உடலில் பச்சை(tattoo) குத்திக்கொள்வதை இவ்வசனம் (லேவி 10:28) எதிர்க்கின்றதா?

பச்சை குத்துதல் என்ற பழக்கம் பல நாடுகளில் பல்லாண்டு காலமாக இருந்துள்ளது.  பொதுவாக பச்சை குத்திக்கொள்வதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன, அவைகளில் சில:

  1. அதிகமாக நேசிக்கும் ஒன்றை, நபர்களின் பெயர்களை பச்சை குத்திக்கொள்வார்கள்.
  2. சில நேரங்களில் மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக, கைகளிலும், கழுத்திலும் குத்திக்கொள்வார்கள்.
  3. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விஷயத்தை எதிர்ப்பதாக இருந்தால், அதனை பச்சையாக குத்திக்கொண்டு, தம் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்.
  4. கிறிஸ்தவர்களிடத்திலும் இன்று இது பரவியுள்ளது, இயேசு, சிலுவை என்று பல சின்னங்களை பச்சையாக குத்திக்கொள்கிறார்கள்.

புதிய  ஏற்பாடு நேரடியாக இதைப் பற்றி சொல்லவில்லை, ஆனால் பழைய ஏற்பாடு நேரடியாக கீழ்கண்ட வசனத்தின் மூலம் கண்டிக்கிறது, ஏனென்றால் அக்காலத்தில் பல தெய்வவழிப்பாட்டு மக்கள் தங்கள் தெய்வங்களை உடலில் பச்சையாக குத்திக்கொள்வார்கள். இப்படி செய்யவேண்டாம் என்று தேவன் கட்டளையிட்டார்.

லேவி 10:28  செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.

28 "'Do not cut your bodies for the dead or put tattoo marks on yourselves. I am the LORD.

மத காரியங்களுக்காக உடலை கிழித்துக்கொள்வது (ஷியா முஸ்லிம்கள் இப்படி செய்கிறார்கள்), உடலை காயப்படுத்திக்கொள்வது (இந்துக்களில் சிலர் வேலை கன்னத்திலும், நாக்கிலும் குத்திக்கொள்கிறார்கள்), போன்றவை கூடாது என்று தேவன் கட்டளையிடுகின்றார். இது பக்தியாக கருதப்படாது, முழு இருதயத்தோடு, பலத்தோடு அன்பு கூறுவதே அர்த்தமுள்ள பக்தியாக உள்ளது.

சரி பக்திக்காகத் தானே உடலில் பச்சை குத்திக்கொள்ளாதீர்கள் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது. ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட ஏன் பச்சை குத்திக்கொள்ளக்கூடாது? என்ற கேள்வி எழும்.

உடலில் ஒரு நிரந்தரமான அடையாளம் வைத்துக்கொள்வது சரியல்ல. அன்பு நிரந்தரமாக இருப்பதில்லை, இன்று நீங்கள் சார்ந்துள்ள கட்சியைவிட்டு வேறு கட்சிக்கு  தாவமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்? நாம் நேசிக்கும் தலைவர், நடிகர் அல்லது கலைஞர், நாளைக்கு ஒரு தீய காரியத்தைச் செய்யும் போது, அந்த பச்சை குத்திக்கொண்டதை மறைக்க நாம் முயலுவோம். மறுபடியும் பச்சைக் குத்திக்கொண்டதை மாற்றவேண்டுமென்றால், அது ஒரு கடினமான காரியமாக இருக்கும். எனவே பச்சை குத்திக்கொள்வதை விட்டுவிட்டால் நல்லது.

இயேசு மற்றும் சிலுவையைக் கூட பச்சை குத்திக்கொள்ளக்கூடாதா? என்று கேள்வி கேட்டால், இல்லை என்பது தான் என் பதில்.

ஒருவேளை இந்த கேள்வியை இயேசுவிடம் கேட்டு இருந்தால் என்ன பதில் வந்திருக்கும்?

1) என் மீது  நீ வைத்திருக்கும் அன்பை பச்சை குத்திக்கொள்வதின் மூலம் வெளிக்காட்ட விரும்புகின்றாயா? என்று அவர் கேட்பார்.

