2017 ரமளான் (29) – நிலமெல்லாம் இரத்தம் – இஸ்லாம் வாள்முனையில் பரவியதா? பாராவின் எடக்கு மடக்கு விவரங்கள்

முன்னுரை:

பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 20வது அத்தியாயத்திற்கு கொடுத்த முந்தைய பதில்கள்:

  1. இஸ்லாமுக்கு முஹம்மதுவை விட பா. ராகவன் அதிக நன்மையை செய்துள்ளார்கள்
  2. பாராவை புரட்டிப்போட்ட நூல்கள்
  3. முஹம்மது எத்தனை போர்கள் புரிந்தார் என்று அல்லாஹ்வை விட பாரா நன்கு அறிவார்
  4. இந்த ஒரே ஒரு ஹதீஸை பாரா அவர்கள் படித்திருந்தால்!
  5. பாராவை ரணப்படுத்திய ரஹீக்

இந்த வரிசையில் இது கடைசி பதில். பாரா அவர்கள் 20ம் அத்தியாயத்தில் (இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?) எழுதியவைகளை இக்கட்டுரையில் சுருக்கமாக ஆய்வு செய்வோம். 

பாரா அவர்கள் எழுதியது:

அத்தியாயம் 20 - இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?

"பிரசாரகர்களின் சாமர்த்தியத்தால் கிறிஸ்துவம் பரவியது; வாள்முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது" என்று ஒரு கருத்து உலகெங்கும் பரவலாகச் சொல்லப்பட்டு வருவது. இன்று நேற்றல்ல, இஸ்லாம் பரவத் தொடங்கிய நாளாகவே இக்கருத்து ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

உமர் எழுதியது:

ஏதோ! இஸ்லாம் தொடங்கி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு “வாள்முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது” என்ற குற்றச்சாட்டு புதிதாக வைக்கப்பட்டு இருந்திருந்தால், ஒப்புக்கொள்ளலாம். அதாவது, இஸ்லாம் பரவத்தொடங்கிய காலத்தில் இந்த குற்றச்சாட்டு இல்லை, ஏனென்றால் இஸ்லாமை கண்களால் கண்டவர்களாகிய முதல் முஸ்லிம் சமுதாயத்துக்கு ”உண்மை இஸ்லாம் எப்படி பரவியது என்றுத் தெரியும்”. ஆனால், சில நூறு ஆண்டுகள் உருண்டோடின போது, மக்களிடைய இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்கள் உருவாகின, அதன் பிறகு தான் “இஸ்லாம் வாளால் பரவியது” என்ற குற்றச்சாட்டு புதிதாக உருவானது என்றுச் சொன்னால், ஏற்புடையதாக இருக்கும். 

ஆனால், பாரா அவர்களே! ”இஸ்லாம் பரவத்தொடங்கிய காலத்திலிருந்தே, இந்த குற்றச்சாட்டு உண்டு” என்று நீங்கள் எழுதும் போது, லாஜிக் எங்கேயோ இடிக்கிறது என்று உங்களுக்கு தெரியவில்லையா?

அ) இஸ்லாம் அமைதி மார்க்கமாக இருந்திருந்தால், அது தொடங்கிய காலத்திலும் (முஹம்மது மற்றும் முதல் நான்கு கலிஃபாக்கள் வாழ்ந்த காலத்திலும்) இந்த பெயர் அதற்கு எப்படி வந்திருக்கும்?

ஆ) உங்கள் வரிகள் உண்மையென்றால், இஸ்லாமின் ஆரம்பமுதலே இந்த குற்றச்சாட்டு உண்டென்றால், இதற்கு உண்மை காரணம் இருந்திருக்கவேண்டுமில்லையா? நெருப்பில்லாமல் புகையுமா?

இ) ரஹீக் புத்தகத்தில் 50க்கும் அதிகமான போர்கள் பற்றி நாம் முந்தைய கட்டுரையில் ஆதாரங்களோடு கண்டோம். பத்து ஆண்டுகளில் இஸ்லாமின் பெயரில் முஹம்மது 50க்கும் அதிகமான போர்களை புரிந்திருந்தால், இந்த பெயர் இஸ்லாமுக்கு வரத்தானே செய்யும்? இல்லையென்று உங்களில் யாராவது சொல்லமுடியுமா?

பாரா அவர்கள் எழுதியது:

கிறிஸ்துவம் எப்படிப் பரவியது என்பதை ஆழமாக அலசுவதற்கு இது இடமல்ல. ஆனால், இஸ்லாம் பரவிய விதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. 

உமர் எழுதியது:

கிறிஸ்தவம் எப்படிப் பரவியது என்று நீங்கள் எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! உண்மையை மட்டுமே எழுதவேண்டும். ”கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்” என்பார்கள், எனவே கேள்வி ஞானத்தை மட்டுமே வைத்துக்கொண்டு புத்தகம் எழுதாதீர்கள், ஆய்வு செய்து எழுதுங்கள்.

பாரா அவர்கள் எழுதியது:

முகம்மது நபி பிறந்த சவூதி அரேபியாவிலோ, எல்லா நபிமார்களுக்கும் உகந்த இடமான பாலஸ்தீனிலோ மட்டும் இஸ்லாம் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, அங்கே மட்டும் அம்மார்க்கம் செல்வாக்குப் பெற்றிருக்குமானால் இத்தகையதொரு விஷயம் பற்றிப் பேசவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது. மாறாக, ஒட்டுமொத்த மத்திய ஆசியாவிலும் மிகக்குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று, முகம்மது நபியின் மறைவுக்குப் பின் மிகச்சில ஆண்டுகளிலேயே ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்கும் பரவி, உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் காலூன்றி நிற்க முடிந்திருக்கிறதென்றால், அது எவ்வாறு பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.

உமர் எழுதியது:

பாரா அவர்கள் என்னை மன்னிக்கவேண்டும். நீங்கள் முஹம்மதுவை குறிப்பிடும் போது “முஹம்மது நபி” என்று எழுதுகிறீர்கள். யார் முஹம்மதுவை நபி என்றுச் சொல்வாரோ, அவர் இஸ்லாமை ஏற்கிறார் என்று அர்த்தம். நபி என்பது பெயர் அல்ல, அது பட்டப்பெயர். முஹம்மதுவை நபி (இறைத்தூதர்/ தீர்க்கதரிசி) என்றுச் சொல்பவர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்பதையும் சொல்லவேண்டும் அல்லது சொல்லிவிட்டதாக அர்த்தமாகிவிடும். உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கேள்வி: நீங்கள் முஸ்லிமாக மாற விரும்புகிறீர்களா?

அடுத்ததாக, “இஸ்லாம் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு” என்று எழுதியுள்ளீர்கள். எனக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன:

1) இஸ்லாம் பாலஸ்தீனாவில் எப்போது பிரச்சாரம் செய்யப்பட்டது? (பிரச்சாரம் என்றால் என்னவென்று உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்).

2) இஸ்லாமை பிரச்சாரம் செய்வதற்கு முஹம்மது யாரை பாலஸ்தீனாவிற்கு அனுப்பினார்? அபூ பக்கர் யாரை அனுப்பினார்? உமர் யாரை அனுப்பினார்? அலி யாரை அனுப்பினார்? உஸ்மான் யாரை அனுப்பினார்? பெயர்களை குறிப்பிடமுடியுமா?

3) முஹம்மது அனுப்பிய நபர் பாலஸ்தீனாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்து பிரச்சாரம் செய்தார்? கிறிஸ்தவர்கள் செய்வது போல, ஒரு பகுதிக்குச் சென்று, அம்மொழியைக் கற்றுக்கொண்டு, அவர்களுக்கு கிறிஸ்தவத்தை போதிப்பது போல, இஸ்லாமில் யார் செய்தார்கள்? உங்களிடம் விவரமுண்டா? (தமிழ் முஸ்லிம்கள் யாரிடமாவது இந்த விவரம் உண்டா?)

4) மத்திய ஆசியாவில் எப்படி இஸ்லாம் குறுகிய காலத்தில் செல்வாக்கு பெற்றது? பிரச்சாரத்தினாலா அல்லது வாள்முனை மிரட்டலினாலா? போர்களினாலா?

