போராடுவதற்கு, முன் வந்த சகோதரி, எப்படி இஸ்லாமை தழுவினார் என்பது தான் இன்று கேட்கவேண்டிய மில்லியன் டாலர் கேள்வி?  இஸ்லாம் ஆட்சி செய்யும் நாடுகளில் முக்கியமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சௌதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளில் பெண்களின் நிலைப் பற்றி சகோதரி சிறிது ஆய்வு செய்து, படித்து அறிந்துக் கொள்ளவேண்டுமென்று ஆலோசனைச் சொல்கிறேன்.

"பெண் விடுதலை" என்ற வார்த்தைகள் இஸ்லாமிய‌ அகராதியில் இருப்பதில்லை, மேலும் இந்த கட்சியை கலைத்துவிடும்படி எதிர்காலத்தில், உங்களுக்கு இஸ்லாம் சமுதாயத்திலிருந்தே ஆலோசனைகள் (கண்டனங்கள், பயமுறுத்தல்கள்) வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரிகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் இஸ்லாமை தழுவியதால், எதிர்காலத்தில் இந்த சவாலை எதிர்கொள்வீர்கள்: 'இஸ்லாம் வேண்டுமா? அல்லது பெண் விடுதலை சேவை/கட்சி வேண்டுமா?'. இதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யவேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்படுவீர்கள். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி ஆலோசனைக் கூறுகிறேன்.

குறிப்பு: இப்படிப்பட்ட எதிர்ப்பு இஸ்லாம் தரப்பிலிருந்து உங்களுக்கு வருங்காலங்களில் வரவில்லையென்றால், 'நீங்கள் பெண் விடுதலை என்ற போர்வையில் பெண் அடிமைத்தனத்தை ஆதரிக்கிறீர்கள் என்று பொருள்'. 

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். இஸ்லாமை ஆழமாக ஆய்வு செய்து தான், நான் இஸ்லாமை தழுவினேன் என்று சகோதரி கூறுவார்களானால், ‘பெண் விடுதலை, பெண் உரிமைக்குரல், பெண்கள் பாதுகாப்பு’ என்ற 'நிலைப்பாட்டிலிருந்து' கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களை விளக்கும்படி தாழ்மையுடன் சகோதரியை வேண்டிக்கொள்கிறேன்.

தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - குர்‍ஆன்4:24 - பாகம் 1

பெண்கள் பற்றி குர்‍ஆன் சொல்லும் முக்கியமான விவரங்கள்

பெண்கள் பற்றி குர்‍ஆனின் போதனைகளை, கட்டளைகளை சகோதரி சபரிமாலா அறிவாரா? என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். "தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன்" என்ற தலைப்பில் சிறப்பாக பேசிக்கொண்டு இருக்கும் சகோதரி அவர்கள், இந்த தொடர் கட்டுரைகளில் முன் வைக்கப்படும் ‘குர்‍ஆன்  வசனங்கள்  பற்றியும்' பேசவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

குர்‍ஆனும் பெண்களும் 1: பெண்கள் முஸ்லிம் ஆண்களின் பாலியல் அடிமைகள் (Sex Slaves)

குர்‍ஆனின் படி, ஒரு முஸ்லிம் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக நான்கு மனைவிகளை திருமணம் செய்வதோடு மட்டுமல்லாமல், அடிமைப் பெண்களை வாங்கி வைப்பாட்டிகளாக அதாவது பாலியல் அடிமைகளாக (Sex Slaves) வைத்துக்கொள்ளலாம், இதற்கு எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லை. 

பார்க்க குர்‍ஆன் 4:24

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். . . . (குர்‍ஆன் 4:24) 

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

மேலும், பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் போரில்) உங்கள் கைவசம் வந்துவிட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச் சட்டமாகும். இதைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது.. . . (குர்‍ஆன் 4:24) 

மேலும் பார்க்க குர்‍ஆன் வசனங்கள்:  23:5-6, 33:50 & 70:30

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

23:5. மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். 23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; . . .

