குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்
குர்-ஆனில் காணப்படும் அனேக நிகழ்ச்சிகள், பைபிளில் காணப்படும் நிகழ்ச்சிகளின் மறுபதிவுகளாகும். பைபிளின் கதைகளை குர்-ஆனில் பதிக்கும் போது, சில ஒற்றுமைகளையும், அனேக வேற்றுமைகளையும் காணமுடியும். சில விவரங்கள் பைபிளில் சொல்லப்பட்டது போலவே குர்-ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது, ஆனால், அனேக இடங்களில் அனேக விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது, இன்னும் சில விவரங்கள் பைபிளில் காணப்படுவதற்கு எதிராக மாற்றி சொல்லப்பட்டுள்ளது. இந்த பக்கங்களில் ”குர்-ஆன் மறுபதிவு செய்துள்ள பைபிளின் நிகழ்ச்சிகளை குர்-ஆன் வசனங்களிலிருந்து காண்போம்”. ஏற்கனவே பைபிளின் நிகழ்ச்சிகளை அறிந்துள்ள ஒரு கிறிஸ்தவருக்கு, இந்த பட்டியல் மிகவும் உபயோகமாக இருக்கும். இவைகளை படிக்கும் போது, பைபிளின் நிகழ்ச்சிகளை குர்-ஆன் எப்படி (மாற்றிச்) சொல்கிறது என்பதை அறிந்துக் கொள்ளமுடியும்.
இந்த கட்டுரையில் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை மட்டுமே கருத்தில் கொண்டு குர்-ஆனிலிருந்து வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளோம். இன்னும் புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய குர்-ஆன் மறுபதிவு வசனங்களை கூடிய சீக்கிரத்தில் கட்டுரையாக வெளியிடுவோம். அவைகளில் யோவான் ஸ்நானகன், மரியாள், இயேசு மற்றும் அவரது சீடர்கள் பற்றிய நிகழ்ச்சிகள் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
- சகரியா
- யோவான் ஸ்நானகன்
- மரியாள்
- இயேசு
- இயேசுவின் சீடர்கள்
ஆங்கில மூலம்: Biblical Stories in the Qur'an