2) உலக  மக்கள் பார்க்கும் படி, உன் பக்தியை காட்ட விரும்புகிறாயா? என்று கேட்பார். 

என் மீது அன்பாகவும், ஒருவரில் ஒருவர் அன்பாகவும் நீங்கள் இருந்தால், அதை உலகம் பார்க்கட்டும், அதைப் பார்த்து அவர்கள் "இவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்லது கிறிஸ்தவர்கள்" என்று அறியட்டும் என்று இயேசு கூறுவார். 

யோவான் 13:34. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

35. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

இன்றைக்கும் எகிப்திலுள்ள காப்டிக் கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் சிலுவையை பச்சைக் குத்திக்கொள்கிறார்களே, இது தவறு என்று சொல்கிறீர்களா? 

எகிப்திலுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் சிலுவையை பச்சையாக குத்திக்கொள்வதற்கு ஒரு வரலாறு உண்டு.  முதல் நூற்றாண்டு தொடங்கி இயேசுவின் சீடர்கள் மூலமாக நற்செய்தி அறிவிக்கப்பட்டு இயேசுவை பின்பற்றியவர்கள் தான் காப்டிக் கிறிஸ்தவர்கள். இன்று எகிப்தில் பிறந்து இரண்டே மாதங்கள் கூட ஆகாத குழந்தைக்கும் அவர்கள் கையில் ஒரு சின்ன சிலுவையை பச்சையாக குத்துகிறார்கள், இதற்கு பல காரணங்கள் உண்டு.

1) இஸ்லாமியர்கள் வேறு நாடுகளை பிடிக்கும் போது, முஸ்லிமாக மாறுகின்றாயா? அல்லது ஜிஸ்யா வரி கட்டுகின்றாயா? என்று யூத கிறிஸ்தவர்களை கட்டாயப்படுத்தினார்கள். இஸ்லாமிய நபி முஹம்மதுவிற்கு பிறகு, கலிஃபாக்கள் எகிப்தை கைப்பற்றிய போது, முஸ்லிம்களாக மாறாத கிறிஸ்தவர்களின் கைகளில் சிலுவை அடையாளம் போட்டார்கள். இதன் மூலம் அவர்களிடமிருந்து ஜிஸ்யா வரி வாங்குவதற்கு வசதியாக அது இருந்தது. 

2) இந்த பழக்கம் முஸ்லிம்களின் ஆட்சியிலிருந்து விடுபட்ட பிறகும் கிறிஸ்தவர்கள் இந்த பழக்கத்தை இன்றளவும் பின்பற்றுகிறார்கள். இப்போது இதற்கு வேறு காரணமுண்டு, அதாவது முக்கியமாக எகிப்து நாட்டில், கிறிஸ்தவ குழந்தைகளை கடத்திக்கொண்டு, அவர்களை முஸ்லிம்களாக மாற்றிவிடுகிறார்கள் இன்றைய முஸ்லிம்கள்.

3) குழந்தைகளை கடத்தினாலும், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற அடையாளம் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதற்காக, எகிப்திய கிறிஸ்தவர்கள் இன்றளவும், சின்ன குழந்தைகளின் கைகளில் சிலுவை படத்தை பச்சையாக குத்திவிடுகிறார்கள்.

4) இன்றைய கிறிஸ்தவர்கள் இதனால் இன்னொரு பிரச்சனையிலும் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, பல வன்முறை தாக்குதல்களுக்கும், கேலிபரியாசங்களுக்கும் முஸ்லிம்களால் ஆளாகிறார்கள். கையில் சிலுவை உள்ளதா, இவன் ஒரு கிறிஸ்தவன், இவனை பிடி, அவமானப்படுத்து என்று பெரும்பான்மை முஸ்லிம்கள் இருக்கும் எகிப்து நாட்டில் அடிக்கடி துன்பத்திற்கு ஆளாகிறார்கள் கிறிஸ்தவர்கள்.

கீழ்கண்ட செய்திகளை படிக்கவும்:

எனவே, எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் வேறு விதமாக உள்ளது. 

பரிசுத்த வேதாகமத்தின் படி, எந்த காரணத்திற்காகவும் பச்சை குத்திக்கொள்வது நல்லதல்ல.