முஹம்மதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக

(கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்)

முன்னுரை: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசுகிறார் என்றால், இஸ்லாமியர்களுக்கு அதிக மகிழ்ச்சி. ஆனால், அவரது சில வார்த்தைகள் முஸ்லீம்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற யாஜித்(Yazid) என்ற ஒருவரை ஜாகிர் நாயக் புகழ்ந்து பேசியதாகவும் மற்றும் கர்பலா என்ற போரானது "ஒரு அரசியல் போர்" என்று ஜாகிர் நாயக் சொன்னதாகவும் கூறப்படுகிறது. (யாஜித்(Yazid) முகமதுவின் பேரனோடு சேர்த்து 72 முஸ்லீம்களை கொன்றதாக கூறப்படுகிறது)

பொதுவாக முகமதுவின் நெருங்கிய தோழர்களின் பெயரை பயன்படுத்தும் போது "அவர் மீது அல்லா அருள் புரிவானாக" எனபது போல பொருள் வரும் “Radiallah tala anho” (May Allah be pleased with him) என்ற வார்த்தைகளை இஸ்லாமியர்கள் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தையை ஜாகிர் நாயக் அவர்கள் கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற "யாஜித்" என்பவருக்கு சொன்னார்.

இது மட்டுமல்ல, தன் வார்த்தைகளை ஜாகிர் நாயக் அவர்கள் திரும்ப பெறாமல், தன் வாதத்தை நியாயப்படுத்த ஒரு பத்வா(இஸ்லாமிய சட்டத்தை) உதாரணம் காட்டியதாக சொல்லப்படுகிறது.
   

1. அரப்நியூஸ் செய்தித்தாள் கீழ் கண்டவாறு கூறுகிறது:

ஷியா கோஜா ஜமாத்தின் தலைவர் சப்தார் கர்மாலி கூறும் போது: 

"இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காக செய்தார் என்றுச் சொல்லி, கீழ்தரமாக பேசிவிட்டார். டாக்டர் நாயக்கின் இந்த கூற்று முஸ்லீம்களின் மனதை புண்படுத்திவிட்டது மற்றும் இது ஷியா சுன்னி பிரச்சனையாக மாறவாய்ப்புள்ளது" என்று கூறினார்.

உலேமா கவுன்சிலின் மௌலானா மஹ்மத் தர்யபடி கூறும் போது:

"முஸ்லிம்களின் ஒரு பகுதியினரின் மனதை புண்படுத்தியதற்காக அவர் வருத்தம் தெரிவித்தாலும், அவர் தன் விமர்சனத்தை திரும்ப பெறவில்லை, அதற்கு பதிலாக, தான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க ஒரு பத்வாவை ஆதாரமாக காட்டியுள்ளார். அதாவது டாக்டர் நாயக் தன் விமர்சனத்தை வேண்டுமென்றே சொல்லியுள்ளார் என்று தெரிகிறது" என்றார்.

"இந்த நேரங்களில் நாம் அமைதி காக்க வேண்டும், முஹரம் சமயத்தில் நாம் இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை நியாபகப்படுத்தி மனதில் நிருத்தவேண்டுமே ஒழிய, டாக்டர் ஜாகிர் நாயக் செய்த தவறுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம்" என்று அல்தாஃப் ஷைக் என்ற ஒரு கணிப் பொறியாளர் கூறினார்.

தேசிய‌ முஸ்லீம் பிரண்ட்(National Muslim Front) இயக்கத்தின் தலைவர் அஜிம் அலம்தார் கூறினார்:

"நாயக் இப்படி மன்னிக்க முடியாத விமர்சனத்தைச் செய்து, தன் காலை தன் வாயில் வைத்துக்கொண்டார். டாக்டர் நாயக் அவர்களின் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு ஈகோ(தற்பெருமை) பிரச்சனை உள்ளது, இஸ்லாமிய பிரச்சனைகளை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டென்று அவர் எண்ணுகின்றார், இதனால் சில நேரங்களில் பிரச்சனை மிகவும் பெரியதாக மாறிவிடுகிறது" என்றார்.

மூலம்: http://www.arabnews.com/node/307208 

 2. டைம்ஸ் ஆஃப் இண்டியா (THE TIMES OF INDIA)

ஹஜ் முடித்து திரும்பி வந்த நாயக் தன் சகோதரர் முகம்மத் நாயக் மூலமாக சொன்ன விவரம்: "அந்த அமைதி முகாமில் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, நான் யாஜித் ஐ கடிந்துக்கொள்ளவும் இல்லை, புகழவும் இல்லை. நான் அவர் மீது அல்லா கிருபை புரிவானாக என்று தான் சொன்னேன். மட்டுமல்ல, நான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க தருல் உலோம் டியாபண்ட் பத்வாவும் உள்ளது என்றார்.

