ரமளான் நாள் 10: தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா?

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

அன்புள்ள தம்பிக்கு 

உன்மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. 

நீ எழுதிய கடிதத்திற்காகவும், கேள்விக்காகவும் மிக்க நன்றி. 

உன் கடிதத்தில் நீ கீழ்கண்ட குற்றச்சாட்டை வைத்தாய்: 

தீர்க்கதரிசிகள் பாவம் செய்தார்கள் என்று பைபிள் சித்தரிக்கிறது, நபிகள் பாவம் செய்வார்களா? தாவீது பாவம் செய்தார் என்றுச் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. முஹம்மது பாவம் செய்யாத ஒரு மேன்மையான மனிதராக இருக்கிறார் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் பைபிள் நபிகளை குற்றப்படுத்துகிறது. இது தவறல்லவா?” 

இன்று நான் 2 சாமுவேல் புத்தகத்தில் 11ம் 12ம் அதிகாரங்களை வாசித்தேன். உடனே உன் கேள்வி எனக்கு ஞாபகம் வந்தது. இறைவேதத்தில் உனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்றான தாவீது ராஜாவின் (தாவூத் நபி) சம்பவம் அங்கேயிருந்தது. உன் சிறுவயது முதல் நீ நேசித்த கதாபாத்திரம் இந்த தாவீது. இன்றும் உனக்கு 23ம் சங்கீதமும், தாவீது கோலியாத் நிகழ்ச்சி ஞாபகத்தில் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் நீ இப்போது முஹம்மதுவை நேசிக்கிறாய். அது உன்னுடைய சுதந்திரம். ஆனால் இந்த இரண்டு கதாபாத்திரங்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உனக்காக இந்த கடிதத்தில் பகிர்ந்து கொள்கிறேன். உன்னுடைய கேள்விக்கும் இது பதிலாக அமையும். முடிவை உன்னுடைய சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். 

ஒரு நாள் தாவீது ராஜா, தனது படைகளை யோவாபின் தலைமையில் யுத்தத்துக்கு அனுப்பிவிட்டு அரண்மனையில் இருக்கிறான். மொட்டை மாடியில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு அழகிய பெண் குளித்துக்கொண்டிருப்பதை காண்கிறான். அவள் அழகில் மயங்கிய ராஜா அவளை பற்றி விசாரித்து சொல்லுமாறு தனது சேவகர்களுக்கு கட்டளையிடுகிறான். அவள் உரியாவின் மனைவி என்று ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. தாவீது ராஜா அவளை வரவழைத்து அவளுடன் உடலுறவு கொள்கிறான். மீண்டும் அவளை அவள் வீட்டிற்கே அனுப்பி விடுகிறான். இந்த உரியா தன் இராணுவத்தில் வேலை செய்யும் தேச பக்தியுள்ள ஒரு போர் சேவகனாக இருக்கிறான். மேலும் ஒரு சதி செய்து, உரியா போரில் கொல்லப்பட திட்டம் தீட்டுகிறான். ராஜாவின் திட்டப்படியே உரியா மரணிக்கிறான். ஹித்தா (துக்க) காலம் முடிந்தவுடன் உரியாவின் மனைவியாகிய பெத்சேபாலை அழைத்து ராஜா திருமணம் செய்துகொள்கிறான். இந்த பாவத்திற்கு தேவன் தண்டனை கொடுத்தார். 

தம்பி, இந்த நிகழ்ச்சி போதிக்கும் சில படிப்பினைகளை முதலில் உன்னோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

  • ஒரு இராஜாவின் கடமை போர்காலத்தில் போருக்கு செல்வதாகும். தாவீது தனது கடமையை தவறினான்.
  • அந்த காலத்தில் ஒரு ராஜா விரும்பினால் எத்தனை திருமணங்களையும் செய்யலாம். ஒரு பெண், இன்னொருவனின் மனைவியென்று அறிந்தும் அவளை அழைத்து உடலுறவு கொண்டான்.
  • ராஜா திட்டமிட்டு அவள் கணவரை கொன்றான்.

தம்பி, நாங்கள் செய்யும் பாவங்களை அறியாமல் செய்தோம் என்று சாக்குபோக்கு சொல்லமுடியாது. இறைவன் தீமைகளால் எம்மை சோதிக்கிறவரல்ல என்று இறைவேதம் சொல்கிறது. இங்கு தாவீது ராஜா எல்லாம் தெரிந்தும் தனது இச்சைக்கு கீழ்படிந்தான் என்பது புலனாகின்றது. 

சரி தம்பி, இப்பொழுது நீ உயிரிலும் மேலாய் நேசிக்கும் முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம். 