5) முஹம்மது மத்திய ஆசியாவில் இருந்த நாடுகளுக்கு பிரச்சாரம் செய்ய யார் யாரை அனுப்பினார்? பட்டியலிடுங்கள் பார்க்கலாம்? அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் எப்படி பிரச்சாரம் செய்தார்கள்?

6) ஒவ்வொரு நாட்டுக்கும் மிரட்டல் கடிதங்கள் எழுதியவைகளை இங்கு குறிப்பிடாதீர்கள், அவைகள் பிரச்சாரங்கள் அல்ல. அவைகள் சண்டை போடுவதற்கு முன்பு அனுப்பப்பட்ட பீரங்கி புறாக்கள். இஸ்லாமை ஏற்கிறாயா அல்லது போரில் செத்து மடிகிறாயா? இது தான் அக்கடிதங்களின் சுருக்கம். 

”இஸ்லாமிய பிரச்சாரம்” என்று நீங்கள் எழுதியது, முஸ்லிம்களுக்கே ஆச்சரியமாக இருந்திருக்கும், ”இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்” நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை முஹம்மது அழைக்கவில்லை. இஸ்லாமின் மரண கடிதங்களை அனுப்பி மிரட்டினார். ”இஸ்லாமிய பிரச்சாரம்” என்றுச் சொல்லி, முஹம்மதுவையும், அவரது தோழர்களையும் நீங்கள் அவமானப்படுத்திவிட்டீர்கள். செய்யாத ஒன்றை செய்ததாகச் சொல்வது குற்றம்தானே!

பாரா அவர்கள் எழுதியது:

இதை ஆராய்வதற்கு முதல் தடையாக இருப்பது, "அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட மதம்" என்கிற முன் அபிப்பிராயம், அல்லது முன் முடிவு அல்லது முன் தீர்மானம். 

உமர் எழுதியது:

பாரா அவர்களே ”அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட மதம்” என்பது முன் அபிப்பிராயம் அல்ல, அது இஸ்லாமிய சரித்திர ஏடுகளில் எழுதப்பட்ட அசத்தலான நிஜம். இதனை அறிந்துக்கொள்ள, நீங்கள் ஆய்வு செய்த ரஹீக் புத்தகத்தில் “மதினாவிற்கு முஹம்மது இடம் பெயர்ந்த பிறகு என்ன நடந்தது” என்பதைப் பற்றிய அத்தியாயங்களை முன் அபிப்பிராயங்கள் இல்லாமல் அமைதியாக படித்துப் பாருங்கள். அதன் பிறகு என்னிடம் கேள்வி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன்.

பாரா அவர்கள் எழுதியது:

இந்த முன் தீர்மானம் அல்லது முன் அபிப்பிராயத்தை இஸ்லாத்தைக் காட்டிலும் வேகமாகப் பரப்பி வேரூன்றச் செய்தவர்கள் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்கள்.

உமர் எழுதியது:

பாரா அவர்களே, உங்கள் ஆய்வு உண்மையாக இருந்தால், மேற்கண்ட வரிகளை நீங்களே எழுதியதாக இருந்தால்:

1) நீங்கள் குற்றம் சாட்டிய “மேற்கத்திய சரித்திர ஆசிரியர்களின் பெயர்களை” கொடுக்கமுடியுமா?

2) அவர்கள் எந்த புத்தகத்தில் இப்படி எழுதினார்கள்?

3) அந்த புத்தகங்களை நீங்கள் (பாரா) படித்துப் பார்த்தீர்களா? அவர்கள் சொன்ன விவரங்களின் உண்மைத் தன்மையை நீங்கள் எப்படி சரிப்பார்த்தீர்கள்?

4) மேலும், எந்த சரித்திர ஆசிரியர் யூதராக இருந்தார், அவரது புத்தகத்தில் எதனை நீங்கள் படித்தீர்கள்?

5) சிறும்பான்மை கிறிஸ்தவ சரித்திர ஆசிரியர்களின் புத்தகங்களை தரமுடியுமா? 

6) உங்களுக்கு மேற்கண்ட புத்தகங்கள் எங்கே கிடைத்தது? கொஞ்சம் விலாசம் தரமுடியுமா? நீங்கள் எழுதியதைப் பார்த்தால், உங்கள் வீட்டு நூலகத்திலேயே இப்புத்தகங்களை வைத்துக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. அப்படியானால், அவைகளின் விவரங்களை சுலபமாக உங்களால் கொடுக்கமுடியுமே!

நீங்கள், இஸ்லாம் பற்றி 100 தொடர்களை எழுதினீர்கள், குறைந்த பட்சம் தமிழ் குர்-ஆனின் பெயரை குறிப்பிடவில்லை, ஹதீஸ்களை படிக்கவில்லை! இந்த இலட்சனத்தில் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்களை குற்றப்படுத்துகிறீர்கள்! யாரோ முஸ்லிம்கள் உங்களிடம் வாந்தி எடுத்ததை அப்படியே உங்களின் இரண்டு கைகளில் பிடித்து, உங்கள் புத்தகத்தில் தெளித்து இருந்திருக்கிறீர்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 

குர்-ஆனும், ஹதீஸ்களும், இப்னு இஷாக், இப்னு ஹிஷாம், தபரி போன்ற இஸ்லாமிய சரித்திர நூல்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு எப்படி இஸ்லாமிய விவரங்கள் கிடைத்துவிடும். நீங்கள் குறிப்பிட்ட ரஹீக் புத்தகத்தில் உள்ளவைகள் எவைகள் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் மேலே குறிப்பிட்ட இஸ்லாமிய நூல்களில் உள்ளவைகளும் மேலும் இஸ்லாமிய  ஆரம்ப காலத்திலிருந்து பக்தியுள்ள முஸ்லிம்களால் எழுதப்பட்ட குர்-ஆன் விளக்கவுரைகளில் உள்ளவைகளும் தான்.  

மேற்கண்ட வரிகளை எழுதியதற்காக நீங்கள் சரித்திரங்களை ஆய்வுச் செய்து எழுதும் தகுதியை மொத்தமாக இழக்கிறீர்கள் அல்லது ஆய்வு செய்யும் எழுத்தாளர்களுக்கு இழுக்காக மாறுகிறீர்கள்.

பாரா அவர்கள் எழுதியது:

மிகவும் அற்பமானதொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். முகம்மது நபியின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம் சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். அத்தனை யுத்தங்களிலும் ரத்த ஆறு பெருகியதென்றும் யுத்தக் கைதிகளை வாள்முனையில் மிரட்டி இஸ்லாத்தில் இணைத்ததாகவும் ஏராளமான சம்பவங்களை இந்தச் சரித்திர ஆய்வாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.

உமர் எழுதியது:

நான் முந்தைய கட்டுரையில் ரஹீக் புத்தகத்திலிருந்து 50க்கும் அதிகமான போர்கள், வழிப்பறி கொள்ளைகள், திடீர் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை பட்டியலிட்டு கொடுத்துள்ளேன்.  நீங்கள் ஒன்று செய்யுங்கள், அந்த பட்டியலை எடுத்துக்கொண்டு, ரஹீக் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு (உங்களிடம் தான் இப்புத்தகம் இருக்கிறதே! இருந்தது ஆனா படிக்கலே), உங்களுக்கு இஸ்லாம் பற்றி போதித்த, அல்லது நிலமெல்லாம் இரத்தம் தொடர்களின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சரி பார்த்த திரு நாகூர் ரூமி அறிஞரிடம் சென்று, கேட்டுப்பாருங்கள். முஹம்மது 19 போர்களில் ஈடுபட்டார் என்ற ஆதார பூர்வமான விவரத்தை நான் ஹதீஸ்களிலிருந்து எடுத்துக் காட்டினேன். குர்-ஆனிலிருந்து ஐந்து போர்கள் பற்றிய வசனங்களை மேற்கோள் காட்டினேன். இப்போது யார் சொல்வது உண்மை? 

  • ரஹீக் சொல்வது உண்மையா?
  • ஹதீஸ்கள் சொல்வது உண்மையா?
  • குர்-ஆன் சொல்வது உண்மையா?
  • அல்லது பாரா சொல்வது உண்மையா?

