தலாக் 6 – நபிவழி: மாமனாருக்கு விருப்பமில்லையா! மருமகளை தலாக் கொடுத்துவிடு

தலாக் பற்றிய முந்தைய கட்டுரைகளை இங்கு சொடுக்கி படிக்கவும்.

இந்த 21ம் நூற்றாண்டு ”முஹம்மதுக்கள்” எப்படி தலாக்கை புரிந்துக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிவதற்கு முன்பாக, ஏழாம் நூற்றாண்டின் ”முஹம்மது” தலாக் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதை புரிந்துக்கொள்வது முக்கியமானதாகும். இக்காலத்தின் முஸ்லிம்கள் பெண்களை எப்படி கௌரவிக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள அக்காலத்தின் முஹம்மது எப்படி கௌரவித்தார் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். 

ஒரு சமுதாயம் முழுவதும் “பெண்களை ஒரு உயிரற்ற பொருளாக” மதித்துள்ளது என்பதை அறியும் போது மனதுக்கு துக்கமாக உள்ளது. இதோ, இங்கு இன்னொரு உதாரணத்தைக் காண்போம், மனதை கல்லாக்கிக்கொண்டு படியுங்கள்.

1) மருமகளுக்கு தலாக் கொடுக்க கட்டாயப்படுத்திய மாமனார் (உமர்):

அப்துல்லாஹ் இப்னு உமர் அறிவித்ததாவது: 

என் மனைவியை நான் அதிகமாக நேசித்தேன், ஆனால் என் தந்தை அவளை வெறுத்தார். அவளுக்கு விவாகரத்து கொடுத்துவிடு என்று என்னிடம் கூறினார், நான் ‘முடியாது’ என்று மறுப்பு கூறினேன். அவர் இறைத்தூதர் முஹம்மது(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி தெரிவித்தார். இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) ”அவளை விகாரத்து கொடுத்துவிடு” என்று கூறினார். (ஆதார நூல்: சுனன் அபூ தாவுத், புத்தகம் 41, ஆங்கில  எண் 5119)

Narrated Abdullah ibn Umar:

A woman was my wife AND I LOVED HER, but Umar hated her. He said to me: Divorce her, but I refused. Umar then went to the Prophet (peace_be_upon_him) and mentioned that to him. The Prophet (peace_be_upon_him) said: Divorce her. (Sunan Abu Dawud, Book 41, Number 5119)

2) முஹம்மது, உமர் மற்றும் அப்துல்லாஹ் இப்னு உமர் – யார் இவர்கள்?

மேற்கண்ட நிகழ்ச்சியில் மூன்று நபர்கள் வருகிறார்கள். 

அ) முஹம்மது – இவர் இஸ்லாமிய இறைத்தூதர், உலக மக்களில் சிறந்தவர், நற்குணச்சீலர் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

ஆ) உமர் – இவர் முஹம்மதுவின் தோழர் (முக்கியமான சீடர்), மேலும் முஹம்மதுவிற்கு அடுத்ததாக இரண்டாவது தலைவராக (கலிஃபா) இருந்து இஸ்லாமிய ஆட்சி புரிந்தவர். உலக முஸ்லிம்கள் முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, மதிப்பது அவரது தோழர்களைத் தான். இவர்களில் அபூ பக்கருக்கு அடுத்தபடியாக முக்கியமானவர் உமர் ஆவார். 

இ) அப்துல்லாஹ் இப்னு உமர் – இவர் மேற்சொன்ன உமரின் மகன் ஆவார்.

உமரும், அவரது மகனும் முஹம்மதுவை கண்டவர்கள், அவரோடு பேசியவர்கள், அவரது அறிவுரைகளின் படி நடந்தவர்கள்.

3) மாமனாருக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தார்கள்?

அப்துல்லாஹ் தன் மனைவியை அதிகமாக நேசித்தார். ஆனால், உமருக்கு மருமகளை பிடிக்கவில்லை. அவளை விவாகரத்து செய்துவிடு என்று சொன்னாலும் மகன் கேட்கவில்லை. நேரடியாக முஹம்மதுவிடம் முறையிட்டார். 