முஹம்மதுவின் (வளர்ப்பு) மகன் தன் தகப்பனிடம் வந்து “நான் என் மனைவியை விவாகரத்து செய்ய போகிறேன், நீங்கள் அவளை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறான், இதனை குர்-ஆன் 33:37ல் காணலாம். அந்த வசனத்தை ஒரு முறை படிப்போமா? 

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)

எந்த ஒரு மகனாவது தன் தந்தையிடம் வந்து, நான் என் மனைவியை விவாகரத்து செய்கிறேன், அதன் பிறகு நீங்கள் அவளை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று ஒரு காரணமும் இல்லாமல் சொல்லமுடியுமா? கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்தால், அவளை விவாரகரத்து செய்ய விரும்பினால், இது சாதாரணமான விஷயம் தான், ஆனால், நீங்களே அவளை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று தன் தந்தையிடம் ஏன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்? இதில் ஏதோ மர்மம் அடங்கியிருக்கிறது. 

இஸ்லாமிய சரித்திர ஆசிரியரான அல் தபரியின் கூற்றுப்படி, முஹம்மது ஒரு முறை தனது வளர்ப்பு மகனாகிய ஜையத் வீட்டிற்கு சென்றபோது, அப்போது ஜையத் அங்கு இல்லை, அவனது மனைவி ஜைனப் (மருமகள்) மட்டுமே இருந்தாள். நீங்க என் அப்பா அம்மாவை விட அன்பானவர், எனவே உள்ளே வாருங்கள் என்று மருமகள் அழைக்கிறாள். அவர் உள்ளே செல்லவில்லை, ஆனால், அந்த சமயத்தில் ஜைனப் இருந்த நிலையைக் கண்டு (அறைகுறை ஆடை) அந்த ஜைனப்பின் அழகில் மயங்கியவராக முஹம்மது திரும்பி வந்துவிடுகிறார், அப்படி வரும் போது, “உள்ளங்களை மாற்றுகின்ற இறைவனுக்கு நன்றி (Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!")” என்று சொல்லிக்கொண்டு வந்துவிடுகிறார். 

கணவன் வந்தவுடன் “முஹம்மது வந்து அவரை கேட்டவிஷயத்தையும், போகும் போது, மேற்கண்ட விதத்தில் அவர் முனுமுனுத்துக்கொண்டு சென்றதையும், ஜைனப் அறிவிக்கிறாள்”. அப்பொது தன் மனைவியை முஹம்மது விரும்புகிறார் என்பதை அறிந்த முஹம்மதுவின் வளர்ப்பு மகன் ஜையத் (இவன் மகன் அல்ல மகான்), முஹம்மதுவிடம் சென்று, நான் விவாகரத்து செய்கிறேன், நீர் அவளை திருமணம் செய்துக்கொள்ளும் என்று சொல்கிறார். ஆரம்பத்தில் முஹம்மது மறுக்கிறார். ஆனால், அல்லாஹ் வசனத்தை வெளிப்படுத்தி, மனிதர்களுக்கு பயந்து உன் உள்ளத்தில் இருந்த ஆசையை வெளியே சொல்ல தயங்கினாய், இதோ விவாகரத்து முடிந்தவுடன், உனக்கு அவளை நான் மனைவியாக கொடுத்தேன் என்று அல்லாஹ் வசனத்தை இறக்கினான் (குர்-ஆன் 33:37). (பார்க்க : www.answering-islam.org/Shamoun/zaynab.htm) 

தனது மருமகள் விதவையாக தத்தளிக்க கூடாது எனும் எண்ணத்தில் முஹம்மது அவளை திருமணம் செய்தார். இது உலகத்தார் அனைவருக்கும் முன்மாதிரியாக செய்துகாட்டினார்கள் என்று உனது இஸ்லாமிய நண்பர்கள் சொல்வார்கள். ஆனால் இதுவல்ல உண்மை காரணம். 

உன் சிந்திக்கும் திறனை நீ இன்னும் இழக்கவில்லையென்று நினைக்கிறேன். அப்படியானால் சிந்தித்துபார். இறைவேதமோ நாங்களோ தாவீது செய்ததை நியாயப்படுத்தவில்லை. அவன் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்கிறோம். ஆனால் முஹம்மது செய்த இந்த இழிவான செயலை இஸ்லாமியர் எப்படி பரிசுத்தமாக பார்க்கிறார்கள் என்று சிந்தித்து பார். மத்தேயு 5:27,28ம் வசனங்களின் படி, முஹம்மது உள்ளத்திலும் பாவம் செய்துள்ளார், அதனை செயலிலும் செய்து காட்டினார். 