என்று திரு நாகூர் ரூமி அறிஞரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

பாரா அவர்களே! ”முகம்மது நபியின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம் சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள்” என்று எழுதியுள்ளீர்கள். 

உங்களிடம் உள்ள அந்த “அனைத்து” ஆய்வாளர்களின் பெயர்களையும், புத்தகங்களின் பெயர்களையும் அவர்கள் எந்த அத்தியாயத்தில், எந்த பக்கத்தில் இப்படி சொல்லியுள்ளார்கள் என்பதையும் சொல்லுங்கள் பார்க்கலாம்.  ஒருவேளை அவர்கள் சொல்லிய விவரங்கள், நான் மேலே குறிப்பிட்ட இஸ்லாமிய நூல்களில் இல்லையென்று நிருபியுங்கள் பார்க்கலாம். கொஞ்சம் இஸ்லாமிய கண்ணாடியை கழற்றிவிட்டு, முஸ்லிம்கள் எடுத்த வாந்தியை அப்படியே பிடித்த உங்கள் கைகளை டெட்டால் போட்டு கழுவிக்கொண்டு, இஸ்லாமிய நூல்களில் உள்ள சரித்திரத்தை படித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.

பாரா அவர்கள் எழுதியது:

உண்மையில் முகம்மது நபியின் காலத்தில் நடைபெற்ற யுத்தங்களாக ஆதாரங்களுடன் கிடைப்பது மொத்தம் மூன்றுதான். பத்ரு, உஹைத், ஹுனைன் என்கிற மூன்று இடங்களில் முஸ்லிம்கள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உண்மையில் எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக, மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.

இதைக்கொண்டே, இஸ்லாத்தை முன்னிட்டு முகம்மது நபியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்கள் மூன்றுதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிறது.

உமர் எழுதியது:

இது என்ன! முரண்பட்ட விவரங்களைச் சொல்கிறீர்கள்? நீங்கள் எடக்கு மடக்காக எழுதுகிறீர்கள். 

பாராவின் எடக்கு:

முகம்மது நபியின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம் சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள்.

பாராவின் மடக்கு:

இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உண்மையில் எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக, மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.

ஒரு பாராவில் “அனைத்து மேற்கத்திய ஆய்வாளர்கள்” 75 அல்லது 80 போர்கள் இஸ்லாமின் பெயரில் நடத்தப்பட்டது என்று சொல்கிறார்கள் என்று எழுதுகிறீர்கள். அடுத்த பாராவில் “மூன்று மட்டுமே” என்று சொல்கிறார்கள்  என்று எழுதுகிறீர்கள். தமிழ் படங்களை அதிகமாக பார்ப்பீர்களோ! நகைச்சுவை நடிகர்களை மிஞ்சுவிடுவீர்கள் போல் இருக்கிறதே!

1) மூன்று போர்கள் என்று எழுதிய அந்த மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் யார் என்று சொல்லமுடியுமா?

2) அவர்களின் பெயர்கள், புத்தகங்களின் பெயர்களை கொடுக்கமுடியுமா? நான் அமேஜானின் வாங்கிக்கொள்வேன், புத்தகத்தின் பெயரை மட்டுமே கொடுங்கள்.

உங்களுடைய இரண்டு பத்திகளில் நீங்கள் பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்களின் வித்தியாசத்தை நான் கவனிக்காமல் இல்லை, பாரா அவர்களே. ஒரு பத்தியில் “இஸ்லாத்தை முன்னிட்டு” ஆய்வு செய்தவர்கள் என்றுச் சொல்கிறீர்கள். அடுத்த பத்தியில் ”முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து” ஆய்வு செய்தவர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். நீங்க என்னதான் வார்த்தைகளை மாற்றி எழுதினாலும், உண்மை மறைந்துவிடுமா? ராமாயணத்திலிருந்து இராமரை பிரிக்கமுடியுமா? முடியாதல்லவா? அது போலத்தான் இஸ்லாமிலிருந்து முஹம்மதுவை பிரிக்கமுடியாது. 

இஸ்லாமை” ஆய்வு செய்தவர் என்ன முடிவுக்கு வருவாரோ, அதே முடிவுக்குத் தான் ”முஹம்மதுவை” ஆய்வு செய்தவரும் வரவேண்டும்.  இஸ்லாம் தான் முஹம்மது. முஹம்மது தான் இஸ்லாம்.  

முஹம்மதுவின் வாழ்க்கையை ஆய்வு செய்து, வெறும் மூன்றே போர்களைத் தான் அவர் செய்தார் என்றுச் சொன்ன அந்த அறிவாளி யார் என்று சொல்வீர்களா? அவர் எழுதிய புத்தகம் என்னவென்று சொல்வீர்களா? ஒருவேளை அந்த அறிவாளி இப்போது உயிரோடு இருந்தால், உலகில் அவர் எங்கு இருந்தாலும் சரி, நான் சென்று அவரைக் கண்டு வருவேன். பிளீஸ் அவரது பெயரையும், புத்தகத்தின் பெயரையும் சொல்வீர்களா? ஒரு கண்டிஷன், அவர் முஸ்லிமாக இருக்கக்கூடாது. ஒரு முஸ்லிமாக இருந்தாலும் முஹம்மது புரிந்தது 3 போர்கள் என்று ஆதாரபூர்வமாகச் சொல்லமுடியாதே! பைத்தியங்களால் மட்டுமே இப்படி சொல்லமுடியும்.

பாரா அவர்கள் எழுதியது:

முகம்மது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்கு இடம் பெயர்ந்து சென்றது கி.பி.622-ம் ஆண்டு. பத்தாண்டுகளே அவர் மதினாவில் இருந்தார். கி.பி. 630-ல் மெக்காவை வெற்றி கொண்டதற்கு இரண்டாண்டுகள் கழித்துக் காலமாகிவிட்டார். (கி.பி.632) இந்தக் கணக்கில் பார்த்தால், ஆண்டுக்கு எட்டு யுத்தங்கள் வீதம் நடந்திருந்தால்தான் எண்பது யுத்தங்கள் சாத்தியம். அரேபியாவில் அல்ல; உலகில் வேறு எங்குமே கூட அத்தனை யுத்தங்கள் ஒரு சேர நடந்ததாகச் சரித்திரமில்லை.

உமர் எழுதியது:

உங்கள் லாஜிக்குக்கே வருகிறேன். ரஹீக் 52 போர்களை முஹம்மது செய்தார் என்றுச் சொல்கிறது (தனி மனிதர்களை கொல்லும் படி ரௌடிகளை அனுப்பி கொன்ற நிகழ்ச்சிகள் இந்த 52 பட்டியலில் இல்லை).

சௌதி மற்றும் பாகிஸ்தானின் முஸ்லிம் அறிஞர்களால் முதல் பரிசு பெற்ற ரஹீக்கின் படி, 10 ஆண்டுகளில் முஹம்மது 52 போர்களை புரிந்தார், ஆண்டுக்கு கணக்கிட்டால், 5 என்று வருகிறது. இஸ்லாமிய கணக்கின் படியே ஆண்டுக்கு 5 என்று வருகிறது.  நீங்கள் சொல்வது 10 ஆண்டுகளுக்கு மூன்றே போர்கள் ஆகும். இரண்டுக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது.

பின்லாடன் உயிரோடு இருந்தபோது, அவரோடு ஒரு மாதம் செலவிட்டு இஸ்லாமை கற்றுக்கொள்ளுங்கள் என்றுச் சொல்லி, உங்களை அவரிடம் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்திருக்க வேண்டும். ஒரே மாதத்தில், இல்லை ஒரே நாளில் இஸ்லாமை முழுவதுமாக உங்களுக்கு கற்றுக்கொடுத்து இருந்திருப்பார்.

