அப்துல்லாஹ்
இவர் அப்துல் முத்தாலிப் என்பவரின் இளைய மகனாவார். இவர் அமீனாவின் கணவரும், முஹம்மதுவின் தந்தையுமாவார். அப்துல்லாஹ் என்றால், அல்லாஹ்வின் அடிமை (அப்த்) என்பது பொருளாகும். ”அல்லாஹ்” என்ற பெயர் முஹம்மதுவின் காலத்திற்கு முன்பே மிகவும் புகழ்பெற்ற பெயராக இருந்தது என்பதை இந்த பெயர் மூலமாக அறியலாம். உண்மையில், முஹம்மதுவின் கொள்ளுத்தாத்தா ”காபா”வின் நிர்வாகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீனா அவர்கள் கர்ப்பிணியாக இருந்த காலக்கட்டத்தில், பாலஸ்தீனாவில் உள்ள காஜா என்ற இடத்திற்கு வியாபாரத்திற்காக அப்துல்லாஹ் சென்றார். ஆனால், திரும்பி வரும் போது நோய்வாய்ப்பட்டு மதினாவில் மரித்துவிட்டார்.