70:30. தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

குறிப்பு: முஸ்லிம் ஆண்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்கள் என்று குர்‍ஆன் சொல்வது, பெண்களை விலைக்கு வாங்கி வீட்டிலேயே அடிமைகளாகவும், வைப்பாட்டிகளாகவும் வைத்துக்கொள்ளும் பெண்களையாகும்.

சகோதரிக்கு நம்முடைய கேள்விகள்:

1) நீங்கள் மேற்கண்ட வசனங்களை குர்‍ஆனிலிருந்து எப்போதாவது படித்தது உண்டா? படித்து இருந்தால், நம் தமிழ் பெண் பிள்ளைகளுக்கு, இவைகள் பற்றி உங்கள் கருத்தென்ன? நிலைப்பாடு என்ன? என்று விளக்கமுடியுமா?

2) பெண் விடுதலை கட்சியை நடத்தும் நீங்கள், பெண்களை அடிமைகளாகவும், பாலியல் அடிமைகளாகவும் வைத்துக்கொள்ள இஸ்லாம் அனுமதிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

3) குர்‍ஆனின் இவ்வசனங்கள், உங்களின் அடிப்படை கொள்கையாகிய பெண் விடுதலை என்ற சிறந்த போராட்டத்தை நடத்த தடையாக தெரியவில்லையா உங்களுக்கு?

4) இவ்வசனங்கள் பற்றி தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் என்ற தலைப்பில் பேசுவீர்களா?

5) பெண்களை செக்ஸ் அடிமைகளாக (வைப்பாட்டிகளாக) வைத்துக்கொள்ள அனுமதிக்கும் குர்‍ஆனை, நீங்கள் எப்படி காண்கிறீர்கள்? குர்‍ஆன் உங்களுக்கு எதிராக செயல்படுவதை காணமுடிகின்றதா உங்களால்?

6) ஐஎஸ் ஐஎஸ் (ISIS) போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒரு நாட்டை பிடிக்கும் போது, முஸ்லிம் பெண்களையே அடிமைகளாக விற்பதை நீங்கள் செய்திகளில் வாசிக்கவில்லையா? அந்த தீவிரவாதிகளின் அஸ்திபாரம் குர்‍ஆன் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?

7) முஹம்மதுவிற்கே செக்ஸ் அடிமை (வைப்பாட்டி) இருந்தார்கள் என்ற விவரமாவது உங்களுக்குத் தெரியுமா? 

ஒருவேளை இதுவரை உங்களுக்கு இவ்விவரங்கள் பற்றி தெரியாமல் இருந்தால், இனியாவது தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களின் சிறப்பு மிக்க பெண் விடுதலை புரட்சிக்கு, போராட்டத்திற்கு இஸ்லாம் தடையாக இருக்கும் என்று தாழ்மையோடு சொல்லிக்கொள்கிறேன்.

பெண் விடுதலைக்கும் இஸ்லாமுக்கும் என்னம்மா சம்மந்தம்?

அடுத்த தொடரில் இன்னொரு குர்‍ஆன் வசனத்தை சகோதரிக்கு விளக்குவோம்.

குறிப்பு: இப்படி முஸ்லிம் ஆண்கள் செக்ஸ் அடிமைகள் வைத்திருப்பதை நாம் காணவில்லையே என்று வாசகர்கள் நினைக்கலாம். நாம் இருப்பது இஸ்லாமிய நாட்டில் அல்ல, இந்தியா என்ற ஜனநாயக நாட்டில்.  மேலும், இஸ்லாமிய நாடுகளில் சில இடங்களில் இன்றும் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனம் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இப்படிப்பட்ட காரியங்களுக்கு மூலக்காரணம் குர்‍ஆன் கொடுக்கும் அனுமதிமட்டுமேயாகும்.

கீழ்கண்ட செய்திகளை வாசிக்கவும்:

தேதி: 12th Jan 2022


சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்

உமர் கட்டுரைகள்/மறுப்புக்கள்