உள்ளங்கை நெல்லிக்கணி என்றுச் சொல்வது போல, ரிகார்ட் பிரேக் இஸ்லாமை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, ”உலகில் வேறு எங்குமே கூட அத்தனை யுத்தங்கள் ஒரு சேர நடந்ததாகச் சரித்திரமில்லை.” என்று எழுதுகின்றீர்களே, இது நியாயமா? இப்படி உலகில் எங்கும் நடக்காத அநாகரீக செயல்கள் முஹம்மதுவினால் அந்த 10 ஆண்டுகளில் அரங்கேற்றப்பட்டபடியினால் தான் படித்தவர்களில் சிலர் (ஹி.ஹி. என்னையும் சேர்த்து தான்) அதனை கடுமையாக விமர்சிக்கிறார்கள். [இந்த பத்தியில் படித்தவர்கள் என்று நான் குறிப்பிட்டது, இஸ்லாமைப் பற்றி படித்தவர்களைத் தான்.]

பாரா அவர்கள் எழுதியது:

ஆக, முகம்மது நபியின் காலத்தில் யுத்தங்களின் மூலம் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்கிற முடிவுக்கே வரவேண்டியதாகிறது. ஆதாரங்களுடன் உள்ள மூன்று யுத்தங்கள் கூட ஒரே தினத்தில் ஆரம்பித்து, நடந்து, முடிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது, ஒருநாள் கலவரம்.

உமர் எழுதியது:

யார் இந்த முடிவுக்கு வரவேண்டியது? நீங்களா? முஸ்லிம்களா? அல்லது முஸ்லிமல்லாதவர்களா? மக்களுக்காக நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை, நீங்கள் இஸ்லாமிய போர்கள் பற்றிய முடிவுகளை எடுக்கத்தேவையில்லை. மக்களுக்கு சிந்திக்கத்தெரியும், இஸ்லாமிய சரித்திரங்களின் அடிப்படையில் சரியான முடிவுகளை எடுக்கத்தெரியும். தனிப்பட்ட முடிவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள், பொதுவான முடிவுகளை மக்கள் எடுத்துக்கொள்வார்கள்.

பாரா அவர்களே, உங்கள் வார்த்தைகளை படிக்க படிக்க அமுத சுரபி போன்று உங்கள் பிழைகள் (ஏமாற்று வேலைகள்) தெள்ளத்தெளிவாக தெரிகின்றன. உங்களுக்கு “கலவரத்துக்கும் போருக்கும் இடையேயுள்ள வித்தியாசம்” என்னவென்றுத் தெரியுமா? அதாவது “ஒரு நாள் கலவரம்” என்று மென்மையாக மூடிமறைக்கப் பார்க்கிறீர்கள்.  நீங்கள் குறிப்பிட்ட பத்ரு போர் எப்படி துவங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் படித்த இஸ்லாமிய புத்தகங்களும், உங்களுக்கு இஸ்லாமிய ஞானத்தை போதித்த போதி மரங்களாகிய முஸ்லிம்களும் உங்களுக்கு இதன் பின்னணியை சொல்லவில்லையா?  மேற்கொண்டு படியுங்கள், பத்ரூ போரின் பின்னணியை அடுத்தடுத்த பத்தியில் கொடுத்துள்ளேன்.

பாரா அவர்கள் எழுதியது:

முகம்மதுவுக்கும் மற்ற இறைத்தூதர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில், முகம்மது ஒருவர்தான் இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்திருக்கிறார்

உமர் எழுதியது:

என் முந்தைய கட்டுரைகளில் நான் குறிப்பிட்டது போல, உங்களுடைய மேற்கண்ட வரிகள் எல்லாம் முஸ்லிம்கள் காலங்காலமாக எடுத்துக்கொண்டு இருக்கின்ற வாந்தியாகும்.

முகம்மது ஒருவர்தான் இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்திருக்கிறாரா? உங்களிடம் இருக்கும் குர்-ஆனை திருப்பி நான் சொல்லும் நபர்கள் பற்றி படித்துப் பாருங்கள்? [உங்களிடம் தமிழ் குர்-ஆன் இல்லையென்று எனக்குத் தெரியும், எனவே ஆங்கில குர்-ஆனிலும் இவைகளை தேடிப்பார்க்கலாம்].

  • தாவீது (தாவூத்) – குர்-ஆன் 2:251; 4:163; 5:78; 6:84; 17:55; 21:78; 21:79; 27:15; 27:16; 34:10; 34:13; 38:17; 38:21; 38:22; 38:24; 38:26; 38:30
  • சாலொமோன் (ஸுலைமான்) – குர்-ஆன் 2:102; 4:163; 6:84; 21:78; 21:79; 21:81; 27:15; 27:16; 27:17; 27:18; 27:27; 27:30; 27:36; 27:37; 27:38; 27:40; 27:42; 27:44; 34:12; 34:13; 34:14; 38:30; 38:34;

இவ்வசனங்களில் தாவீதும் அவரது மகன் சாலொமோனும் இறைத்தூதர்களாகவும், அதே நேரத்தில் ஆட்சியாளர்களாகவும் இருந்ததாகவும் குர்-ஆன் சொல்கிறது. சிறிது சிந்தித்து எழுதுங்கள், அரைகுறை ஞானம் ஆபத்து என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆட்சியாளராக முஹம்மது இருந்தார் அதனால் வன்முறையில் ஈடுபட்டார் என்றுச் சொல்லி அவரை காப்பாற்றவேண்டிய அவசியம் இல்லை. அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் தவறு செய்தால் தவறு தான்.

பாரா அவர்கள் எழுதியது:

மதப்பிரசாரம் மட்டுமே அவரது பணியாக இருக்கவில்லை. மாறாக, அவர் மெக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நாளாக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கட்டிக்காக்கும் ஒரு பெரிய இனத்தலைவராகப் பொறுப்பேற்க நேர்ந்தது. மிகக் குறுகிய காலத்தில் மதினாவாழ் அரேபியர்கள் அத்தனைபேருமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபடியால், மதினாவின் முடிசூடாத மன்னராகவே அவர் ஆகிப்போனார்.

உமர் எழுதியது:

அய்யா சாமி, முதலில் ரஹீக் புத்தகத்தில் முஹம்மதுவின் மதினா வாழ்க்கையை படியுங்கள். அதன் பிறகு எழுதுங்கள். மதினாவில் முஹம்மது எத்தனைப்பேரை கொன்றார்? அதைச் சுற்றியுள்ள இனமக்களை எப்படி அழித்தார்? தன்னை விமர்சித்தவர்களின் கதையை எப்படி முடித்தார் என்பதை படித்தீர்களானால், இப்படி “மிகக் குறுகிய காலத்தில் மதினாவாழ் அரேபியர்கள் அத்தனைபேருமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டபடியால்” என்று உங்களால் எழுதமுடியாது. 

மதினாவாழ் அரேபியர்கள், அதைச் சுற்றியுள்ளவர்கள் மிகக் குறுகிய காலத்தில் ஏன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள்? 

ஆள்பலம் அதிகமுள்ள ஒரு சக்தி, ஆடிப்போய் இருக்கும் ஒருவனிடம் வந்து, ”உயிர் வேண்டுமா? அல்லது இஸ்லாமை ஏற்கிறாயா?” என்று கேள்வி கேட்டால், அவன் என்ன பதில் சொல்லுவான்? இந்த கேள்விக்கு பெரும்பான்மையானவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்.

ஒரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். முஹம்மது தம்மை சுற்றியுள்ள இதர நாட்டு மன்னர்களுக்கு கடிதங்கள் எழுதினார்.  நான் அல்லாஹ் அனுப்பிய நபி, நீ இஸ்லாமை ஏற்றால் சரி, இல்லையென்றால், என் வீரர்களின் படை உன் நாட்டை பிடிக்கும்.  இஸ்லாமை ஏற்கிறாயா? அல்லது செத்துமடிகிறாயா? இது தான் முஹம்மது அனுப்பிய கடிதத்தின் சுருக்கம். நான் சொல்வதை நம்பவேண்டாம். உலக முஸ்லிம்களால் முதல் பரிசு பெற்ற ரஹீக் புத்தகத்திலிருந்து, ஒரு கடிதத்தை உங்களுக்காக இங்கு தருகிறேன்.  

இது தான் பிரச்சாரத்தின் மூலமாக இஸ்லாமை பரப்பும் விதமா?