இறைவேதத்தின் கதாநாயகன் இறைவன் மட்டுமே! ஆகவே மற்றவர்களின் நன்மை தீமை இரண்டையும் எமது படிப்பினைக்காக இறைவேதத்தில் இறைவன் உள்ளடக்கியிருக்கிறான். ஆனால் இஸ்லாம் முஹம்மது செய்த எல்லா பாவங்களுக்கும் நியாயம் கற்பிப்பதாகவேயிருக்கிறது. உனக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். முஹம்மதுவின் கையிலே அல்லாஹ் பொம்மையாக இருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

தாவீது ராஜா செய்த பாவத்தை இறைவன் உணர்த்தி, தண்டனையும் கொடுத்து, மனந்திரும்பியவுடன் மீண்டும் இறைவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாக மாறுகிறான். இது தான் இறைவன் வகுத்த வழி முறை. பாவம் உணர்த்தப்படும். தண்டனையை அனுபவிக்கவேண்டும். மனந்திரும்பியவுடன் இறைவன் மன்னித்துவிடுவான். மீண்டும் பழைய நிலைக்கு வர முடியும். 

முஹம்மது நபி செய்த பாவத்தை சற்று சிந்தித்து பார் எனதன்பு தம்பி. அவர் தன்னை நியாயப்படுத்துவது மட்டுமல்ல. அல்லாஹ்வும் அவர் செய்தது சரியென்று சான்றிதழ் கொடுக்கிறான். மல்கியா 2:13-16ன் படி கர்த்தர் விவாகரத்தை வெறுக்கிறார், ஆனால்,குர்-ஆன் 33:37ம் படி அல்லாஹ்வே அந்த விவாகரத்தை நிறைவேற்றுகிறார். இதில் இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால், ஒரு பெண் இன்னொருவனின் மனைவியாக இருக்கும் நிலையிலேயே, அவளை பிரித்து மற்றொருவனுக்கு தந்தேன் என்று அல்லாஹ் சொல்வது தான். இதிலிருந்து இந்த அல்லாஹ் எப்படிபட்டவன் என்பது உனக்கு புரிந்திருக்கும். பெண்கள் விஷயத்தில் சிறப்பு சலுகைகள் முஹம்மதுவுக்கு மட்டும் கொடுத்திருப்பதையும் குர்ஆனில் காணலாம். இதை குறித்து நான் மேலும் தெளிவுபடுத்த தேவையில்லையென்று நினைக்கிறேன். முஹம்மதுவின் வாழ்க்கையையும் தாவீதின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்த்து இருவரில் யார் சிறந்தவர் என்பதை நீயே முடிவு செய்துகொள். 

தான் செய்தது பாவம் என்பதை உணர்ந்து மனந்திரும்பியவர் சிறந்தவரா? அல்லது தான் செய்த பாவத்துக்கு நியாயம் கற்பித்து, அதிலிருந்து மனந்திரும்பாமல் இருந்தவர் சிறந்தவரா? 

தன் அடியான் செய்த பாவத்தை உணர்த்தி தண்டனை கொடுத்து அவன் மனந்திருந்தியவுடன் பழையபடி அவனை நேசித்த இறைவன் சிறந்தவரா? தன் அடியான் செய்யும் பாவங்களையெல்லாம் நியாயப்படுத்தி வானத்திலிருந்து ”வஹி” அனுப்புவதுடன் சிறப்புச் சலுகைகளும் வழங்கும் அல்லாஹ் சிறந்தவரா? முடிவாக, நபிகள் கூட பாவம் செய்பவர்கள் தான் என்பதை இஸ்லாமியர்களின் இறைவேதத்திலிருந்தே நாம் பார்த்தோம், எனவே, இனி பைபிளை குற்றப்படுத்துவதை இஸ்லாமியர்கள் நிறுத்திக்கொள்ளட்டும். 

இவை உன் சிந்தனைக்கு. முடிவு உன் கையில். மீண்டும் அடுத்த கடிதத்தில் தொடர்வோம். 

இப்படிக்கு

உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன் 

முஹம்மதுவின் ஜைனப்புடன் நடந்த திருமணம் பற்றிய இதர கட்டுரைகள்: 

1) Muhammad, Zaid and Zaynab Revisited

2) Revisiting Muhammad's Marriage to His Adopted Son's Divorcee, Zaynab Bint Jash:

3) EVALUATION OF THE CHALLENGE THAT MOHAMMED OUGHT TO BE THE MODEL OF ALL MANKIND

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்