மூலம்: THE TIMES OF INDIA - Row over Islamic Preachers Remarks

3. இந்திய முஸ்லீம்கள் தளம் கட்டுரை கூறுகிறது: 

பத்வாவை பற்றி அவர் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜாகிர் நாயக் அவர்கள் புகழ்பெற்ற நல்ல இஸ்லாமிய அறிஞர் என்று நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பேன். இந்த பத்வாக்கள் என்னத்துக்கு பிரயோஜனபப்டும், குர்‍ஆன் தெளிவாக கீழ் கண்டவாறு சொல்லும் போது:

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (குர்‍ஆன் 4:93)

மற்றும் திரு நாயக் அவர்களுக்கு குர்‍ஆன் எல்லாம் மனப்பாடம் என்று நினைக்கிறேன்,

மூலம்: Indian Muslims . In - Mind Your Words Mr. Zakir Naik

4. இஸ்லாமிக் இன்சைட் தளம்

பெரும்பான்மையான சுன்னி அறிஞர்கள் மற்றும் சட்ட நிபுனர்களாகிய இபின் கதிர், இபின் தைமியா மற்றும் அஹமத் பின் ஹன்பல் போன்றவர்கள் யாஜித்தை கண்டித்துள்ளார்கள் மற்றும் யாஜிதை சபிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Islamic Insights . Com - Zakir Naik Draws Ire with Karbala Comments

5. ஜாகிர் நாயக்கிற்கு இந்திய முஸ்லீம்கள் கண்டனம்: (Press Conference to condemn Dr. Zakir Naik)

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press Conference to condemn Dr. Zakir Naik 01 - YouTube Link Part 1
Press Conference to condemn Dr. Zakir Naik 02 - You Tube Link Part 2
Press Conference to condemn Dr. Zakir Naik 03 - You Tube Link Part 3 
Press Conference to condemn Dr. Zakir Naik 04 - You Tube Link Part 4
Press Conference to condemn Dr. Zakir Naik 05 - You Tube Link Part 5

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வீடியோ: (இந்த வீடியோ யூடியூப்லிருந்து நீக்கப்பட்டு விட்டது.)

http://www.youtube.com/watch? v=k8xtVRy3960 (This video has been removed by the user)

டாக்டர் ஜாகிர் நாயக் அளித்த மறுப்பு: Dr. Naik's Response

இந்த செய்தி ஏன் கிறிஸ்தவ தளத்தில் பதிக்கப்படுகிறது:

பொதுவாக, குர்‍ஆன் வசனங்கள், ஹதீஸ் வசனங்கள் இல்லாத பொதுவான கட்டுரைகளை அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய செய்தி கட்டுரைகளை என் தளத்தில்(ஈஸா குர்‍ஆன்) நான் பதிப்பதில்லை. ஆனால், இந்த செய்தியை மட்டும் என் தளத்தில் பதிக்க நான் விரும்புகிறேன், ஏனென்றால்,

1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் எது சொன்னாலும், என்ன சொன்னாலும் மற்ற மார்க்கம் பற்றி எந்த தவறான கருத்தைச் சொன்னாலும் அதை அப்படியே பரிசோதித்துப் பார்க்காமல் அப்படியே கேட்கும் முஸ்லீம்கள், இப்போது தங்கள் நம்பிக்கைப் பற்றி இவர் சொன்ன விவரங்கள் தவறு என்று சொல்கிறார்கள். என‌வே, திரு ஜாகிர் நாய‌க் அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து பிஜே அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து வேறு யாராக‌ இருந்தாலும் ச‌ரி என்னோடு சேர்த்து, ஏதாவ‌து விவ‌ர‌ம் சொன்னால், அது ச‌ரியான‌தா என்று கேள்வி கேட்டு ஆதார‌ம் தேடிப் பார்க்க‌வேண்டும், அது தான் ச‌ரியான‌ வ‌ழிமுறை என்பதை இஸ்லாமியர்கள் அறிய வேண்டும்.

2. பெரும்பான்மையாக இபின் கதிர் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆன் வசனங்களுக்கு, ஹதீஸ்களுக்கு சொல்லும் உரையை நான் என் கட்டுரைகளில் பயன்படுத்துகிறேன், அதையெல்லாம் நம் இஸ்லாமியர்கள் தவறு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், இப்பொது தங்களுக்கு என்று ஒரு பிரச்சனை என்று வரும் போது, இபின் கதிர் போன்ற சுன்னி இஸ்லாமிய அறிஞர்களே, யாஜித்தை கண்டித்துள்ளார்கள், அப்படி இருக்கும் பொது, ஜாகிர் நாயக் எப்படி யாஜித்துக்கு மதிப்பு தரலாம் என்று கேட்கிறார்கள்.

3. ஜாகிர் நாயக் அவர்கள் யாஜித்துக்கு மதிப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், இஸ்லாமை ஜாகிர் நாயக் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர் மீது குற்றம் சுமத்தப்படும் போது எப்படி அவர் மற்றவர்களின் வேத வசனங்களுக்கு பொருள் தருகிறார், மற்றும் நான் சொல்வது தான் சரியானது நீங்கள் சொல்வது தவறானது என்றுச் சொல்கிறார் என்பது தான் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.

முடிவுரை: தன் வினை தன்னைச் சுடும்.

திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு அளித்த இதர பதில்கள்