இப்படிப்பட்ட கடிதங்களை அனுப்பினால், ஏன் குறுகிய காலத்தில் அரேபியா முழுவதும் ரௌடிகளின் கைப்பிடியில் வராது?

நூல்: ரஹீக், பக்கம் 399

8) ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்

நபியவர்கள் ஓமன் நாட்டு அரசர் ‘ஜைஃபர்’ மற்றும் அவரது சகோதரர் ‘அப்து“க்குக் கடிதம் அனுப்பினார்கள். அதன் வாசகமாவது:

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப் பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.”

இது ’உங்களுக்கு விருப்பமிருந்தால் இஸ்லாமில் வந்து சேருங்கள் என்று கூப்பிடும் அழைப்பிதழா?’ அல்லது சாவு மணி காத்திருக்கிறது என்ற எச்சரிக்கையா?

இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், அந்த நாட்டு அரசனையே ஆட்சியாளராக முஹம்மது ஆக்கிவிடுவாராம். இதன் அர்த்தமென்ன? நீ இஸ்லாமை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், நான் வந்து உன் நாட்டை பிடிப்பது உறுதி, நீ இஸ்லாமை ஏற்றால், உன்னையே நான் உன் நாட்டுக்கு தலைவராக நியமிப்பேன், இஸ்லாமை ஏற்காவிட்டால் நீ மடிவது உறுதி. யாருடைய ஆட்சியை யார் பிடுங்குவது? இது ரௌடித்தனம் இல்லையா? இந்தியாவிற்கு வெள்ளையர்கள் வந்து நம் நாட்டு குறுநில மன்னர்களிடம், எங்களுக்கு அடிபணிந்து, ஆண்டாண்டு எங்களுக்கு கப்பம் கட்டினால், உங்கள் ஊர்களுக்கு உங்களையே ஆட்சியாளர்களாக ஆக்குவோம் என்றுச் சொல்வது போல இருக்கிறது! அல்லவா? முஹம்மதுவிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் என்ன வித்தியாசம்?

பாரா அவர்கள் எழுதியது:

ஆகவே, முஸ்லிம்களுக்கு எதிரான குறைஷிகளின் யுத்தம் என்பது காலப்போக்கில் மதினா மக்களுக்கு எதிரான மெக்காவாசிகளின் யுத்தம் என்று ஆகிவிட்டது. மதினாவைத் தாண்டி இஸ்லாம் பரவத் தொடங்கியபோது, எங்கெல்லாம் முஸ்லிம்கள் அபாயத்தைச் சந்திக்க நேரிடுகிறதோ, அங்கெல்லாமும் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு முகம்மது நபியைச் சேர்ந்தது. கட்டக்கடைசி வினாடி வரை அவர் யுத்தங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகச் சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. தவிர்க்கவே முடியாத மூன்று சந்தர்ப்பங்களில்தான் முகம்மது, யுத்தத்துக்கான உத்தரவு அளித்திருக்கிறார்.

உமர் எழுதியது:

என்னவோ நீங்க தான் முஹம்மதுவின் படைத்தளபதியாக இருந்தமாதிரி, ரொம்பவும் நம்பிக்கையாக எழுதுகிறீர்கள்! அய்யா பாரா அவர்களே! போதுமைய்யா! உங்களுடைய இஸ்லாமிய விசுவாசம் தாங்கமுடியல.

இந்த பத்தியில் நீங்கள் “சரித்திரம்” என்று குறிப்பிடுவது எதனை? அரைவேக்காடுகள் எழுதிய இஸ்லாமிய புத்தகங்களையா?

பாரா அவர்கள் எழுதியது:

அந்த மூன்று யுத்தங்களுள், பத்ரு யுத்தம் மிகவும் முக்கியமானது. இந்த யுத்தத்தில் பங்குபெற்ற முஸ்லிம்கள் மொத்தம் 313 பேர். எதிரிகளாக இருந்த குறைஷிகளின் படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களின்மீது வலிந்து திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றி, வியப்புக்குரியது. (முதலில் படையெடுத்து வந்தவர்கள் குறைஷியர்தாம்.) ஆயிரக்கணக்கான குறைஷி வீரர்களை எப்படி வெறும் முந்நூறு முஸ்லிம் வீரர்கள் வென்றார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமான பதில் ஏதும் கிடையாது. ஆனாலும் ஜெயித்தார்கள்.

உமர் எழுதியது:

அது எப்படி (முதலில் படையெடுத்து வந்தவர்கள் குறைஷியர்தாம்.) என்று அடைப்பிற்குள் எழுதுகிறீர்கள். இந்த விவரத்தை எங்கு படித்தீர்கள்? குர்-ஆனிலா? ஹதீஸ்களிலா? அல்லது ரஹீக் புத்தகத்திலா?

உங்களுக்கு ரஹீக் புத்தகத்திலிருந்து பத்ரூ வழிப்பறி கொள்ளையின் பின்னணியை கொஞ்சம் எடுத்துக்காட்டவேண்டும் (பத்ரூ போர் இல்லை, அது வழிப்பறிக்கொள்ளை).

பத்ரூவின் பின்னணி:

மதினாவிற்கு முஸ்லிம்கள் இடம்பெயர்ந்துச் சென்றார்கள். அதன் பிறகு, மதினாவிற்கு சில மைல்கள் தூரத்தில் சென்றுக்கொண்டு இருந்த குறைஷிகளின் வியாபார கூட்டங்களை வழிமறைத்து, அவர்களின் பொருட்களை கொள்ளையடிப்பதற்கு முஹம்மது தம் சகாக்களோடுச் சென்றார். இதனை அறிந்த குறைஷிகள், மக்காவிலிருந்து தங்கள் வியாபார செல்வங்களை பாதுகாக்க 1000 பேரோடுச் சென்றார்கள்.  கொள்ளையடிக்கச் சென்ற அல்லாஹ்வின் கூட்டத்துக்கும், தங்கள் வியாபார பொருட்களைக் காக்கச்சென்ற குறைஷிகளுக்கும் இடையே நடைப்பெற்ற போர் தான் பத்ரூ யுத்தம். 

இது உங்களுக்கு “ஒரு நாள் கலவரமாகத் தெரிகின்றதா?” பாரா அவர்களே!

உங்களுக்காக “ரஹீக் புத்தகத்திலிருந்து பத்ரு போரின் காரணத்தை இங்கு பதிக்கிறேன்”, தயவு செய்து படித்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு இதனை முதலில் தொடங்கியவர்கள் யார் என்று முடிவு செய்யுங்கள்.

நூல்: ரஹீக், பக்கம் 220 (மூலம்: www.tamililquran.com/history.php)

போருக்குரிய காரணம்

“உஷைரா’ என்ற போரைப் பற்றி நாம் முன்பு குறிப்பிட்டபோது மக்காவிலிருந்து ஷாமிற்கு சென்று கொண்டிருந்த வியாபாரக் கூட்டம் ஒன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து தப்பித்து விட்டது என்று கூறியிருந்தோம். இந்த வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கிய போது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் ‘ஹவ்ரா’ என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்த போது அவ்விருவரும் மதீனாவிற்குத் திரும்பி, செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

இந்த வியாபாரக் கூட்டம் மிகப்பெரிய அளவில் குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் சென்று கொண்டிருந்தது. இவர்களிடம் 50,000 தங்க நாணயங்களுக்குக் குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1,000 ஒட்டகங்களில் வந்து கொண்டிருந்தன. ஆனால், இவ்வளவு பெரிய வியாபாரக் கூட்டத்தைப் பாதுகாப்பதற்கு 40 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை உண்டு பண்ணுவதற்கு இது முஸ்லிம்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இந்த சேதத்தை ஏற்படுத்திவிட்டால் காலங்காலமாக காஃபிர்களின் உள்ளங்கள் துடிதுடித்துக் கொண்டேயிருக்கும். இப்போது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு அறிவிப்புச் செய்தார்கள். “இதோ... குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது. அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள். அல்லாஹ் அந்தப் பொருட்களை உங்களுக்கு அளிக்கக் கூடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இப்போரில் கலந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்) எவரையும் வலியுறுத்தவில்லை. காரணம் வியாபாரக் கூட்டத்திற்குப் பதிலாக மக்காவின் படையினருடன் பத்ர் மைதானத்தில் பெரிய அளவில் மூர்க்கமான சண்டையும் மோதலும் நிகழுமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதாவது, செல்வங்களுக்குப் பதில் சண்டை நிகழுமென்று அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாததால் இப்பயணத்தில் கலந்து கொள்வது அவரவரின் விருப்பம் என்று நபி (ஸல்) விட்டு விட்டார்கள். இதற்கு முன்பு தாங்கள் கண்ட சிறிய பெரிய ராணுவப் பயணங்களில் நிகழ்ந்ததைப் போன்றுதான் இந்தப் பயணத்திலும் நிகழும் என்றெண்ணி அதிகமான நபித்தோழர்கள் இப்பயணத்தில் கலந்துகொள்ளாமல் மதீனாவிலேயே தங்கிவிட்டனர். அதை நபி (ஸல்) அவர்களும் குற்றமாகக் கருதவில்லை.