முஹம்மது யார்? அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர், உலகத்துகே வழிகாட்ட வந்தவர், மேலும், உமரின் மகள் ஹஃப்ஸாவை திருமணம் புரிந்தவர். சுருக்கமாகச் சொல்வதானால், உமரின் மருமகன் முஹம்மது ஆவார். 

அந்த காலத்தில், முஹம்மதுவின் முடிவிற்கு எதிராக யாரும் பேசமுடியாது. முஹம்மது ஒரு முடிவை எடுத்தால், அல்லாஹ்வும் அதே முடிவை எடுத்துள்ளார் என்று அர்த்தம். 

முஹம்மது என்ன செய்திருக்கவேண்டும்? 

உமரே! உம் மருமகளை விவாகரத்து செய்யச் சொல்ல உமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? உம்முடைய மருமகளிடம் பிழைகள் இருந்தால், அவளுக்கு அறிவுரை கூறவேண்டியது கணவனின் வேலை. நீர் ஏன் இப்படி அவசரப்படுகின்றீர்?” என்று கேள்வி கேட்டு இருந்திருக்கவேண்டும். ஆனால், முஹம்மது தன் மாமனாரின் பேச்சைக் கேட்டு, “அவளை விவாகரத்துச் செய்” என்று அப்துல்லாஹ்விற்கு கட்டளையிட்டுள்ளார். இது கண்டிக்கப்படவேண்டிய செயலாகும். 

4) இது பெண் இனத்துக்கு எதிரான சதிச்செயல் அல்லவா? 

முஹம்மதுவிற்கும் சரி, உமருக்கும் சரி, ஒரு பெண்ணுக்கு தலாக் வாங்கிக்கொடுக்க அதிகாரம் கொடுத்தவர் யார்?

நீதியாக தீர்ப்புச் சொல்லவேண்டிய முஹம்மது, எடுத்தேன் கழித்தேன் என்று இப்படி தீர்ப்புச்சொல்வது எப்படி சரியானதாக இருக்கும்?

தற்கால முஸ்லிம் அறிஞர்களிடம் கேட்டுப்பாருங்கள்? ஒரு பெண்ணுக்கு தலாக் கொடுக்க ”பல நிபந்தனைகள் உள்ளன, பல வழிமுறைகள் உள்ளன” என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள் பின்பற்றும் முஹம்மதுவோ, அவரது தோழர் உமரோ, கீழ்தரமாக நடந்துக் கொண்டுள்ளார்கள்.

இது பெண்களுக்கு எதிராக நடந்துக்கொள்வது ஆகாதா?

முஹம்மது உமரிடம் மற்றும் அப்துல்லாஹ்விடம், பலவாறு விசாரித்து இருந்திருக்கலாம் அல்லவா? அவளிடம் திருந்தமுடியாத அளவிற்கு பிழைகள் இருந்தால், அவளின் பெற்றோர்களிடம் பேசி சமரசம் செய்திருக்கவேண்டும். கடைசியாகத் தான் தலாக் பற்றி சிந்தித்து இருக்கவேண்டும்.

குறைந்த பட்சம், தலாக் பற்றி அல்லாஹ் குர்-ஆனில் சொன்னவைகளின் படி நடந்துக்கொள்ள முஹம்மது முயற்சி எடுக்கவில்லையே ஏன்?

உமரின் மகனாகிய அப்துல்லாஹ் மிகவும் நல்லவர் என்று நான் சொல்லவில்லை, அதே போல அவரது மனைவியிடம் தவறுகள் இல்லையென்றும் நான் சொல்லவரவில்லை. இங்கு கேட்கப்படும் கேள்வி என்னவென்றால், ‘முஸ்லிம்களின் இறைத்தூதர் முஹம்மது நடந்துக்கொண்டது சரியா? தவறா?’ என்பது தான். இப்படிப்பட்ட முடிவுகளை கொண்டுள்ள இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு என்ன மரியாதை இருக்கும்? 

5) இன்று இதே போல மாமனார்கள் நடந்துக்கொண்டால். . .?