பழிக்குபழி வாங்குகின்ற ஒரு மார்க்கத்தையா நீங்கள் அமைதியான மார்க்கமென்று சொல்கிறீர்கள்?

  • வியாபார கூட்டத்தை கொள்ளையடிக்கச் சென்றவர்கள் யார்?
  • மக்காவிலிருந்து 1000 பேரை ஏன் குறைஷிகள் திடீரென்று தயார்படுத்திக் கொண்டுச் சென்றார்கள்?
  • வெறும் 40 பேரைக்கொண்டு, வியாபாரிகள் சென்றுக்கொண்டு இருக்கும் போது, 313 பேரைக்கொண்டு அவர்களை தாக்கச் சென்றவர்கள் யார்?

பாரா அவர்களே, இப்போது சொல்லுங்கள், பத்ரூ போரை யார் முதலில் துவக்கினார்கள்? முஹம்மதுவா? அல்லது குறைஷிகளா?

பாரா அவர்கள் எழுதியது:

இந்த யுத்தத்தில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக குறைஷிகள் தொடுத்த அடுத்த யுத்தம்தான் உஹைத் யுத்தம். (அதாவது, உஹைத் என்கிற இடத்தில் நடந்த யுத்தம்.) முகம்மது ஓர் இறைத்தூதரே ஆனாலும், இதுவும் வலிய வந்த யுத்தமே ஆனாலும் இந்தப் போரில் முஸ்லிம்கள் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தத்தில் முகம்மது நபியே வாளேந்தி, கலந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படியும் முஸ்லிம்கள் இதில் தோல்வியே அடைந்தார்கள்.

மூன்றாவது யுத்தமான ஹுனைன் போருக்குக் குறைஷிகள் காரணமல்ல. மெக்கா நகரின் குறைஷி இனத்தவரின் ஜென்மப்பகையாளிகளான ஹவாஸின் என்கிற இன்னொரு அரபு இனத்தவர்களே இந்தப் போரின் சூத்திரதாரிகள். குறிப்பாக மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி என்கிற அந்த இனத்தலைவர்.

பத்ரு போரில் குறைஷிகளை முஸ்லிம்கள் வெற்றி கொண்டதிலிருந்தே அவருக்கு ஒரு பதற்றம் இருந்தது. தங்களது பகையாளிகள் என்றாலும், குறைஷிகள் பெரிய வீரர்கள். அவர்களையே போரில் வெற்றி கொண்டவர்கள் என்றால், முஸ்லிம்களைச் சாதாரணமாக எண்ணிவிடமுடியாது. நாளைக்கு இந்த முஸ்லிம்கள் நம்மையும் தாக்கினால் என்னாவது என்கிற தீவிர முன் ஜாக்கிரதை உணர்வுடன் தாமாகவே வலிந்து தம் இனத்தவரைத் திரட்டி, தோழமையான பிற சாதியினரையும் உடன் இணைத்துக்கொண்டு முஸ்லிம்களுடன் யுத்தம் செய்யக் கிளம்பினார் மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி.

உமர் எழுதியது:

இவைகள் பற்றி தேவைப்படும் போது தனிக்கட்டுரையாக பார்ப்போம்.

பாரா அவர்கள் எழுதியது:

ஒரு முழு நாள் நடந்த இந்த யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.இந்த மூன்று யுத்தங்கள்தான் முகம்மது நபி உயிருடன் இருந்த காலத்தில் முஸ்லிம்கள் கலந்துகொண்ட யுத்தங்கள். இவை தவிர உஷைரா யுத்தம், அப்வா யுத்தம், சவீக் யுத்தம், சஃப்வான் யுத்தம், துமத்துல் ஜந்தல் யுத்தம், தபுக் யுத்தம், ஜாத்துர் யுத்தம், நுலைர் யுத்தம் என்று ஏராளமான யுத்தங்கள் நடந்ததாக மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் சொன்னாலும் இந்த யுத்தங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. சில சந்தர்ப்பங்களில் யுத்த மேகங்கள் சூழ்ந்தது உண்மையே. ஆனால் பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் யுத்தம் தவிர்க்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும் சில யுத்தக்களங்களில் முகம்மது நேரில் கலந்துகொள்ள வருகிறார் என்று கேள்விப்பட்டு, யுத்தம் செய்ய வந்தவர்கள் பின்வாங்கிப் போனதாகவும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

உமர் எழுதியது:

மூன்று யுத்தங்களைத் தவிர, இதர யுத்தங்கள் ஆதாரமில்லாதவைகளா? அவைகள் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் புனைந்த பொய்யான விவரங்களா?

அப்படியானால், ரஹீக் புத்தகத்தை என்ன செய்வது? 

முஸ்லிம்களின் நண்பன், இஸ்லாமை கக்கும் காவலன் மற்றும் எழுத்தாளனாகிய பா. ராகவன் சொல்கிறேன், “முஸ்லிம்களே, ரஹீக் புத்தகத்தை குப்பையில் போட்டுவிடுங்கள், ஏனென்றால், அதில் 50க்கும் அதிகமான போர்களை முஹம்மது புரிந்தார் என்ற பொய் சொல்லப்பட்டுள்ளது, இது மேற்கத்திய சரித்திர ஆசிரியர்களின் சூழ்ச்சி மற்றும் யூதர்களின் கைவேலை” என்று ஒரு அறிக்கையை முஸ்லிம் சமுதாயத்துக்கு நீங்கள் கொடுக்கமுடியுமா?

அது எப்படி என்னால் இப்படி அறிக்கையிடமுடியும்? என்று கேட்பீர்களானால், மேற்கண்ட பத்தியில் நீங்கள் எதை எழுதியுள்ளீர்கள், இதைத்தானே! உங்களின் மேற்கண்ட பத்திக்கும், மேலேயுள்ள அறிக்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கருதுகிறீர்கள்?

[முஸ்லிம்களே! ரஹீக் புத்தகத்தை குப்பையில் போடுவதற்கு முயலாதீர்கள், அப்படி செய்வீர்களானால், அந்த புத்தகத்தோடு கூட புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ்களையும், குர்-ஆனையும் நீங்கள் குப்பையில் போடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். ஏனென்றால், ரஹீக் புத்தகத்தில் பல நூறு மேற்கோள்கள் ஹதீஸ்கள் மற்றும் குர்-ஆனிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.]

பாரா அவர்கள் எழுதியது:

முகம்மது நபி ஒரு சிறந்த போர் வீரரா, யுத்த தந்திரங்கள் அறிந்தவரா என்பது பற்றிய போதுமான ஆதாரங்கள் ஏதும் நமக்குக் கிடைப்பதில்லை.

உமர் எழுதியது:

இதை உங்களுக்குச் சொன்னவர் யார்?  அப்படி எத்தனை இஸ்லாமிய சரித்திர நூல்களை படித்து கிழித்துவிட்டீர்கள் என்றுச் சொல்லி இப்படி எழுதுகிறீர்கள்?

போங்கைய்யா! போய் ஹதீஸ்களை படிங்கையா? சுன்னி முஸ்லிம் பிரிவுக்கு 6 ஹதீஸ் தொகுப்புக்கள் உள்ளன. ஷியா பிரிவு ஹதீஸ்களை படிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. சுன்னி பிரிவு நூல்களை படிங்கைய்யா? ரஹீக் புத்தகத்தை படிங்கைய்யா! இப்னு இஷாக்கின் சரித்திரத்தை படிங்கைய்யா!

முஹம்மது ஒரு சிறந்த யுத்த வீரரா? அவருக்கு போர்த் தந்திரங்கள் தெரியுமா? போன்றவைகளை அறிவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று பாரா சொல்கிறாரே! இந்த அநியாயத்தை [தட்டிக்]கேட்க முஸ்லிம்களில் யாருமில்லையா!

பாரா அவர்கள் எழுதியது:

ஆனால் மக்கள் செல்வாக்குப் பெற்ற ஒரு பெருந்தலைவராக அவர் இருந்தபடியால் இயல்பாகவே அச்சம் கலந்த மரியாதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் இருந்திருக்கிறது

உமர் எழுதியது:

இப்படி வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம், அச்சம் 99%, மரியாதை 1%.

வாசகர்கள் நன்றாக கவனிக்கவேண்டும். யாருக்கு “அச்சம் கலந்த மரியாதை” இருந்ததாம்? “எதிரிகளுக்கு” இருந்ததாம்.  முஹம்மதுவின் எதிரிகள், அவரை எப்படி தீர்த்துக்கட்டலாம், அவர் எப்போது மண்டையை போடுவார் என்று காத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு இவர் மீது எப்படி மரியாதை இருக்கும்? கவிதைக்காக பொய் சொல்லலாம், சரித்திரம் பற்றி எழுதும் போதும் பொய் சொல்லவேண்டுமா?

பாரா அவர்கள் எழுதியது:

அதே சமயம், முகம்மதின் தோழர்கள் பலர் மாபெரும் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னாளில் கலீஃபாக்களான உமர், அலி போன்றவர்கள், போர்க்களங்களில் காட்டிய வீரத்துக்காகவே இன்றளவும் நினைக்கப்படுபவர்களாக இருந்திருக்கிறார்கள். (முகம்மது நபியின் காலத்துக்குப்பின் நடந்த யுத்தங்கள் பிறகு வரும்.)

உமர் எழுதியது:

ஓ… உமர் மற்றும் அலி போன்றவர்கள் தாங்கள் போர்க்களங்களில் புரிந்த வீரத்துக்காகத் தான் நினைக்கப்படுகிறார்களா, அவர்களின் நன்னடத்தைக்காக இல்லையா?

முஹம்மது மூன்று போர்கள் மட்டும் செய்தார்கள் என்று மார்தட்டும் பாரா அவர்களே, அவரது தோழர்களாகிய அபூ பக்கரும், உமரும், அலியும் ஏன் போர் செய்தார்கள்? அவர்களுக்கு போர் செய்யவேண்டிய அவசியம் வந்திருக்கவேண்டியதில்லையே? அவைகள் பற்றி நீங்கள்  எழுதும் போது, நாம் அவைகளை ஆய்வு செய்வோம்.

பாரா அவர்கள் எழுதியது:

இவை ஒருபுறமிருக்க, தொடர்ந்து போர் அச்சுறுத்தல்களும் நிம்மதியின்மையும் இருந்துகொண்டே இருந்ததால் மதினாவில் நிரந்தர அமைதிக்கான ஓர் ஏற்பாட்டைச் செய்யவேண்டிய கட்டாயம் முகம்மதுவுக்கு ஏற்பட்டது. மதத்தலைவராக அல்லாமல், ஓர் ஆட்சியாளராக இதனைச் செய்யவேண்டிய கடமை அவருக்கு இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முகம்மது ஓர் உபாயம் செய்தார். மெக்காவிலிருந்து அவருடன் மதினாவுக்கு வந்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும், மதினாவாழ் மக்கள் தம் உறவினராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதாவது, முகம்மதுவுடன் மெக்காவிலிருந்து வந்த ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் குழந்தையையும், ஒவ்வொரு மதினாவாசியும் தம் உறவினராக மானசீகமாக சுவீகரித்துக்கொள்வது. இதன்மூலம் மெக்கா முஸ்லிம்களுக்கும் மதினா முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏதும் உண்டாகாது. பொது எதிரி யாராலாவது பிரச்னை வந்தாலும் இரு தரப்பினரும் இணைந்தே எதிர்கொள்வார்கள்.

உமர் எழுதியது:

பாரா அவர்களே! இந்த ஏற்பாட்டை முஹம்மது மதினாவிற்கு சென்றவுடனேயே செய்துள்ளார், நீங்கள் சொல்வது போல, பல ஆண்டுகளுக்கு பிறகு அல்ல.

பாரா அவர்கள் எழுதியது:

அடுத்தபடியாக மதினாவாழ் யூதர்கள். முன்பே பார்த்தபடி அன்றைக்கு மதினாவில் யூதர்கள் அதிகம் வசித்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் மெக்கா முஸ்லிம்களும் மதினா முஸ்லிம்களும் இணைந்தபோது அவர்களின் பலம், யூதர்களின் பலத்தைக் காட்டிலும் அதிகரித்துவிட்டிருந்தது. ஆகவே முகம்மது நபி, மதினாவில் வசிக்கும் யூதர்கள், அங்குள்ள முஸ்லிம்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும்; ஒருத்தருக்கொருத்தர் உதவிகள் செய்துகொண்டு வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வெறும் வேண்டுகோள் அல்ல அது. ஓர் அதிகாரபூர்வ அரசு அறிக்கையே வெளியிட்டார். அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் உரிமைகள் குறித்தும் அவர்களது சுதந்திரம் குறித்தும் திட்டவட்டமான ஷரத்துகள் இடம்பெற்றிருந்தன.

"நமது குடியரசில் தம்மை இணைத்துக்கொள்ளும் யூதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்கள் முஸ்லிம்களுக்குச் சம உரிமை படைத்தவர்களாவார்கள். யூதர்கள் தமது மத வழக்கங்களைப் பின்பற்றி வாழ எந்தத் தடையும் இல்லை. அனைத்து இனக்குழுக்களையும் உள்ளடக்கிய மதினாவாழ் யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து உருவாக்குகிற தேசம் இது."

"முகம்மது நபி, ஓர் ஆட்சியாளராக, அதிகாரபூர்வமாக வெளியிட்ட முக்கியமான முதல் அறிக்கை இது.

உமர் எழுதியது:

இந்த அறிக்கையை எப்போது முஹம்மது கொடுத்தார்? இதனை நீங்கள் எந்த இஸ்லாமிய மூல  நூலிலிருந்து எடுத்தீர்கள் என்று ஆதாரத்தை காட்டமுடியுமா?

யூதர்கள், அரேபிய தீபகர்ப்பத்தில் இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டவர் முஹம்மது. மேற்கண்ட உம்முடைய வரிகளுக்கு ஆதாரங்களை கொடுங்கள் பார்க்கலாம். 

முஸ்லிம்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் சம உரிமையா? இது சாத்தியமா என்று முதலில் தற்கால முஸ்லிம்களிடம் கேட்டுப்பாருங்கள். அவ்வளவு ஏன், சௌதி அரேபியாவில் “முஸ்லிமல்லாத ஒருவர்” முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் சம உரிமைகளோடு வாழ முடியுமா? என்பதை கேட்டுப்பாருங்கள், உண்மை புரியும்.

பாரா அவர்கள் எழுதியது:

முகம்மது நபிக்குப் பின்னால் வந்த கலிஃபாக்களோ, சரித்திரத்தின் வழியெங்கும் பின்னால் உலகெங்கும் ஆண்டு மறைந்த எத்தனையோ பல முஸ்லிம் மன்னர்களோ, சக்ரவர்த்திகளோ இந்தளவுக்கு மத நல்லிணக்கத்துடன் ஓர் அறிக்கை வெளியிட்டதில்லை. குறிப்பாக, யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள் அதுநாள் வரை வாழ்ந்த அடிமை வாழ்வுடன் ஒப்பிடுகையில், முகம்மதுவின் இந்த அறிக்கைப் பிரகடனம், அவர்களாலேயே நம்ப முடியாதது.