இன்று முஸ்லிம்களின் குடும்பங்களில் இப்படி நடந்தால்?

அன்பு முஸ்லிம் நண்பனே! உன் தகப்பன் உன்னிடம் வந்து, ‘உன் மனைவியை எனக்கு பிடிக்கவில்லை, அவளை விவாகரத்து செய்துவிடு’ என்றுச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

ஏன் ஏதற்கு? என்று காரணங்கள் கேட்பீர்கள் அல்லவா?

பெண்ணின் குடும்பத்தார்களும் அதன் பின்னணியை கேட்பார்கள் அல்லவா? மாமனாரின் பேச்சைக் கேட்டு, எந்த ஒரு தவறும் செய்யாத பெண்ணுக்கு தலாக் சொன்னால், அந்த மாமனாரின், மாப்பிள்ளையின் தோலை உரித்துவிடுவார்கள் அல்லவா?  நாங்கள் எங்கள் மகளை உனக்கு திருமணம் செய்துக்கொடுத்தது, நல்ல வாழ்க்கை வாழுவதற்கு, இப்படி மாமனார் சொன்னார், வழியில் வந்தவன் போனவன் சொன்னான் என்றுச் சொல்லி விவாகரத்து கொடுப்பதற்கு அல்ல என்றுச் சொல்லி சரியான பாடத்தை கற்றுக்கொடுப்பார்கள் பெண் வீட்டார்.

6) முஹம்மதுவின் மற்றும் உமரின் நிழல் கூட, நம் முஸ்லிம்கள் மீது படக்கூடாது

முஹம்மதுவின் மனைவிமார்கள் குடும்ப செலவிற்கு கொஞ்சம் பணத்தை உயர்த்துங்கள் என்று கேட்டதால், தலாக் பற்றிய மிரட்டலை அல்லாஹ் வஹியாக இறக்கினான். இது முதல் கொடுமை.

ஒரு இரகசியத்தை கட்டிக்காக்கவில்லை என்பதால், அல்லாஹ் முஸ்லிம்களின் அன்னைகளை மிரட்டுகின்றார். இது இரண்டாம் கொடுமை.

இது போதாது என்றுச் சொல்லி, முஹம்மது தன் மனைவி கவர்ச்சியாக இல்லை என்பதாலும், பருமனாகவும் இருப்பதாகவும் சொல்லி, விவாகரத்து கொடுக்க முயன்றார். இது மூன்றாவது கொடுமை.

இக்கட்டுரையில் பார்த்தபடி, முஹம்மதுவும், உமரும், இன்னொருவரின் குடும்பத்தை பிரித்து புன்னியத்தைக் கட்டிக்கொண்டார்கள், அப்பெண்ணின் வயிற்றெறிச்சலுக்கு காரணமாக இருந்தார்கள்.

முஹம்மதுவின் போதனைகளை பின்பற்றும் முஸ்லிம் சமுதாயங்களில் பெண்களின் நிலை இவ்வளவு தானா!? அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லையா? 

வேலியே பயிரை மேய்ந்தால், யாரிடம் சென்று முறையிடமுடியும்? கணவனாகவும், தந்தையாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும் இருக்கும் முஸ்லிம் ஆண்களே தங்கள் குடும்ப பெண்களை இப்படி கீழ்தரமாக மதித்தால், யார் அப்பெண்களுக்கு ஆதரவாக போராடுவார்கள்?

முடிவுரை: இந்த 21ம் நூற்றாண்டில் முஸ்லிம் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை புரிந்துக்கொள்ள, முஹம்மதுவின் வாழ்க்கையை நாம் அறியவேண்டும். முஸ்லிம்களின் அன்னையர்கள் பட்ட பாடுகளை ஆய்வு செய்யவேண்டும். 

முஸ்லிம் ஆண்களும், முஹம்மதுவும் மற்றும் அல்லாஹ்வும் பெண்களுக்கு எதிராக சதி செய்து, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக, உயிரற்ற பொருட்களைப் போல நடத்தினால், யார் அவர்களை விடுதலையாக்கமுடியும்?

தலாக் தொடரும்….


தலாக் பற்றிய இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்