உமர் எழுதியது:

பாரா அவர்களே ஒரு நிமிஷம் கவனியுங்கள். உங்களுடைய கீழ்கண்ட வரிகளில் யூதர்கள் மதினாவில் அடிமைகளாக வாழ்ந்ததாக சொல்கிறீரே, இதனை எங்கேயிருந்து எடுத்தீர்கள்?

யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள் அதுநாள் வரை வாழ்ந்த அடிமை வாழ்வுடன் ஒப்பிடுகையில்

மதினாவில் செல்வந்தர்களாக, பலமுள்ளவர்களாக இருந்தவர்கள் யூதர்கள் என்று சரித்திரம் சொல்கிறது, நீங்களும் இதனை சில இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்போது புதிதாக, “யூதர்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்தார்கள்” என்றுச் சொல்கிறீர்களே?  

மதினாவில் யூதர்கள் முஹம்மதுவின் காலத்தில் அடிமைகளாக வாழ்ந்தார்களா? மதினாவில் அவர்களை விடுவிக்க வந்த இரட்சகரா முஹம்மது? அல்லது அவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்பிய எமதர்ம ராஜாவா?  என்ன எழுதுகிறீர்கள்? நீங்கள், பக்கத்துக்கு பக்கம் முரண்பட்டு எழுதுவது ஏன்?

பாரா அவர்கள் எழுதியது:

இந்த அறிக்கைக்குப் பிறகு, முகம்மது எதிர்பார்த்தபடி மதினாவாழ் யூதர்கள் அங்கிருந்த முஸ்லிம்களுடன் நல்லுறவைத் தொடர்ந்திருப்பார்களேயானால், பின்னாளில் உறங்க ஒரு நிலமில்லாமல் உலகெங்கும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கவே வேண்டியிருந்திருக்காது என்று தோன்றுகிறது. வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றியே யூதர்களுக்கான தனி தேசம் சாத்தியமாகியிருக்கலாம்.

உமர் எழுதியது:

மன்னிக்கவேண்டும் பாரா அவர்களே, உங்களுக்கு உண்மையான இஸ்லாமின் சரித்திரம் 1% கூட தெரியவில்லை என்பது உண்மையாகிவிட்டது. 

இஸ்லாமின் அடிப்படை கொள்கை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?  உலகெங்கிலும் இஸ்லாமிய ஆட்சி நடைப்பெறவேண்டும், முஸ்லிமல்லாதவனின் ஆட்சியோ, மதமோ, ஜனநாயகமோ இருக்கக்கூடாது. இதை நோக்கியே, அன்று முஹம்மது செயல்பட்டார், வலியச்சென்று நாடுகளை பிடித்தார், அவருக்கு பிறகு, அவரது தோழர்களாகிய கலிஃபாக்களும் நாடுகளை பிடித்தார்கள். இவர்களது அடிச்சுவடிகளில் அல்கெய்தாவும், ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களும் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

பாரா அவர்கள் எழுதியது:

ஏனெனில், கலீஃபா உமரின் காலத்தில் முதல்முதலாக ஜெருசலேத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியபோது, மதினாவில் முகம்மதுநபி யூதர்களின் உரிமைகளாக எதையெதையெல்லாம் வகுத்தாரோ, அதையெல்லாம் அப்படியே கடைப்பிடித்தார்கள். யூதர்களும் முஸ்லிம்களும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்தான் என்பதைத் தமது பல்வேறு நடவடிக்கைகளின்மூலம் அழுத்தந்திருத்தமாக எடுத்துக் காட்டி, யூதர்களின் சுதந்திரத்துக்கு எவ்வித இடையூறும் கூடாது என்று உமர் வலியுறுத்திச் சொன்னார். தங்களது சுதந்திரம் என்பது, தனியான யூததேசம்தான் என்பதை அன்று அவர்கள் உமரிடம் எடுத்துச் சொல்லியிருந்தால்கூட ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம்.

மாறாக, முஸ்லிம்களின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு, அந்த ஆட்சிக்கு உட்பட்ட அளவில் சுதந்திரமாக வாழ்வதாக ஒப்புக்கொண்டு, பின்னால் மறைமுகமாகச் சதித்திட்டங்கள் தீட்டத் தொடங்கியபோதுதான் யூதர்களின் இருப்பு பிரச்னைக்குள்ளானது.

எப்போதும் புத்திசாலித்தனமான செயல்பாடுகளுக்குப் பேர்போன யூதர்கள், அந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் ஏன் அப்படியரு முட்டாள்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்கிற கேள்விக்கு விடையில்லாததுதான் சரித்திர வினோதம்.

உமர் எழுதியது:

பாரா அவர்களே, யூதர்களின் உரிமைகளுக்கு உமர் குரல் கொடுத்தார் என்று சொல்வதற்கு முன்பாக, ஏன் உமர் ஜெருசலேமை பிடித்தார் என்றுச் சொல்லுங்களேன்?  இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றுச் சொன்னால், உமர் அவர்கள், மதினாவில் ஆட்சியை செய்துக்கொண்டு, உலகமெல்லாம் “இஸ்லாமை பிரச்சாரம் முலமாக பரப்புவதற்கு” ஆட்களை அனுப்புவதை விட்டுவிட்டு, ஏன் நாடுகளை பிடிக்க இராணுவத்தை அனுப்பினார்?  

முஹம்மதுவிற்கு பிறகு வந்த நான்கு கலிஃபாக்களும் என்ன செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? மதினாவில் நல்லாட்சி செய்துக்கொண்டு இருந்தார்களா? அல்லது அக்கம் பக்கத்து நாடுகளை பிடிக்க இராணுவங்களை அனுப்பினார்களா?

மண்ணாசை, பொன்னாசை மற்றும் பெண்ணாசை இம்மூன்றும் ஒன்றாக சேர்ந்த கலவை தான், இஸ்லாம் என்பதற்கு முஹம்மதுவின் மதினா வாழ்க்கையும், கலிஃபாக்களின் ஆட்சிகளும் சிறந்த உதாரணங்களாகும்.

முடிவுரை:

பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 20ம் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட பொய்யான விவரங்களுக்கு பதில்களை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 

இந்த ஒரு அத்தியாயத்தில் மலையளவிற்கு பாரா அவர்கள் பிழைகளை செய்துள்ளார் என்பதை விளக்கினோம். குர்-ஆனையும், ஹதீஸ்களையும், இஸ்லாமிய சரித்திர நூல்களையும் படிக்காமல், பாரா அவர்கள் இஸ்லாம் பற்றி எழுத ஆரம்பித்தது, பல் போன கிழவன் கரும்புத் தின்ன ஆசைப்பட்டதற்கு சமமாகும்.  இது ஒரு புறமிருக்க, ரஹீக் என்ற ஒரு புத்தகத்தை படித்து, அந்த புத்தகத்துக்கு எதிராகவே பாரா அவர்கள் எழுதியது ’முஸ்லிம்களால் கூட ஜீரணித்துக் கொள்ளமுடியாத செயலாகும்”.  

முஹம்மது 50க்கும் அதிகமான போர்களை செய்தார் என்று ரஹீக் புத்தகத்தில் கொட்டை எழுத்தில் ஆதாரங்களோடு எழுதியிருந்தால், பாரா அவர்கள் வெறும் மூன்று தான் சொல்கிறார். ஆய்வு என்ற பெயரில் மடமையை வெளிப்படுத்தும் எழுத்தாளர்கள் இருப்பார்கள் என்பதற்கு பாரா அவர்கள் ஒரு சிறந்த உதாரணம் என்றுச் சொல்வதை விட வேறு என்ன சொல்லமுடியும்?!

இதோடு நிலமெல்லாம் இரத்தத்தின் 20ம் அத்தியாயத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு, அடுத்தடுத்த அத்தியாயங்களுக்குச் செல்வோம்.  இன்னும் முஸ்லிம்களை திருப்திபடுத்த பாரா அவர்கள் அவ்வத்தியாயங்களில் என்னென்ன எழுதியிருக்கிறாரோ!


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்